Translate

விஸ்வகர்ம கொடி




                    விஸ்வகர்மப்பிராமணர்களின் கொடி ஐந்து வர்ணங்களைக் கொண்டது. மனு, மய, துவட்டா, சிற்பி, விஸ்வக்ஞ ஆகிய ஐந்து மூல புருஷர்கட்கும் முறையே வெள்ளை, கருநீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களைக் கொண்டதாகக் கொடி அமைந்தது. இக் கொடி பற்றி ஸ்கந்த புராணம், நகர காண்டத்திலும் மூலஸ்தம்ப நிர்ணயத்திலும் விபரமாக விளக்கப்பட்டுள்ளது. 

மூலஸ்தம்ப நிர்ணயத்தில் 

மனுஸ்படிக வர்ணஞ்ச மயானாம் நீலவர்ணயோ! தவஷ்டருகம் தாம்பரவர்ணஞ்ச சில்பினாம் தூம்ரவர்ணயோ! விஸ்வக்ஞ ஸ்வர்ணஞ்ச பஞ்ச சதாக்ய வர்ணயோ! பஞ்சப்ரம்ஹயுதே ரூபம் த்விதீயே ஜன்ம நிர்ணயம்" என்றும் 

ஸ்கந்தபுராண நாகர காண்டத்தில், 

"மனுஸ்படிக வர்ணஞ்ச நீலவர்னா மயாஸ்தா த்வஷ்டா ரக்தவர்ணகம் சில்பி தூம்ரவர்ணம் தக்ஷகோ ஹேம வர்ணஞ்ச 

இந்த ஐந்து வர்ணக் கொடியின் மத்தியில் அநுமானுடைய உருவம் இடம் பெற்றது பற்றி ஸ்கந்தபுராணம் நகர காண்டம் 12ம் அத்தியாயத்தில் கிரேதா யுகத்தில் சில மகரிசிகள் குமாரக் கடவுளை வணங்கி தேவசிரேஷ்டராகிய விஸ்வகர்மாவுக்கு அநுமக்கொடி எப்படி அமைந்தது எனக் கேட்டார்கள். அதற்கு சிவகுமாரன் " பிரமரிஷி கெளதமர், அகலிகையின் புத்திரியான அஞ்சனாதேவியை வாயுதேவன் மணந்து கொண்டான். அஞ்சனை கர்ப்பமுற்றாள். கர்ப்பத்திலிருந்த சிசு பிறக்கத் தாமத மாகியது. தாய்க்கு வேதனை அதிகரித்தது. மனைவியின் துன்பநிலையைக் கண்ட வாயுதேவன், மும்மூர்த்திகளையும் பிரார்த்தித்து வேண்ட அவர்களாலும் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. பின்னர் விஸ்வகர்மாவைத் தியானித்து தன் குறையைக் கூறினார். விஸ்வகர்மா நினைவிழந்து கிடந்த அஞ்சனாதேவியை சிரஞ்சீவி மூலம் மூர்ச்சை தெளிவடையச் செய்து கர்ப்பத்திலிருந்த சிசுவை, வெளியில் வரத் தாமதம் ஏன் என வினாவினார். அதற்கு, அச்சிசு விஸ்வர்காவை வணங்கி "என்னைச் சுமந்துள்ளதாயின் கருவறையில் நான் நிர்வாணமாக இருக்கின்றேன். அதனால் என் தாயின் யோனி வழியே நிர்வாணமாக வரமாட்டேன்.எனக்குப் பொன்னாலான கெளபீனம், பொற்பூநூலும், குண்டலங்கள், கமண்டலம் ஆகியவற்றைத் தந்துதவ வேண்டும் என்றும், என்னுடல் மிகவும் பருத்திருப்பதால் என் தாய்க்கு மிகவும் வேதனை இல்லாதபடி நான் வெளிவர என்னுடலைச் சுருக்கவேண்டும். அது உங்கள் ஒருவராலேதான் முடியும். அப்படி நீங்கள் செய்தால் நான் நன்றி மறவாது உங்களுக்கு ஏவல் செய்வதுடன் உங்கள் கொடியில் அமர்ந் திருப்பேன்" எனச் சத்தியம் செய்தார். அதைக் கேட்டவிஸ்வகர்மா அவ்வாறே செய்தார். இதன்படியே அநுமன் கொடி விஸ்வகர்மாக் களுக்கு உரியதானது"என்றார் குமரக்கடவுள்.


No comments: