Translate

Tuesday, 29 December 2020

பாரதம் விடுதலை அடைந்தபின் விஸ்வகர்ம இனம் அடைந்த நிலைகள்

 பாரதம் விடுதலை அடைந்தபின் விஸ்வகர்ம இனம்           அடைந்த நிலைகள்

  ஐந்து மடங்கள் என்னும்  நூலில் ஓசூர் மா.பழனிச்சாமி அருள்நிதி அவர்களால் விஸ்வகர்ம பிராமணர்களை பற்றி ஆய்வு செய்தவற்றை வருத்தத்துடன் பதிவிடுகிறோம்

தமிழ்நாட்டில் விஸ்வகுல மடங்களின் ஆதி ஆய்வு நூல் : ஒன்றுமில்லாத ஒரு சூன்யம் , வெற்றிடத்திலிருந்து திடீரென்று ஒரு நாள் பிரபஞ்சம் தோன்றியது . சூரியன் , சந்திரன் , நட்சத்திரங்கள் தோன்றி செயல்பட்டன . பூமி என்ற கோளும் இவ்வாறே தோன்றியது . ஒலி , ஒளி , மணம் , சுவை , நிறம் அனைத்தும் " அழுத்தம் ” என்ற பௌதீகப் பரிமாணத்தின் வித்யாசனத்தினால் ஏற்பட்ட பரிணாம மாறுதலால் பூமி தோன்றியது . உயிரினங்கள் தோன்றின . உயிரினங்கள் வாழ்ந்து மகிழ்ந்து இனப்பெருக்கம் செய்ய எல்லா வசதிகளும் பூமியில் இருந்தன . 

ஆகவே காலப்போக்கில் , ஓர் அறிவு , ஈரறிவு , மூவறிவு , நான்கு அறிவு , ஐந்து அறிவு என்று தம் சுய உந்தலில் வளர்ச்சியடைந்த பல உயிரினங்கள் , வளர்ந்து வாழ்ந்தன . இவ்வுயிரினங்களுக்கு தம் பிறப்பின் மூலத்தை அறிந்து நினைந்து நன்றி கூறும் அறிவுத்திறன் இல்லை . பிரபஞ்சமும் , பூமியின் இயற்கை வளமும் , சக்தியும் என்றும் நீடுழி நிலைக்க வேண்டுமானால் , இந்த நன்றி கூறுதல் என்ற பகுத்து அறியும் - பகுத்தறிவு தேவை என்ற தேடலுக்கு விடையாக ஆறு அறிவுள்ள மனித ஜீவராசியும் பூமியில் தோன்றினர் .

 விலங்கின வாசத்திலிருந்து , சற்றே சிந்தித்து வாழ முற்பட்ட மனித இனத்தில் , உலகில் முதலில் தோன்றியது இரும்புக் கருவியைப் பயன்படுத்தி பூமியைக் கீறி பயிர் செய்து உண்டு வாழ்வதற்கு வழி செய்த யுக்தி . சூரியன் , சந்திரன் , மின்னல் , ஒலி , ஒளி , மழை , காற்று என்று இயற்கையை நேசித்தும் இயற்கையின்  சீற்றத்துக்குப் பயந்தும் வாழ்ந்த ஆதிமனிதன் அப்பயத்தினால் , மரியாதையினால் , சூரியன் , சந்திரன் , நட்சத்திரங்கள் , நெருப்பு , நீர் , பயிர் விளையும் பூமி , சுவாசிக்கும் காற்று என்று இயற்கையைப் போற்றி , நம்பிக்கையின் அடிப்படையில் , தலை வணங்கி வழிபட ஆரம்பித்தான் . மனிதனின் புற உறுப்புகளின் சுகம் தேடலுக்கு உருவ வழிபாடு ( கட்டிப்பிடித்து உறவாட ) என்ற போக்கில் முதலில் தோன்றியது ஒரு உருவம் . தம் பிறப்புறுப்புக்கு ஒத்திருக்கவே அதை “ லிங்கம் ” என்று அடையாளம் செய்தான் . ஒலி , ஒளியிலிருந்து பேசும் மொழிப் பழக்கம் உருவான நாகரீகம் , சந்தித்த சவால் , பெருகி வரும் மனித இனப்பெருக்கம் ஆறாவது அறிவையும் வைத்துக்கொண்டு , பெருகி வரும் மனித இனக்கூட்டம் , இந்தப் பிரபஞ்சத்தின் , இயற்கை சக்தியையும் , ஒழுக்கத்தையும் அரவணைத்து , இயல்போடு இசைந்து வாழ்வது அவசியம் என்று ஒரு சில அறிவு ஜீவிகளுக்குத் தோன்றியது . 

அப்படி ஒரு முறையான வாழ்க்கை வாழ்ந்து மனித இனம் இப்பூமியில் மேன்மையுற , “ வாழும் முறை ” என்ற ஒழுக்க விதிகளாகப் பிறந்தது தான் வேதம் . அதாவது வேதம் என்பது இயற்கையோடு இசைந்து வாழ்ந்து மனித இனம் மேன்மையுறும் வாழும் கலைக் குறிப்புகள் , வழிகாட்டியே வேதம் . அக்காலத்திலேயே , தம் சுய ஒழுக்கத்தினால் , இயற்கை சக்தியின் முழு ஆதரவு ( ஆசீர்வாதம் ) என்ற உதவியினால் , பிறர் நலனுக்காகத் தம்மை வருத்திக் கொண்டு வாழ்ந்த மூதறிஞர்கள் , ஞானிகள் , யோகிகள் , முனிவர்கள் , ரிஷிகள் , தவசிகள் என்று பலவாறும் குறிப்பிடப்படுகின்ற பெரியவர்கள் சொல்லிச் சென்ற கருத்துக்களே வேதமாயிற்று . வேதவியாசர் , கிருஷ்ணபகவான் , அசோகசக்ரவர்த்தி , கௌதமபுத்தர் , மனு , சாண்டில்யன் , திருவள்ளுவர் என்று பின்னாளில் வேதத்தின் சாரம் எழுத்து வடிவில் இதிகாசம் , புராணம் , உலக நீதி போதனை என்று உருப்பெற்றன . வேதக் கருத்துக்கள் வாழ்வுக்கு வழிகாட்டும் , போதனை என்று வேரூன்றி நிற்கத் துவங்கின .

                     பூமியில் முதலில் தோன்றிய மனிதன் கல் , இரும்பைப் பயன்படுத்தினான் . முதலில் தோன்றிய உருவ வழிபாட்டுச் சின்னம் “ லிங்கம் ” என அழைக்கப்பட்டது . பூமியில் மனிதன் முதலில் தோன்றிய இடம் “ லெமோரியா ” என்ற பண்டைய குமரிக்கண்டம் என்ற கருத்துக்களை உலகம் முழுவதுமுள்ள எல்லா மத  இனத்தவரும் , அறிவாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது உண்மை . இந்நிலையில் தான் ரிக்வேதம் , யஜீர்வேதம் , சாமவேதம் , அதர்வணவேதம் என்ற நான்கு வேதங்களின் சாராம்சம் மையக் கருத்துக்ளை நோக்கும்போது சூனியத்திலிருந்து தோன்றிய அருள் / தெய்வீக சக்தி என்பதை மையப்படுத்தி , அதன் உயர்வை நிலைநாட்டி எல்லா மனித இனமும் அன்று முதல் இன்று வரையிலும் , வேதமும் இப்பூமியும் நிலைக்கும் வரையிலும் , உண்மையைப் பறைசாற்றும் விதமாகக் கீழே கண்ட வாசகங்கள் அமைந்துள்ளன என்பதைச் சரியாகப்புரிந்து கொள்வது அவசியமாகிறது . ( இதில் மாற்றுச் சிந்தனைக்கு இடமேயில்லை ) 

          “ நபூமி நசலம் சைவ , நசித்தஞ்சக் ராண கோசர ,

            நசப் ரஹ்மாந விஷ்ணு ஸ்ச்ச நசருத்ரஸ் சதார

           சூன்ய நிராலம்பஸ் வயம்பூ விஸ்வகர்மண : " ( மே -1 )

 மூலஸ்தம்பத்திலுள்ள இந்த சுருதி வாக்கியத்தால் , பூமியும் , நீரும் , நெருப்பும் , வாயுவும் பிரகாசமும் , ஆகாயமும் , நட்சத்திரங்களும் , பிரம்மா , விஷ்ணு , ருத்திரனும் இன்னும் பிறவும் என்று ஒன்றுமில்லாத சர்வ சூன்யமாயிருந்த காலத்தில் சுயம்பு விராட் விஸ்வப்பிரம்மாவே ஜோதிஸ்வரூபமாய் இருந்தார் . இந்த சொரூபத்திலிருந்து நெருப்பில் சூடு போன்றும் , எள்ளில் எண்ணெய் போன்றும் தன்னிடமுள்ள பரை என்னும் சக்தியின் சேர்க்கை விசேஷத்தினால் ஐந்து முகவிஸ்வகர்மாவாகத் தோற்றம் கொண்டார் என்பதே பொருள் . 

அதாவது விஸ்வகர்மா வெனும் ( விஸ்வம் உலகம் , கர்மா ஆக்கும் தொழில் சக்தி ) பரம்பொருளின் பிரபஞ்ச சிருஷ்டியின் சிறப்புக் கூறப்பட்டுள்ளது . ரிக் , வேதம் , கிருஷ்ணயஜீர் வேதம் , யஜீர்ஸம்ஹிதையிலுள்ள வேத வாக்கியங்களால் இப்பிரபஞ்ச உற்பத்திக்கு மூலகாரணமான கடவுள் இறைவன் ஸ்ரீவிஸ்வகர்மாவாகிய பரப்பிரம்மம் என்றும் , அவர் நித்தியர் என்றும் வேதநூல்கள் கூறு கின்றன . ( மே 1 ) .

 விஸ்வகர்மாவின் ஐந்து முகங்களும் , பிற்கால ஐந்தொழிலாளர்களும் : 

சத்யோ ஜாதகம் எனும் கிழக்கு முகத் தியானத்தால் அறிவுவிளக்கம் மிகுந்த சானகரிஷி தோன்றினார் . ரிக் வேதத்தால் துதிக்கப்படுகிறார் . 

வாமதேவம் எனும் தெற்கு முக தியானத்தால் சனாதனரிஷி தோன்றினார் . யஜீர் வேதத்தால் துதிக்கப்படுகிறார் . 

அகோரம் எனும் மேற்கு முகத் தியானத்தால் அஹபுவனஸரிஷி தோன்றினார் . சாமவேதத்தால் துதிக்கப்படுகிறார் . 

தத் புருஷம் எனும் வடக்கு முகத் தியானத்தால் பிரத்னசரிஷி தோன்றினார் . அதர்வண வேதத்தால் துதிக்கப்படுகிறார் . 


ஈசானம் எனும் ஆகாயத்தை நோக்கிய முகத் தியானத்தால் சுபர்னஸரிஷி தோன்றினார் . பிரணவ வேதத்தால் துதிக்கப்படுகிறார் . 

இவர்கள் முறையே மனு , மய , துவஷ்ட , சிற்பி , விஸ்வக்ஞ விஸ்வகர்மாவாயினர் . இவர்கள் தமது அற்புதத் தொழில்களினால் புகழ்பெற்றும் , உலகில் எல்லாப் பொருள்களையும் ஜீவ , பாவம் உடையதாக உற்பத்தி செய்து வாழ்ந்தார்கள் . அதாவது ஐந்து வகையான கைத்தொழிலையும் கொல்லுவேலை ( இரும்பு ) மரவேலை ( தச்சர் ) பாத்திர உலோகவேலை துவஷ்ட , சிற்பவேலை ( சில்பி ) பொன் வேலை ( தட்டார் ) என்று மற்றைய ஏனைய உலக மக்களின் வாழ்வாதார அடிப்படை வேலைகளைச் செய்து தெய்வ அருளோடும் , கலை நயத்தோடும் , மக்கள் வாழும் பொருட்டு கம்மாளர்களாக ( கண்ணால் அளப்பவர் கம்மாளர் ) படைப்புத் திறனாளிகளாக மாறி பிறர் நன்மைக்காக வாழும் இனமாக மாறினர் .

 பல ஆயிரம் நூறாண்டுகளாக வேதம் ஓதுதல் , வேதம் கற்றல் , வேதம் சொல்லிக் கொடுத்தல் என்ற வேத பூர்வமான பழக்கத்துடன் தினசரி சந்தியா வந்தனம் , அமாவாசை தர்ப்பணம் வருடாந்திர திதி , குடும்பம் , உறவினர்கள் வீடுகளில் கல்யாணம் , காதுகுத்து , உபநயனம் , கோவிலில் பூசை முறை என்ற அனைத்து ஆகம நியமனங்களையும் தெரிந்தும் , செய்து கொண்டும் அத்தோடு தத்தமது குலத்தொழில் கைத் தொழிலையும் சேர்த்து பார்த்து வந்தார்கள் .

 கி.பி .1930 , 1950/1960 வரையிலும் கூட இப்படி வேத ஒழுக்கமும் , கலையும் , கைத்தொழிலும் , இணைந்த வாழ்வு வாழ்ந்த , விஸ்வகர்மாக்களை இந்தியாவில் காணமுடிந்தது . மன்னர்கள் காலத்தில் அரசன் , ஜமீன்தார் , குறுநிலமன்னன் என்பவர்களுக்கு ஆன்மீகக் குருவாக , ஆட்சிமன்றத்தில் ஆலோசகராக ஆதினகர்த்தாவாக , மடாதிபதியாக மதபோதகக் குருவாக வாழ்ந்து காட்டிய விஸ்வகுலப் பெரியவர்கள் அதிக எண்ணிக்கையிலிருந்தனர் .

 முகலாயர் , ராஜபுத்திரர் , மௌரியர் , மராட்டியர் , விஜயநகர வம்சத்தினர் கர்நாடக உடையார் பரம்பரை , பல்லவர் , சேர , சோழ , பாண்டிய , மார்த்தாண்ட மருதுபாண்டியர் என்றவர் காலத்தில் விஸ்வ பிராமணர் என்றால் வேதொழுக்கம் தெரிந்தவர் , கலைநயம்மிக்க கம்மாளர் , ஊர் தர்மகர்த்தா என்று தான் போற்றப்பட்டனர் . இந்தியாவை அடிமைப்படுத்தி காலனி ஆதிக்கம் செய்த வெள்ளையர்கள் பிரிட்டிஷார் காலத்து 200-300 ஆண்டு கால ஆட்சி தான் , இந்திய விஸ்வபிராமணரது தனிப்பெரும் உயர்வை சிறப்பைச் சீர்குலைய வைத்தது . இந்திய குடியரசு சட்டஅமைப்பு , இயந்திரமயமாக்கம் , தொழிற்புரட்சி , தங்கங்கட்டுப்பாட்டுச்சட்டம் , ஆங்கிலேயே அரசு கொண்டு வந்த கல்விக்கொள்கை , மன்னர் ஜமீன்தாரர்களின் உதவியும் இல்லாமல் மதச்சார்பற்ற சுதந்திர இந்தியா என்ற சட்ட அமைப்பும் அதன் செயலாக்கமும் விஸ்வகர்மருக்கு விஸ்வபிராமணருக்குப் புரவலர் தாளாளர் இல்லை , சுயமாகவே நிற்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர் . வறட்சி , போட்டி , மொழிவாரி மாநில வரையறை , மாநில அரசாட்சி , அரசியலில் ஜாதி , மத உணர்வுத்துடிப்பு என்ற போராட்டம் - சமூகநீதி என்ற பெயரில் இடஒதுக்கீடு என்று பல இன்னல்கள் அடுக்காக வேகமாகவந்து கலக்கின .

 எல்லோருக்கும் உதவி செய்து , கூலிவேலை செய்து , பிறர்கையை எதிர்பார்த்து நிற்கும் நிலை மிக வேகமாக வந்து சேர்ந்த கொடூரம் , கிராமம் , ஊர் தோறும் சில குடும்பங்களே போதும் . எனவே வயிற்றுப்பிழைப்புக்காக நாடு முழுவதும் பிரிந்து சிறு சிறு குடும்பக் கூட்டமாக வாழ வேண்டிய சூழ்நிலையில் , தமது சமூகக்கூட்டம் என்ற பலத்தை நிரூபிக்கும் வாய்ப்பையும் இழந்து நிற்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது . 

கல்வி அடிப்படையில் ஆட்டம் : 

வேத ஆகம சாஸ்திரம் குலக்கல்வி , குருகுலவாசம் , திண்ணைப்பள்ளிக்கூடம் தொழில்சார்ந்த பட்டறை , சிற்பச்சாலை , நாணயச்சாலை , ஆயுதப்பட்டறை அனைத்தும் மறைந்த நிலையில் இந்தியா சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் 1935 முதல் 1950 வரையில் ஆங்கிலேயரின் கல்விக் கொள்கையில் டிஸ்டிரிக் போர்டு ஸ்கூல் ( District Board School ) என்ற முறையில் கல்வி போதிக்கப்பட்டது . அச்சமயம் பள்ளிக்கல்விக்கட்டணம் கட்டாயமாக வசூலிக்கப்பட்டது . ( மே .2 ) ஆறாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை தலா ரூ.2-6-0 / மாதம் தோறும் ( ரூ .2 ம் 36 பைசாவும் ) ஒன்பதாம் வகுப்பு முதல் 11 ம் வகுப்பு வரை தலா ரூ.5-3 0 / மாதம் தோறும் ( ரூ .5 ம் 18 பைசாவும் ) சிறப்பு / தனிக்கட்டணம் ஜூன் முதல் டிசம்பர் வரை ரூ .15 / தனிக்கட்டணம் ஜனவரி முதல் மே வரை ரூ .10 / இவ்வளவு கட்டணம் மாணவர்களிடம் வசூலித்தாலும் வாத்தியாருக்கு மாதச்சம்பளம் ரூ .60 / - மட்டுமே . மேலே குறிப்பிட்ட கட்டணத்தொகையை ஓராண்டுக்குக் கூட்டினால் வரும் மொத்த ரூபாயில் அக்காலத்தில் மூன்று பவுன் தங்கம் வாங்கிட முடியும் . 

கல்வி கற்கத்தடை : 

அக்காலத்தில் ஆச்சாரிமார் கூலி ஆறு அணா , பத்து அணா , பன்னிரண்டு அணா , தான் இருந்தது . மிகக் குறைந்த கூலியில் அதுவும் பண்ட மாற்று முறையும் இருந்து வந்த அந்தக்காலத்தில் , ரூபாய் நாணயத்தைக் கண்ணில் காண்பதுவே அரிது . கிடைக்கும் கூலியில் பெரிய குடும்பத்தை வயிராறச் சாப்பாடு போட்டு காப்பாற்றுவதே கடினம் . பலருக்குப் பல வேளை பலநாள் பட்டினி என்பது நடைமுறைப்பழக்கம் . இந்தச் சூழ்நிலையில் இவ்வளவு உயர்ந்த கல்விக்கட்டணம் விதித்தது ஏழை , எளியவர் , தாழ்த்தப்பட்டவர் கல்வி பயின்று அரசு உத்தியோகத்துச் செல்வதற்கு பெரிய தடையாக இருந்தது . உயர்கல்வி வரை இலவசக்கல்வி என்ற திட்டம் 1952 / 57 ம் ஆண்டில் அமலுக்கு வந்த பிறகே கம்மாளரில் பலரும் பள்ளிக்குச் செல்ல முடிந்தது . 

இருப்பினும் 1962-1968ல் தங்கக்கட்டுப்பாடு சட்டமும் வந்து சிரமம் தந்தது . இந்த இடைக்காலத்தில் பிழைப்புக்கு வழி தேடும் , கடும் முயற்சியில் ஆன்மீகம் ஆச்சாரம் , அனுஷ்டானம் என்ற கட்டுக்கோப்பை , வேதந்தழுவிய ஆன்மீக வாழ்க்கை முறையை , ஆச்சாரி இனத்தவர் கை நழுவ விட்டனர் . ஆச்சாரம் குறைந்தது . தொழிலில் இருந்து வந்த ஆன்மீக சக்தியும் குறைந்தது . அதன் விளைவே ஆச்சாரிக்கு சமூகத்தில் அங்கீகாரமும் குறைய ஆரம்பித்தது . இணைகோடு : இரயில் தண்டவாளத்தில் இரண்டுபாதை இணைந்தே ஓடும் . ஒன்றோடு ஒன்று முட்டாது , சேராது . அதுபோல் இதுவரை மேலே கூறிய வரலாற்று நிகழ்வை ஒரு தண்டவாளக் கம்பியாகவும் இனிமேல் கீழே வரும் தகவல்களை மற்றொரு இணைகோடாகவும் கற்பனை செய்து பார்த்துப் படிப்பது நல்ல பலனைத்தரும் .

 அதாவது அந்நியர் படையெடுப்பு பேரரசு , சிற்றரசு , யுத்தங்கள் முகலாயப் பேரரசு , வெள்ளையர்கள் காலனி ஆதிக்கம் ஆங்கிலேயர் கல்விக் கொள்கைத்திணிப்பு , இயந்திரமயமாதல் என்ற கலை , பண்பாடு கலாச்சாரப் பாதிப்புகளுக்கிடையே ( இணைக்கோட்டில் ஒரு கோடு ) இந்து மதம் , கடவுள் சிந்தனை என்ற ஒரே குறிக்கோளோடு வாழ்ந்து கால்பதித்து புகழ் பரப்பிய ஆண்டாள் , ராமானுஜர் , வள்ளலார் , தியாகராசர் , துளசி தாஸர் , பக்தராமதாஸ் , சாயிபாபா , விட்டல்லா , பாம்பன் ஸ்வாமிகள் , விசிறி ஸ்வாமிகள் என்று பல புண்ணியர்கள் நம் நினைவில் நிற்கிறார்கள் . வரலாற்றில் படிக்கிறோம் . 

விளம்பரப்படுத்தப்பட்ட இந்த கீர்த்திமான்கள் வாழ்ந்த இதே காலத்தில் ( இணைக்கோட்டில் மற்றொரு கோடு ) இதே மண்ணில் தான் ஸ்ரீஆதிசிவலிங்கமூர்த்தி , ஸ்ரீவீரவைராக்ய சாமி , ஸ்ரீஅனவரத ஸ்வாமிகள் , ஸ்ரீநீலகண்டாச்சாரி , ஸ்ரீகமலமூர்த்தி ஸ்வாமிகள் , ஸ்ரீமுத்துக்குமார ஸ்வாமிகள் , குடந்தை ஸ்ரீராசரத்தினம் ஸ்வாமிகள் , ஸ்ரீசிவானந்த முனிஸ்வரர் ஸ்வாமிகள் என்று பல ஆச்சார்ய புருஷர்கள் . தவசிலர்கள் வாழ்ந்து காட்டி அற்புதங்கள் பல செய்து இயற்கை எய்தியுள்ளார்கள் .

 ஏனோ இவர்களுக்குரிய சமூக அந்தஸ்து , அங்கீகாரம் சரித்திரத்தில் இடம் என்ற புகழை மறந்துவிட்ட மறைத்துவிட்ட உண்மையை நினைவுபடுத்தி ஆவணப்படுத்துவதே இம்முயற்சி 

முத்தமிழ் சக்கரவர்த்தி மாம்பழக் கவிச்சிங்க நாவலர் அவர்கள் தான் தோன்றிய பஞ்சபிரம்ம விஸ்வகுல பெருமை பற்றி பாடியது . 


“ தார்பூத்த குமுதப் புயத்தர் முந்நூல் 

மார்பர் தனி அனும விருதுமுடையோர் !

 தருமெக்ஞ சீலர் மகுடத் மாந்தை 

விஸ்தாரர் முகில் வாகனத்தோர் !

 சாஸ்தர வேதாகம சமர்த்தர் காயத்ரி 

ஜப சந்நிவந்தன வினோதர் !

 சர்வஜக சிருஷ்டிப் பிரதாபர் 

பஞ்ச பிரம்ம சந்ததிகளான மேலோர் ! 

குமுத மலர்மாலை புனை புயத்தர் , முப்புரிநூல் ( பூணூல் ) அணியும் மார்பர் , அனுமவிருது ( அனுமக்கொடி ) உடையவர் , யாகம் செய்யும் சீலர் , மணிமகுடத்தியாகர் , மாந்தை விஸ்தாரர் , முகில்வாகனத்தர் , சாஸ்திர வேத ஆகமங்களைக் கற்றுணர்ந்த சமர்த்தர் , காயத்திரிஜபம் , சந்நியாவந்தனம் செய்யும் வினோதர் , சர்வஜகத்தையும் , சிருஷ்டி செய்யும் பிரதாபர் , பஞ்ச பிரம்ம சந்ததிகளான மேன்மையுடையோர் .