Translate

Saturday, 20 April 2019

ஸ்ரீ விஸ்வகர்ம சுப்ரபாதம்



ஓம் உத்திஷ்ட நித்யஸம்புத்த ஸங்க்ருதே போ ஸ்ஸநாதந |

பூர்வாசந்த்யா த்வதர்சாயை ப்ரஸாத்யதி நபோங் கணம்||

உத்திஷ்டோத்திஷ்ட காயத்ரி மாத்ருபூத மனஸ்தித|

ஸ்ரஷ்டா பர்தொஸ்யநேகேஷாம் விஸ்வேஷாம் ஸ்தா ன்விலோகய ||

புத்ரா : பஞ்சர்ஷய ஸ்தேத்ய நமஸ்கார புரஸ்ஸரா:I

உபாஸதே விநீதா ஸ்த்வாம் த்வத்ஸ்தோத்ர விகஸந்முகா : ll

தம : ப்ரகாடி க்ரஹதாரகாதீ ந்யுடூநி சித்ரப்ரம சீலவந்தி|

மஹோமயா ந்யாஸ்ருஜதஸ்ஸமஸ்த விஸ்வஸ்ய குப்த்யைஸ் தவ சுப்ரபாதம் ||

க்ரஹா நவ த்வாதச ராசிமத்யே சரந்தி தத்தத்பலதானசீலா : |

அநாதித ஸ்த்வத்ஸமயேந பத்தா : ஸ்ரீ விஸ்வகர்மண்ஸ் தவ சுப்ரபாதம் ||

ராத்ரிம் திவம் பக்ஷவதோ ஹி மாஸா ந்ரூதம் ஸ்ததா விஷுவேயநே ச|

ஸம்வத்சரம் ஸ்ருஷ்டவதே நமஸ் தே போ விஸ்வகர்மண்ஸ் தவ சுப்ரபாதம் ||

அக்ஷம் த்ருவம் நபஸி மேருதராக்ரபாகே ஜ்யோதீம்ஷி தான்யகணிதாநி விதாய சக்ரம் |

ராத்ரிம் திவாத்மகபுவே முஹு ரேகவாரம் ஆவத்சரம் பரமயதஸ் தவ சுப்ரபாதம் ||

பூதாத்மகம் ஜகதிதம் பரமாணுமூலம் ஸோநு ஸ்ஸமஸ்த ஹரணாய் ச சர்வதாலம் |

ஏகத்ர ஸேத்ருசவிபின்ன குணப்ரதாது : பூதாத்மநோ பகவதஸ் தவ சுப்ரபாதம் ||

சில்பம் விநா ஜ்வலதி நோ மிஹிரச்ச வஹ்நி: சில்பம் விநா வஹதி நோ சலிலஞ்ச வாயு : |

சில்பம் விநா பவதி நோ தரணிச்ச கஞ் ச சில்பாத்மநோ பகவத ஸ்தவ சுப்ரபாதம் ||

த்ருஷ்டோய மத்ய விதுஷா தவ பாத ஏவ ஸோத்ராத்ருநா ப்யகணநீய விசித்ரசக்தி :|

கஸ்த்வாதிகச்சதி ஸஹஸ்ரசிரோக்ஷிபாதம் விஸ்வாத்மநோ பகவத ஸ்தவ சுப்ரபாதம் ||

ருப்வங்கிரோ ப்ருகுமுகா குரவ : புராணா : சில்பர்ஷயோ பவதி பூதமநாம்ஸி க்ருத்வா|

மந்தாகிநீபயஸி ஹைமஸரோஜ மர்க்யம் ஹம்ஸாயதே ப்ரதததே ஸ்தவ சுப்ரபாதம் ||

ஸப்தர்ஷயோ த்ருவ மஹோ பரித ச்சரந்த சித்வா ருணாருணருசா ஸ்புடபங்கஜாநி |

வ்யோம்ந : பயஸ்ஸ தததே ய இமா படந்தோ தோரே ஸ்திதாய பவதே ஸ்தவ சுப்ரபாதம் ||

ஏஷாருணஸ்ய ருசி ரத்ர விபாதி பூர்வ பூமீதரஸ்ய சிரஸி ப்லவகாதி பஸ்ய |

வயோ ஸ்ஸுதஸ்ய மஹித த்வஜபர்திநஸ்தே ப்ரத்யர்த்திநீ பகவத ஸ்தவ சுப்ரபாதம் ||

ஸர்வாசு திக்ஷு விகசாநி மநோஹராணி புஷ்பாணி பத்ரபுடகோமல முக்தஹஸ்தா |

வ்ருக்ஷா லதாஸ்ச விஸ்ருஜந்தி சதே பரஸ்மை ஸங்கர்மணே பகவதே ஸ்தவ சுப்ரபாதம் ||

ஏதே வநப்ரிய சுகாதி பதத்ரிஸங்கா : கீதம் கலத்வநி மநோஹர மாத்தபக்த்யா |
காயம்தி தே ஸ்துதிபரம் பஹுளார்தயுக்தம் ஸ்ரீ விஸ்வகர்ம பகவண் ஸ்தவ சுப்ரபாதம் ll

மந்தாநிலோ வஹதி பந்துர மந்தநோத்த மந்த்ரஸ்வநேந மதுரேண லஸந்தி கேஹா : |

கச்சந்தி கர்ஷகஜநா ஹலகர்ஷணாய ப்ரஹ்மாண்ட பத்தநவிபோ ஸ்தவ சுப்ரபாதம் ||

வாகீச கேசவ கிரீச சுரேச முக்யா : விஸ்வஸ்ய குப்த மநிசம் ப்ரபவந்தி கர்தும் I

தேநுக்ரஹம் ஸமதிகம்ய மஹாமஹிம்நோ ப்ரஹ்மாண்ட பத்தனவிபோ !ஸ்தவ சுப்ரபாதம் ||

அர்கே ப்ரதாவ மநிலே வஹநம் ஜலேச வஹ்நௌ ச தாஹமபி வர்ஷண மம்புவாஹே |

விஸ்வஸ்ய கோசபரணாய நிதாய பாஸி ப்ரஹ்மாண்ட பத்தந விபோ !ஸ்தவ சுப்ரபாதம் II

ப்ரம்ஹாச்யுதேஸ்வர புரந்தர பாஸ்கராதி ப்ருந்தாரகாக்ர ஸுரவந்த்ய பதாரவிந்த |

உந்மீல்ய நேத்ர மவலோகய விஸ்வவிஸ்வம் ப்ரஹ்மாண்ட பத்தனவிபோ ஸ்தவ சுப்ரபாதம் ||

ஏதேப்தேயச்ச கிரயச்ச நதீந்தாச்ச வ்யோம்நீ க்ஷதா உதகஸீமநி ஜந்தவச்ச l

த்வாம் விஸ்வசில்பிந மசிந்த்யகுணம் வதந்தி ப்ரஹ்மாண்ட பத்தந விபோ !ஸ்தவ சுப்ரபாதம் ||

ப்ராபாத சீததர வாத விதூத துங்க பங்கை: கரை ர்தவள சந்தன சாரு சர்சசாம் l

குர்வந்தி விஸ்வபுருஷாய ச தே ஸமுத்ரா : ப்ரஹ்மாண்ட பத்தநவிபோ ஸ்தவ சுப்ரபாதம் ll

நத்யோ நதாச்ச ஸரஸீருஹ ஹல்லகொர்மீ  ஹஸ்தை : கலத்வநி மநோஹர மர்ச்சநீயம் |

த்வாமர்சயந்தி த்ரிகுணம் த்ரிகுணாபிராமம் ப்ரஹ்மாண்ட பத்தநவிபோ ஸ்தவ சுப்ரபாதம் ||

ஸுர்யாப்ஜ மங்கள புதாங்கிரஸோ சநோர்க புத்ராதி ரேஷு கணநீயகனோ க்ரஹாணாம் |

த்வத்த்வாரஸீமஸு சரத்யதி பீதபீதம் ப்ரஹ்மாண்ட பத்தநவிபோ !ஸ்தவ சுப்ரபாதம் ||

ஸங்க்ரந்தநாக்நி யம நைர்ருத பாசபாணி வாதைக பிங்கமுக திக்பதயோ விநீதா: |

திஷ்டந்தி ஸப்ரஹரணா : கடிபத்தசேலா : ப்ரஹ்மாண்ட பத்தநவிபோ !ஸ்தவ சுப்ரபாதம் ||

ரம்பாதி திவ்யரமணீர் மணவ்யோ மநோக்ஞ லாஸ்யா ப்ரபந்த சுபகா ரதகாரமுக்ய |

ந்ருத்யந்தி தேவ விஹிதாஞ்சலி பத்ரமுத்ரா : ப்ரஹ்மாண்ட பத்தந விபோ !ஸ்தவ சுப்ரபாதம் ||

ஏதே ச நாரதமுகா மஹநீயதக்வா : ஸங்கீதகேந கலநாத மநோஹரேண |

தே ஸங்க்ருதே குணகணா நபிவர்ணயந்தி ப்ரஹ்மாண்ட பத்தனவிபோ ஸ்தவ சுப்ரபாதம்||

அர்யோதிதார்க்க கிரணோஜ்வல பாஸமாநம் அர்க்யம் த்விஜா தததீ வைதிக மந்த்ரபூதம் |

பல்லி புரீ க்ருஹதடாக நநீ நதேஷு ப்ரஹ்மாண்ட பத்தந விபோ ஸ்தவ சுப்ரபாதம் ||

ஸ்ரீதேவதாச கிரிஜா த்ருஹிணஸ்ய பத்நீ ஸங்க்ரந்த நஸ்ய ரமணீ மணிதீ பிகாபி : I

நீராஜயந்தி புவநாதி பதிம் பவந்தம் ப்ரஹ்மாண்ட பத்தநவிபோ !ஸ்தவ சுப்ரபாதம் ||

ஸ்ரீ விஸ்வகர்ம பரமேஸ்வர சுப்ரபாதம் ஸ்ருண்வந்த் படஜ்ஜநா : ஸதாவ நசாலி சீலம் |

சிவலிங்க வம்ச மஹிதஸய கவே ரஸர்க காவ்யப்ரணேது ரித மே மபூத்ஸமாப்தம் II
               
                  இதி ஸ்ரீ விஸ்வகர்ம ஸுப்ரபாதம் ஸம்பூர்ணம் .

Thursday, 18 April 2019

விஸ்வகர்ம மக்களின் வீழ்ச்சியில் இளைஞர்களின் பங்கு

   
   இத்தனை சிறப்பும் சீரும் வாய்ந்த விஸ்வகர்ம இனம் விழ்ச்சியடைவதற்குக் காரணமென்ன ?ஆற்றல் வாய்ந்த இனம் .அறிவு மிக்க இனம் பார்போற்றும் படைப்புக்கெல்லாம் சொந்தம் பாராட்ட வேண்டிய பரம்பரை ஏன் இப்படி விழுந்தது . உலக வரலாற்றில் ஒரு இனம் எழுச்சி பெற அவ்வின இளைஞர்கள் மூல காரணமாக இருந்திருக்கின்றார்கள் .ஆனால் விஸ்வகர்ம இனத்தைப் பொறுத்தவரை கதை வேறாக அமைந்துள்ளது .

 இந்த இனத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்டார்கள் இவ்வினத்தின் தங்கக்கம்பிகளான இளைஞர்கள் என்பதை அறியும் போது வேதனையும் துக்கமும் நெஞ்சை அடைக்கிறது .வரலாற்றின் பக்கங்களை ஒளி மயமாக்கி உலக மக்களெல்லாம் மதித்துப் போற்றிப் புகழ்வதும் பாமாலையும் , பூமாலையும் அணிந்த இனத்தை அனாதையாக்கியவர்கள் .அகிலமெல்லாம் ஓட உதவியவர்கள் வேறுயாருமல்ல அக்குலத்தின் சொற்கேளாப் பிள்ளைகளால் குலத்துக்கே அழிவு வந்தது .

    முதலடி ஜகத்குருப் பதவிக்கு விழுந்தது .விஸ்வகர்ம மக்களுக்கு பூர்வீக காலம் தொட்டு ஆச்சாரிய குரு பீடங்கள் பல இருந்தன .சில மடாதிபதிகள் பிரம்மச்சாரியத்தை அனுஷ்டித்தார்கள் .சிலர் இல்லற வாழ்க்கையோடு மாடதிபதிகளாக இருந்தார்கள் .
        
        மடாதிபதிகள் விஸ்வகர்மப் பிராமணர்கட்கு தரும உபதேசங் களைச் செய்து யாகாதி கிருத்தியங்களைச் செய்தும் குல தருமம் குன்றும் போது அவற்றுக்குப் புத்துயிர் அளித்தும் வந்துள்ளார்கள் தமது கட்டளையை மீறுபவர்கட்குத் தண்டனை வழங்கியும் வந்துள்ளார்கள் .இத்தகைய மடாதிபதிகள் கல்வி அறிவும் தவ வலிமையும் உடையவர்கள் .சித்தர்களாகவும் இருந்தார்கள் .

    "கருதேது வேங்கடாசார்யஸ்த்ரேதாயாம் நரகேசரி ' வாபரே சோட வித்யாத             காளஹஸ்தி காலளயுகோ " 

    இச்சுலோகம் ஆச்சாரிய குரு பரம்பரை என்னும் சமஸ்கிருத நூலிலுள்ளது , கிரேத யுகத்தில் திருவேங்கடச்சாரியார் சுவாமி களும் , துவாரக யுகத்தில் ஜோடாச்சாரிய சுவாமிகளும் , குருமகா சன்னிதானங்களாக இருந்தார்கள் என உறுதி செய்கின்றது .

   ஸ்ரீ காளகஸ்தி முனிவர் காசியில் தவம் செய்த போது காசியை ஆண்ட மன்னன் சுவித்ரமகாராசா அவரிடம் உபதேசம் பெற்றதா கவும் அதன் மூலம் விஸ்வகர்ம புராணம் உண்டாகியது எனக் கூறப்படுகின்றது .

   ஸ்ரீ காளகஸ்தி முனிவர் விஸ்வகர்ம ஆச்சாரிய வித்தியா நகரம் காசி , சிருங்கேரி ஆகிய இடங்களில் விஸ்வகர்ம குரு பீடங்களை ஆரம்பித்து வைத்தார் .அவற்றில் விஜயா நகரத்தில் அமைக்கப்பட்ட பீடம் அன்றிலிருந்து இன்றுவரை விஸ்வகர்ம மக்களிடமிருந்து வருகின்றது .காசி மடாதிபீடமும் சிருங்கேரியும் கைமாறி விட்டது .
  1. சிருங்கேரி ஸ்ரீ விஸ்வரூபாச்சாரியர் பரம்பரை ஜெகத்குரு சங்கரச்சாரியர் சுவாமிகள் 
  2. போத்தலூரி ஸ்ரீ வீரப்பிரமேந்திராசுவாமிகள் 
  3. .ஆனேகுத்திஸ்ரீ வீரயோக வசந்தராயச்சாரியர் சுவாமிகள் 
  4. வீபூதி ஸ்ரீ மத் வெங்காயச்சாரிகள் சுவாமிகள் 
  5. நந்தி கொண்ட ஸ்ரீ சிவசங்கரரையா சுவாமிகள் 


       இன்னும் பல இடங்களில் விஸ்வகர்ம மக்களின் குருபீடங்கள் உண்டு

  சிருங்கேரி மடம் ஆதியில் துவட்டச்சாரியரின் மகன் விஸ்வ ரூபனால் அமைக்கப்பட்டது .அவரே அதன் ஜெகக் குருவாக இருந்தார் .அவர் பின் ஞானயோக விஸ்வரூப ஆச்சாரியார் இவர் 90 வயதில் ஒரு ஆண் மகனுக்கு தந்தையானார் .இதனால் விஸ்வகர்ம மக்கள் வேதனை அடைந்தார்கள் .அக்குழந்தைக்குச் சங்கரன் ' எனப் பெயரிட்டார்கள் .சங்கரன் தன் தந்தையைப் போல சகல கலை வல்லவனாகவும் சித்துக்கள் செய்யும் சித்தனாகவும் தவலிமையுடையவனாகவுமிருந்ததால் அவரே பீடாதிபதி யாக அமர்த்தப்பட்டார் .இவர் தன் சீடராக விஸ்வகர்ம மக்களையும் ஆரியர்களையும் வைத்துக் கொண்டார் .இவர் சமாதியடையும் நேரம் வந்தபோது ஜெகக்குருவாக வரக்கூடியவரைத் தெரிவு செய்ய ஒரு பரீட்சை வைத்தார் .

       தான் ஆற்றில் நீராடித் திரும்பும் போது தனது பாதரட்சையை ஆற்றோரத்தில் விட்டு விட்டு வந்து தனது மாணவனாக இருந்த விஸ்வகர்மகுல மாணவனிடம் அதை எடுத்துத் தரும்படி கூறினர் .அந்த இளைஞன் குரு பக்தி இன்றி விசுவாசமும் , அடக்கமும் , பணிவுமின்றி அந்தப் பாதரட்சையைத் தன் காலிலே போட்டுக் கொண்டு வந்து வைத்தான் , இதைப் பார்த்த சங்கராச்சாரியார் இவருக்கு அத்தகுதி இல்லை என முடிவெடுத்து அடுத்த நாள் மற்ற இன இளைஞனிடம் கூறினார் .

      அந்த இளைஞன் மிகவும் பக்தியுடனும் , பணிவுடனும் சென்று பாதரட்சையை ஆற்றிலே கழுவி தன் மேலாடையில் வைத்து சுற்றித் தன் தலையிலே சுமந்து வந்து குருவின் பாதத்தில் வைத்தான் .ஜெகத்குருவின் கோல் பிராமணப் இளைஞனின் கைக்கு மாறியது .சங்கரச்சாரியார் விஸ்வகர்ம இளைஞனின் பொறுப்பற்ற தன்மையால் விஸ்வகர்ம மக்களுக்குரிய ஜெயகுரு பீடம் பறிபோனது .
      அது மட்டுமல்ல , காந்தக் கோட்டை அழிவுக்கு விஸ்வகர்ம இளைஞர்களின் பொறுப்பற்ற தன்மையும் தான்தோன்றி நிலை யுமே காரணமாக அமைந்தது .இது ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது .எனவே இளைஞர்களே !உங்களின் அடக்கம் இன்மை , பொறுப்பற்ற தன்மை , ஆழ்ந்து சிந்தியாத போக்கு மூத்தோரை மதியாமை போன்ற தன்னிச்சைப் போக்குகளால் வரலாற்றுப் புகழ்மிக்க இனத்தை புண்படுத்தி புழுதியில் தள்ளிவிட்டீர்கள் .இன்னும் இன்னும் இத்தவற்றை விடாது தக்கோர் மதிக்கத்தக்க வரையில் சொற்கேட்டு குலப் பெருமையை மீட்டெடுக்க கடுமை யாக உழையுங்கள் , 

      நாடும் , ஏடும் நல்லவர்களும் உங்களிடமிருந்து பல வல்லமை களை எதிர் பார்க்கிறார்கள் .உடன் மூதாதை உலகில் பல சாதனை கள் படைத்தவர்கள் .அதை நினைத்துப் பார் .அவர்களால் முடிந்தது , உன்னாலும் முடியும் .அவர்கள் சிந்தையை அடக்கிச் சிந்தித்தார்கள் சித்துகள் பெற்றார்கள் .உனக்குப் பெரும் வரலாற்றுச் சிறப்பை மூலதனமாக்கிச் சென்றார்கள் நீ உன் எதிர்காலச் சந்ததிக்கு என்ன செய்யப் போகிறாய் சிந்தி .உன் சினத்தால் அழிவு ஏற்பட்டது .நீ சிந்தித்தால் சிறப்பை நிலை நாட்டலாம் .

      எனவே இளைஞனே !மட்டங்கள் சேர்த்து நட்டங்கள் ஆக்கியது போதும் .இனி நாடு சிறக்சு நாளிலம் போற்ற செயற்கரிய செய்யும் செயல் வீரனாக உன்னை நீயே மாற்று .உழை .காலத்தை பொன்னேனப் போற்றும் .பொறுப்புடன் செயல்பட முன் வா .

     அன்று உன் மூதாதை ஆற்றிய சேவை உள்ளை அழைக் கின்றது .உலகின் முதல் விஞ்ஞானியும் மெய்யாளியுமான வித்தைகள் பலதின் வித்தகர் விஸ்வகர்மாவின் வழித்தோன்ற லல்லவா நீ !நட்டுவள் பிள்ளைக்கு தொட்டிக் காட்ட வேண்டிய தில்லை .எனவே நீ உன்னையே உணர்ந்து கொண்டால் உலகம் உன் காலடியில் தவமிருக்கும் சரித்திரம் விரியும் தரித்திரம் மறையும் .சகாவரம் பெற்ற கலைச் செல்வங்கள் உன் முயற்சியால் வளரும் .டயரும் நாடு போற்றும் நல்லவர்கள் வாழ்த்துவர்கள் .ஏடுகள் உன் எழுச்சியை ஏற்றத்தை எடுத்தியம்பும் .பாமாலையும் பூமாலையும் உன்னினத்திற்கு கிடைக்கும் .

    அன்று நீ இழந்ததை கலியுகத்தில் மீட்டு விஸ்வகர்மாவின் கனவை நனவாக்க நல்லவனே நலமுடன் வா !நெஞ்சில் உறுதியோடு நேர்மை திறத்துடன் எழுந்துவா !

     அன்றும் , இன்றும் , என்றும் உன்னலமே தன்னலமாக கொண் இழைக்கும் நல்லவர்கள் அழைக்கின்றார்கள் .உன்னினத்தவர் .களால் படைக்கப்பட்ட எத்தனையே கலைச் செல்வங்கள் இன்று !அந்த நாடுகட்கு நலமாக அன்னியச் செலவாணியை அள்ளித் கொட்டுகின்றன .இதை அனுபவிக்கும் அரசு உன்னினத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை .உனக்காக எதுவுமே செய்வதில்லை .

      எனவே ஐந்தொழில் புரியும் தங்கக்கம்பிகளான தம்பிகளே !சரித்திரத்தில் வடுபல பெற்ற நீங்கள் அத்தவறுகட்கு மன்னிப்பாக ,இனத்தின் எழுச்சிக்கும் ஏற்றத்திற்கும் வழியும் வகையும் காண ஓடி வாருங்கள்.

        உங்களுக்காக வாசல் கதவுகளும் இருதயக் கதவுகளும் திறந்திருக்கின்றது .எந்தையும் தாயும் மகிழ்ந்து விளையாடிய இந்த மண் .அவர் சிந்தையில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் தோன்றிப் பூத்துக் குலுங்கிய இந்த மண்ணை விண்ணில் சொர்க்கத்தையும் , மண்ணில் மாடமாளிகையையும் விஸ்வகர்மாவின் உழைப்பால் படைப்பால் பார் போற்ற பரணி பாட தரணி சிறக்க உன் சேவை தேவை நாடிவா ?நல்லவனே வல்லவனே நீ படைத்தல் கடவுளின் பரம்பரை மறந்து விடாதே அன்று உன் மூதாதை படைத்த அத்தனையும் இன்று வரலாற்றுச் சின்னங்கள் .வரலாற்று ஆசிரியர்களை வாய்திறக்க வைத்துள்ளது .காலம் உன் வரவுக்காக காத்திருக்கின்றது .கடமை உன்னை அழைக் கின்றது .உன் மூதாதைகளின் தொழில் நுட்பமும் , ஆழ்ந்த அறிவும் , பரந்து விரிந்த நோக்கும் உன்னோடு உறவாடத் துடித்து அழைக்கின்றது .சிரிக்கும் சிகிரியாக்களையும் அழகு சிந்தும் அஜந்தா ஓவியங்களையும் தந்தவனே தங்கமகனே !தரணியில் சிந்திக்க வைத்தவன் நீ !பாவேந்தர் முடியும் தமிழ் புலவருக்கீயும் படியும் உன் முதாதையின் உழைப்பல்லவா ?' 

       நாடு தந்தவன் நகர் அமைத்தவன் வித்தைகள் பலதின் சொந்தக்காரன் நீ !நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே எனப் பரமனுக்கே பதில் கொடுத்த பாட்டுக்கொரு புலவன் நக்கீரன் பரம்பரையே ஓடிவா !உன் மூதாதை உனக்காக விட்டுச் சென்றிருக்கும் சேவையை திறம்படச் செய்யும் திறமை உள் வாங்கப்பட்டுள்ளவன் நீ !" உலக மக்களுக்கு கடவுளைக் காட்டியவனின் இளவல்களே, விழுமின் எழுமின் ஏற்றம் பெறும் நாளை நமதாக்க வாரீர் !

மாந்தை வாசிகளின் மகிமை

   மாந்தையில் வாழ்ந்தவர்கள் கைத்தொழில் வல்லவர்களான கம்மாளர்களாகும் .அவர்கள் உலோகங்களிலும் கல்லும் மரத்திலும் பல ஆக்க பூர்வமான வேலைகளைச் செய்த சாதனையாளர்கள் .
       
          இன்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன் இலங்கை கதிரை மலையிலிருந்து ஆட்சி செய்த குமண மன்னன் தான் தவம் செய்யும் நோக்கோடு காட்டுக்குப் போக அவள் தம்பி ஆட்சிக் கட்டிலேறினான் .ஆட்சி செய்த குமணனின் தம்பி தன் தமைய சளின் தலையைக் கொண்டு வருபவர்கட்கு 1000 பொற்காசு தருவதாக அறிவித்தான் .வறுமையிலும் கொடுமையிலும் வாடி வதங்கிய ஒப்பிலாமணிப்புலவர் தன் வறுமையைப் போக்கவும் குமணனைக் காக்கவும் இதைப் பயன்படுத்த முனைந்தார் .குமணன் , அரசன் மட்டுமல்ல கொடை வள்ளலும் கூட .எனவே காட்டுக்குச் சென்று குமணனைக் கண்டார் .தன் வறுமையைக் கூறி வாழ வழி செய்யுமாறு கேட்டார் .குமணன் புலவரின் வறுமையைப் போக்க முடியாத நிலையில் தாளிருப்பதை நினைத்து வேதனைப்பட்டான் .இவ்வாறு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போது தன் தம்பியின் அறிவிப்பு நினைவில் வந்தது , உடனே புலவரை நோக்கி ஐயா நான் மன்னனாக இருக்கும்போது நீங்கள் வரவில்லை .பொருளனைத்தையும் துறந்து முடியையும் துறந்து தவம் செய்யக் காடு வந்தபோது வந்தீர்கள் .என்னிடம் உள்ளது உயிரொன்றே , என் தம்பி என் தலையைக் கொண்டு தன்னிடம் சேர்ப்பவர்கட்கு 1000 பொற் காசுகள் தருவதாகக் கூறியுள்ளான் .நீங்கள் என் தலையைக் கொண்டு போய் அவனிடம் கொடுத்து ஆயிரம் பொற்காசுகளைப் பெற்று வறுமையைப் போக்கி வாழ்வாங்கு வாழ்க என்றான் .
   .        
     புலவர் அதிர்ச்சியடையவில்லை .குமணனை நோக்கி ஐயா !உங்கள் தலையை எனக்குத் தந்து விட்டீர்கள் , மீண்டும் வந்து பெறும்வரை காத்திருக்க வேண்டியது உங்கள் கடமை எனக் கூறிவிட்டு உடனே மாந்தைக்குச் சென்று விஸ்வகர்ம ஆச்சாரி !மாரைக் கண்டு தத்துருவமான குமண மன்னனின் தலை ஒன்றைச் செய்து தரும்படி வேண்டினார் .அவர் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஆச்சாரி உடனே குமணனின் தத்துரூபமான தலை ஒன்றைச் செய்து கொடுத்தார் .அதைப் பெற்றுக்கொண்டு குமணனின் தம்பியிடம் சென்று வாதிட்டார் .தமையனின் தலையைக் கண்ட தம்பி தமையன் உண்மையில் இறந்துவிட்டாள் என நினைத்து வேதனைப்பட்டு அழுது புரண்டான் .ஆட்சியைவிட்டகன்றான் .பின் புலவர் காடு சென்று குமணனை அழைத்து , வந்து தனக்கு வழங்கப்பட்ட தலைக்கு முடிசூட்டினார் .மாந்தை வாசிகளின் கைத்திறனை மெச்சி , 
" மாந்தையிலே வாழும் மகுடத்தியாகியுனக் கேந்து தழும் போலிரண்டுள்ளது - வேந்தர் முடித்தழும்புன் காலிலே முத்தழிழருக்கீயும் படித்தழும்புன் கையிலே பார் . " 

என பாராட்டிப் புகழ்ந்து பாமாலை செய்தார் .தருமம் தலை காக்கும் என்ற பழமொழி குமணன் வரலாறு மூலம் கிடைத்த தாகும் .
      
       பெரும் பணக்காரராக இருந்து பணத்தைத் துறந்து முற்றும் துறந்த முனியான பட்டினத்தார் 
" ஒரு நான்கு சாதிக்கும் மூவகைத் தேவர்கட்கும் உன் பார்க்கும் திரு நாளும் தீர்த்தமும் வேறுள்ளதோ - வந்திசைமுகனார் வருநாளில் வந்திடும் மாந்தைக் கண்ணாளர் வகுத்தல்லால் குருநாதர் ஆனை கண்டீர் பின்னையேதுக் குவலயத்தில் " .
எனப் பாடி மாந்தைக் கண்ணாளர்களின் முக்கியத்தவத்தை முழங்கியுள்ளார் .

Sunday, 7 April 2019

ஸ்ரீ விஸ்வகர்மாஷ்டகம்

ஆதிரூப நமஸ்துப்யம் நமஸ்துப்யம் பிதாமஹே |
விராடாக்ய நமஸ்துப்யம் விஸ்வகர்மன் நமோ நம : ||
 ஆக்ருதி : கல்பநா நாத த்ரிணேத்ர ஞாந நாயிகா : ||
 ஸப்ரதாதாத்வம் விஸ்வகர்மன் நமோ நம : ||
புஞாந ஸூத்ரஞ்ச காமிஸ்ஸூத்ரம் கமண்டலம் த்ருத்வா ஸம்போ ஹயன் தேவா விஸ்வகர்மன் நமோ நம : ||
விஸ்வாத்மா துப்த ரூபேணா நாநா கஷ்ட பிதாரக |
தாஅநாதி ஸம்சாராத் விஸ்வகர்மன் நமோ நம : ||
ப்ரஹ்மாண்டாகல தேவாநாம் ஸ்தாநம் ஸ்வரூப தலம் தலம் : |
லீலயா ரஜிதம் ஏந விஸ்வரூபாய தே நம : || 
விஸ்வவ்யாபின் நமஸ்துப்யம் த்ரயம்பகோ ஹம்ஸவாஹந : |
 ஸர்வ க்ஷேத்ர நிவாஸாக்யா விஸ்வகர்மன் நமோ நம : ||
 நிராபாசாய நித்யாய ஸத்ய ஞாநாந்தராத்மநே |
விஸுக்தாய விதூராய விஸ்வகர்மன் நமோ நம : ||
நவேதாந்த வேத்யாய வேத மூல நிவாஸிநே |
நவிவிக்த சேஷ்டாய விஸ்வகர்மன் நமோ நம : ||

Friday, 5 April 2019

விஸ்வகர்ம பிராம்மணர்களின் தாம்பிர சாசனங்கள்



விஸ்வகர்ம பிராம்மணர்களின் தாம்பிர சாசனங்கள்
 வேத இதிகாச புராண ஆதாரங்களைக் கொண்டு விஸ்வகர்மப் பிராம்மணீகத்தின் தொன்மை நிலைநாட்டப் பெற்றுள்ளது .அநுஷ்டானத்தில் அத்தொன்மை , பற்பல அரசர்கள் காலங்களில் அங்கீகரிக்கப்பட்டு சில தாம்பிர சாசனங்களாலும் சில அழியாச்சின்னங்களாலும் அறியப்படுவனவாம் .அவைகள் இல்லையேல் எந்நாட்டு மக்களின் நாகரீகத்தையும் திட்டமாய் அளவிட்டு அறிவதற்கில்லை.பௌருஷேயர்களான விஸ்வகர்மப் பிராம்மணர்களுக்கும், பிற்காலத்தில் வசிஷ்டரால் உற்பத்தியான ஆருஷேயப் பார்ப்பனர்களுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெரும் போராட்டங்கள் நிகழ்ந்தே வருவனவாம் , அவற்றால் இருசாராரும் ஒருவர் மற்றொருவரை வெளிப்படையாகவும் தாக்கியே வருகின்றனர் .தங்களுக்குச் சாதகமான பல கல்வெட்டு , தாம்பிர சாசனங்களையும் புனைந்து சிருஷ்டித்துமுள்ளனர் .அரசவைகளில் வித்வ இனங்கள் சபைகள் கூட்டப்பட்டு , இவ்விருவகைப் பிராம்மணர்களின் உயர்வு தாழ்வும் , வேதயாகாதிகாரமும் , மிகவிரிவாகப் பரிசீலனை செய்யப்பட்டுச் சம்மதிப் பத்திரங்கள் கைச்சாத்துடனும் , அரசாங்க முத்திரையுடனும் வழங்கப்பட்டிருக்கின்றன .சில ஊர்களில் , ஆருஷேயப் பார்ப்பனப் புரோகிதர்களால் வீண்விவாதங்கள் ஏற்பட்டு , நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டு , விஸ்வகர்மப் பிராமணீகம் சந்தேகமற நிலைநாட்டப் பெற்றுள்ளது .ஒரு வழக்கிலும் கூட , ஆருஷேயப் பார்ப்பனர்கள் - வசிஷ்டாதி ரிஷிகளின் சந்ததியார்கள் , தங்களை விஸ்வகர்மப் பௌருஷேயப் பிராம்மணர்களை விட பிறப்பினாலும் , கர்மவிசேஷத்தினாலும் உயர்ந்தவர்களென நிலைநாட்ட முடியவில்லை , ஆருஷேயர்கள் வேதமுணர்ந்த பார்ப்பனர்கள் என்பதையும் அவர்களுக்குக் கீழ்ப்பட்ட மூன்று வருணத்தார்களிலும் உயர்ந்தவர்களென்பதையும் பௌருஷேயர்கள் எக்காலத்தும் மறுத்ததில்லை .ஆயினும் ஆருஷேயப் பார்ப்பனர்கள் பௌருஷேயர்களிலும் , உயர்ந்தவர்கள் எனக் கூறிக்கொள்வதையும் , அவர்கள் குருத்துவத்தை இவர்களிடமும் வற்புறுத்துவதையும் , விஸ்வகர்மப் பிராம்மணர்கள் எக்காலத்திலும் ஒப்பினார்களில்லை .இவைகளே அவர்களுள் நிகழ்ந்த பல போராட்டங்களுக்குக் காரணமாகும் .பழையன கழிதலும் , புதியன புகுதலும் இக்கால தர்மமாகும் .ஜாதி வேற்றுமை மறைந்து தீண்டாமை அறவே ஒழிந்து , அம்மக்களுக்கு தேவாலயங்கள் திறந்துவிடப்படும் இந்நாள் , தலசம்பிரதாயம் கைவிடப்பட்டு கலப்பு மணங்களும்,விதவா விவாகங்களும் தாண்டவம் புரியும் இவ்வேளை விஸ்வகர்மப் பிராம்மணீகத்தை அளவுகடந்து வற்புறுத்த வேண்டுமென்பதும் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட வேண்டுமென்பதும் இப்பதிவின் கருத்தல்ல .பட்சபாதமற்ற சரித்திரவல்லோர் நிலையினின்றும் விஸ்வப்பிராமணீகத்தைக் குறித்த ஆதாரங்களை சர்ச்சை செய்து பௌருஷேயர்கள் தங்கள் பூர்வமேன்மையை தங்கள் குல உத்கிருஷ்டத்தை உள்ளபடியே உணர்ந்து தங்கள் முன்னோர்களிலும் எத்துணை தாழ்ந்திருக்கிறோம் என்பதைச் சிந்தித்து இழந்த உயரிய அந்நிலையை மீள அடையப்பெறவும் , ஆருஷேயப் பார்ப்பனர்கள் தங்கள் விதண்டாவாதங்களை விட்டொழித்து பிறப்பினால் தங்களைவிட மேம்பாடுடைய உண்மையான பிராம்மண வகுப்பாரின் உத்கிருஷ்டத்தையும் , பிரம்ம சிருஷ்டித் தொழில்களின் உயர்வையும் கண்டு சந்தோஷ சித்தராய் இனி சகோதரத்வம் பாராட்டி வாழவும் பொதுமக்களைச் சூழ்ந்திருக்கும் அறியாமை என்னும் காரிருளின்றும் அவர்களை விடுவிக்க வேண்டுமென்பதே இப் பதிவின் முக்கிய நோக்கமாகும், இனி முக்கியமான சில தாம்பிர சாசனங்களை எடுத்துக்காட்டி விஸ்வப்பிராம்மணீகத்தையும் , ஆச்சார்யத்துவத்தையும் நிலைநாட்டுவோம். குண்டூர் மண்டலகாரம் பூடி சிலாசாசனத்தில் : பாடுக்கிராமத்தினுடைய பதி தடாக தக்ஷிண பாகத்தில் ஆதித்ய நிர்மித தேவப்பிரசாதமூர்த்தி பிரதிஷ்டா சமயத்தில் நாபோலபோகோஜூ திப்போஜூயென்னும் பெயரினையுடைய சிற்பாச்சார்யருக்கு சிந்துமானிய ரூபமாய் அறுபது ஏக்கர் அளவுள்ள பூமி கொடுக்கப்பட்டது(தெலுங்கில் உள்ளது ) சாலிவாகன சகாப்தம் 1135 க்கு விஜயஸ்ரீ ஜேஷ்ட்ட சுக்ல சதுர்த்தி திதி சுக்ரவாரம் மேடாம்பிகா நந்தனன் வீரகாமராஜன் ராஜ்யம் நடத்தும் காலத்தில் ஆதித்தன் நாகஸ்தம்பத்தை ஸ்தாபித்தான் , இந்த சாசனத்தில் மேலும் கூறுவதாவது : சிருஷ்டிகர்த்தாவும் , சூரியனுக்கு மாமனாருமாகிய விஸ்வகர்மா , சூரியனை சாணைபிடித்து உதிர்ந்த கிரணங்களின் பொடிகளால் சூலம் சக்கரம் முதலான தேவர்களுக்குரிய ஆயுதங்களை உண்டாக்கினார் .அதே உத்திருஷ்டமான வம்சத்தில் பிறந்த துல்லபாச்சாரியன் , அவன் புத்ரன் பாணாச்சார்யன் , இவனது குமாரர்கள் நாகாச்சார்யன் , போகநாக்யன் .திரிபுராந்தகன் இவர்கள் பலவித மூர்த்திகளையும் , நான்குவித ஆலயங்களைச் செய்ய வல்ல சதுரர்கள் , வாஸ்து சாஸ்திர விசாரதர்கள் .இந்த சாசனத்திலிருந்து கி.பி 1207 - ம் வருடத்திலிருந்தும் விஸ்வகர்ம பிரம்ம வம்ஸத்தார்கள் ஆச்சார்யத்துவப் பிரசித்தர்களாய் பிரதிஷ்டா காலங்களில் அரசர்களால் க்ஷேத்திரமான்யம் முதலிய சன்மானங்களைப் பெற்று பூஜிதர்களாயிருந்து வந்தனரென்பதும் நிரூபணமாகிறது .திருவிதாங்கூர் கோவில் வெளிமண்டபம் தெற்குப்புறம் மேலச்சுவரில் கொல்லம் கூரு து மாசி மாதம் கசஉ கலி வருஷம் 4508 இந்த செண்பகராமன் மண்டபம் செய்தேன் என்றும் , கோவில் பஞ்சபாண்டவர் சந்நிதி வடக்கு வாசலுக்கு நேராக ஸ்ரீ கோவில் மதிலில் - கொல்லம் ஙஉ0 வது மீள ஞாயிறு இதில் கல்வெட்டிக்கொள்கவென்று திருவெழுத்து திருமுகப்படி எழுத்து வெட்டினேன் , இவ்வூர் தச்சாச்சாரியன் சோமன் செல்வனான முன்னூற்றுவ ஆச்சாரியன் எனவும் , கரியமாணிக்கபுரம் கோவில் சுற்று மண்டபம் மேலச்சுவரில் கிழக்கு வசம் கொல்லம் வைகாசி மீ ககஉ பஞ்சமி கோட்டாருன் மும்முடி சோழபுரத்திலிருக்கும் சிற்பாச்சாரியரில் தம்பிரான்குட்டி சிற்பப் புரந்தரன் எழுத்து என்றும், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப்பெருமான் கோவில் புறச்சுவரின் கிழக்கு வசத்திலும் வடக்கு வசத்திலும் கலி ஸ்ரீ சஎ ) ச ல் செல்லாநின்ற விருச்சிக சனி தனு வியாழம் கொல்லம் எளOக ஆனிமீ ககஉ , சனிக்கிழமை கல்வெட்டினேன் .கிருஷ்ணன் ஆச்சாரி திருவட்டாறு உடையான் குட்டி சிந்தாமணி ஆச்சாரி , காத்தவன் சுறுவாங்க ஆச்சாரி நயினார் திருநீலகண்ட ஆச்சார்யன் என்றும் , மேலும் திருவிதாங்கூர் மகாராஜா 200 - 300 வருடங்களுக்குமுன்பும் கியாதியுள்ள விஸ்வகர்மர்களான தெய்வேந்திரியனாச்சாரி அனந்தபத்பனாபன் ஆச்சாரி , மார்த்தாண்டனாச்சாரி , சிற்ப புரந்தரனாச்சார்யரென்று தாம்பிர சாசனத்தில் எழுதிக்கொடுத்தும், ஆடையாபரணங்கள் , சங்கிலிவெட்டை , குடை முதலிய பரிசுகளும் , சர்வமானியமாக பூமிகளும் , பல்லக்கும் கொடுத்தும் , யானைமேலேற்றி அரண்மனை வாயிலிருந்து வாத்ய கோஷத்துடன் பட்டணப்பிரவேசம் செய்வித்ததாக வரையப்பட்டுள்ளது. இலங்கை மன்னர்களால் விஸ்வகர்மப்பிராம்மணர்கட்கு கீர்த்திவாய்ந்த தாம்பிர சாசனங்கள் சிங்கள பாஷையில் வரைந்துகொடுக்கப்பட்டுள்ளன .அவைகளில் சிலவற்றை இங்கு தருவோம் .சிலோன் கீர்த்தி ஸ்ரீ ராஜசிம்ம அரசனால் இங்கிலீஷ் 1763ம் ஆண்டில் , வடுவாவலவூர் விஜயவர்த்தன தேவசிம்ம மூலாச்சார்யரென்ற விஸ்வகர்மருக்கு அப்பெயரையும் , கஉ அமுனாம்ஸூம் , ருலாகா பூமியும் வெகுமதியாகக் கொடுக்கப்பட்டதென்றும் மேற்படி அரசரால் சிற்பாச்சார்யர் ஒருவருக்கு ராஜகருண தேவசுரேந்திர மநுவீர விக்கிரம என்னும் பட்டமும் .எல்டினிய அலங்கார புஸ்தகமும் பரிசாகக் கொடுக்கப்பட்டதென்றும் , விக்கிரம பாஹூ வென்ற அரசருக்கு பண்டித நிலை ஆச்சாரியானவர் பட்டாபிஷேகம் செய்துவைத்தவர் , அந்த ஆச்சாரியாரின் பெண் குழந்தைக்கு பஞ்சந்தஹாமி என்ற பட்டப்பெயரும் , அவர் மாதாவுக்கு விஜயவர்த்தனாவென்ற பட்டமும் , ஒரு பெண்யானையும் .கட்டிலும் , பெண்ணடிமையும் , போபத்ஹோட் என்ற அரசாங்க உடுப்பும் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் , 1379ம் ஆண்டில் பண்டித பராக்கிரமபாகு அரசர் இந்தியாவிலிருந்து புலவத்புத்திரா வென்னும் வெகு கியாதியுடைய ஆச்சாரியரை அழைத்துவந்து மன்னோசுவரா என்ற ஆலயத்தைக் கட்டினார் .அதற்காக அவ்வரசர் , முதுகல ராஜ கருணாதி வீரவர்த்தன விஸ்வ கந்தாச்சார்யர் என்ற பட்டப்பெயரும் , பஞ்சிகாலு என்ற ஒரு பெண் யானையும் , நான்கு அடிமைகளையும் , காரலாவென்ற கோட்டையும் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் , 1644ம் ஆண்டில் இரண்டாவது ராஜசிம்ம அரசர் .கீர்த்தி பெற்ற தேவசிம்ம மூலாச்சாரியரை இந்தியாவிலிருந்து தருவிப்பதற்கு வடுமூலாச்சாரி யென்பாரையும் ஒரு யானையையும் அனுப்பினார் .அவர் சிங்கள நாட்டுக்கு வந்து , அந்த அரசனுக்கு பல ஆலய கட்டிடங்களை நிர்மாணித்துக் கொடுத்ததுடன் தூர திருஷ்டிக் கண்ணாடியும் மணி பார்க்கும் கண்ணாடியும் செய்து கொடுத்து அரசனை மகிழ்வித்தார்.அரசர் " மண்டல வல்லி " என்னும் பட்டப்பெயரையும் , மங்கல நாமா என்னும் கிராமத்தையும் பரிசாக வழங்கினார் .இப்பொழுதும் அக்கிராமம் ஆச்சார்ய பரம்பரையிலேயே இருந்து வருகின்றதென்பது குறிப்பிடத்தகுந்தது .மற்றும் , ஒரு சிங்கள அரசருக்கு ஹலம்ஹொ முஹவூர் .ராஜபாக்ஷப ஹோதர சிதராம ஹோதல என்னும் விஸ்வகர்ம சிற்ப சிரேஷ்டர் ஒரு ராஜக்கிரகம் செய்து கொடுத்தார் .அதில் ஒரு விசேஷம் இருப்பதாகவும் , அது , கூர்மம் பூமியைத் தாங்கி , இருப்பதுபோல் அந்த கிரகம் ஒரு வெண்மையான பெரிய ஆமைமேல் அமைத்திருப்பதாகக் கூறினார் .அதை பரீக்ஷித்தறியும் போது ஒரு பிரம்மாண்டமான வெள்ளை ஆமை பூமியினின்றும் வெளிவந்து அந்த இடத்தை மூன்று பிரதட்சணம் .செய்து மீண்டும் பூமிக்குள் மறைந்தது .இந்த ஆச்சரியத்தைப் பார்த்த அரசன் சிற்பாச்சாரியருக்கு ஒரு யானையும் , மகுடமும் வெகுமதியாகக் கொடுத்தார் என்று மற்றெலியில் ஹுலம் கேகாவுகாவிலுள்ள சிலாசாசனத்தில் வரையப்பட்டுள்ளது .எனவே , சிங்கள நாட்டிலும் சிங்கள அரசர்கள் வேறு பாடின்றி தென்நாட்டிலுள்ள சிற்பாச்சாரியர்களை வெகு மரியாதையாக நடத்தினார்களென்பது மேலே காட்டிய சாசனங்களிலிருந்து நன்கு விளங்கும் , சோழநாட்டிலும் பல் சிலாசாசனங்கள் உண்டு .அவைகளுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது .தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்திலுள்ள கல்வெட்டு சாசனங்களாம் .இக்கோவிலின் வடக்கு வெளி மதிலில் ராஜ ராஜ சோழனாலும் , அவனுக்குப் பின் அரசாண்ட சோழமன்னர்களாலும் இக்கல்வெட்டுக்கள் அப்போதைக் கப்போதைய நிகழ்ச்சிகளையும் , முக்கிய அரசியல் காரியங்களையும் விளக்குவதாக வெட்டப்பட்டுள்ளன .இவைகளை ஒருங்கு சேர்த்து அரசியல் வெட்டெழுத்துப் பரிசோதகராயிருந்த டாக்டர் ஹுல்ஸ் என்பார் 1895ம் ஆண்டில் சென்னை கவர்ன்மெண்டார் சார்பில் புத்தகரூபமாக அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ளார் .இன்னும் பல தேவாலயங்களிலுள்ள கல்வெட்டுக்களையும் ஆராய்ந்துள்ளார் .' பிரஸ்தாப கல்வெட்டில் , ராஜ ராஜ சோழன் 19ம் வருட ஆட்சி காலத்தில் ஆலயத்தின் நிபந்தனைக்காரர்களையும் , மானியம் கொடுக்கப்பட்டவர்களையும் கூறுமிடத்து " தச்சாவாயக்கு " சில மானியங்கள் விடப்பட்டுள்ளன .அதே புத்தகம் 306 - ம் பக்கத்தில் விஜயராஜேந்திர ஆச்சாரியருக்கும் இவர் தான் முதன் முதலில் பொதுமக்கள் முன்னிலையில் ராஜராஜேச்சுவரம் என்ற நாடகத்தை இயற்றி மேடை நாடக வரலாற்றின் வித்தை ஊன்றியவர் ) மான்யாதிகள் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது .பன்னிரண்டாவது நூற்றாண்டில் , திருச்சிராப்பள்ளிக்குச் சமீபத்திலுள்ள உய்யக் கொண்டான் திருமலை தேவஸ்தான கோபுரத்தின் கிழக்கு , வடக்குச் சுவர்களில் , சுங்கம் தவிர்த்த குலோத்தங்கச் சோழனால் , சதுர்வேதி மங்கலத்தில் கூடிய பட்டர்களின் பரீட்சத்தின் முடிவு , சாசனமாக வெட்டப்பட்டுள்ளது .அது கூறுவதாவது : " கம்மாளர்கள் ரதகாரர்கள் வகுப்பைச் சேர்ந்தவர்கள் . இவர்கள் உபநயன சமஸ்காரத்திற்கும் , பிரமோபதேசத்திற்கும் உரியவர்கள் , இவர்கட்கு சிற்பம் , வாகனவேலை , விக்ரநிர்மாணம் , கோவில் , கோபுரங்கட்டுதல் , கும்பாபிஷேகம் செய்தல் விக்ரகங்களுக்குக் கண் திறத்தல் , யாக குண்டலங்கள் , பாத்திரங்கள் செய்தல் , கிரீடம் ஆபரணங்கள் செய்தல் முதலிய பிறவுமாம் , ' அக்காலத்தில் விஸ்வப்ராம்மணர்களுக்கும் , பார்ப்பனர்களுக்கும் ஏற்பட்ட விவாதத்தின் விளைவாக இக்கல்வெட்டு தோன்றியதாகும் . இச்சாசனங்களிலுள்ள விசேஷம் யாதெனில் " தச்சாச்சார்ய ' என்றும் " விஜய ராஜேந்திர ஆச்சாரியான் " என்ற பதங்கள் , கிரந்தலபியில் எழுவிதமான ' சா ' க்களில் இருந்தும் விஸ்வப்பிராம்மணர்களின் சிறப்பும் , ஆச்சார்யத்துவமும் நிரூபிக்கப்பட்டுள்ளது .இவ்வழக்கப்பாடு சென்ற சுமார் 1500 வருடங்களுக்கு முன்னரே இருந்ததென்றால் , பௌருஷேய விஸ்வப்பிராம்மணரின் தொன்மையைக் குறித்து ஏனோ சந்தேகமும் , சச்சரவும் வேண்டும் ?ஆருஷேயர் தங்களுக்கு ஆதாரமாக ஏதேனும் ஒரு சாசனத்தைக் காட்டக்கூடுமோ வென்பது அறிவாளிகளால் ஆராயத்தக்கது . இனி சம்மதிப் பத்திரங்களைப் பரிசீலனை செய்வோம் .விஜயநகர சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வத் ஜன சம்மதிப்பத்திரம் , கிபி 1756 - க்கு தாது ஸ்ரீ வைகாசசுக்லபக்ஷ துவிதியை குருவாரத்தில் ஸ்ரீ விஜயநகர ராம ராஜ மஹா ராஜா அவர்கள் சபையில் , வேத சாஸ்திர சம்பந்தர்களாக ஸ்ரீ கநுபர்த்தி பசவாச்சாரியாருக்கும் 49 ஆருஷேய பார்ப்பன பண்டிதர்கட்கும் இரதகார ” சப்தத்தைக் குறித்து நடைபெற்ற விவாதத்தில் , அந்த 49 ஆஸ்தான வித்வான்கள் தோல்வியுற்று , அவர்கள் முன்னரே ஒப்புக்கொண்டது போல் , வெற்றி பெற்ற ஸ்ரீ பசவாச்சாரி சுவாமிகளை பல்லக்கில் சுமந்து நகரப்பிரதட்சணம் செய்வித்தார்கள் .இந்த விவாதத்தில் இரதகாரர்களுக்கு பிராம்மணத்துவம் சந்தேகமற ஸ்தாபிதம் ஆயிற்று என 49 ஆஸ்தான வித்வான்களும் கைச்சாத்திட்டு சம்மதிப்பத்திரம் வழங்கியுள்ளனர் .ஏனைய விவரங்களை இரதகாராதிகரணம் என்னும் தெலுங்கு நூலில் மிக விரிவாகக் காணலாம் . ஸ்ரீமத் சிருங்கேரி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் சம்மதிப்பத்திரம் .சகாப்தம் 1673 பிரஜோற்பத்தி ஸ்ரீ சைத்ர சுத்த துதிகையில் கோல்ஹாபூர் லஷ்மணாச்சார்ய வகையறாக்களுக்கு ஸ்ரீ வித்தியாசங்கர பாரதி ஸ்வாமிகளாலும் , 1682 விக்கிரம சிராவண கிருஷ்ண நவமி புதவாரம் ஷோலாப்பூர் ஜில்லா வராண்டா விஸ்வப்பிராம்மண மகா ஜனங்களுக்கு யாகாதிகாரம் உண்டென ஸ்ரீ வித்யா நரசிம்ம பாரதி ஸ்வாமிகளாலும் , 1709 ஸ்ரீ பிலவங்க ஜேஷ்ட கிருஷ்ண பஞ்சம் பௌம வாரம் பம்பாய் மகா ஜனங்களான விஸ்கர்மப் பிராம்மணர்களுக்கு அவர்களது உத் கிருஷ்டமான பிறப்பையும் பிரம சந்ததியென ஒப்பியும் ஸ்ரீமத் வித்யாரண்ய பாரதி ஸ்வாமிகளாலும் , 1745 சுபா நுஸ்ரீ கிருஷ்ண துவாதசியில் வராடஸபாபதி ஆச்சார்ய வகையறாக்களுக்கு வேதாதிகாரமும் , பிரம்மசிருஷ்டியும் உண்டென்று ஒப்பி ஸ்ரீமத் பாலகிருஷ்ண பாரதி சுவாமிகளாலும் , 1750 சர்வதாரி ஸ்ரீ வைகாச சுத்த அஷ்டமி மங்கள வாரம் ஷோலாப்பூர் ஜில்லா வைராக விஸ்வகர்ம மகா ஜனங்களுக்கு பாஞ்சால சுவர்ணகாரர்கள் என்றும் , விஸ்வகர்ம முகோற்பவர்களான விஸ்வகர்ம சந்ததியார்களென்றும் , ஆச்சார்யரென்றும் , ஆதிப்பிராம்மணர்களென்றும் , வேதோக்த வைதீக கர்மாதிகார முடையவர்களென்றும் , சிற்ப வித்யா பிரவீணர்களென்றும் , அவர்கள் உயர்வு .அநேக சுருதி ஸ்மிருதி மீமாம்ச புராண இதிகாசங்களால் அறியப்படுகின்றனவென்றும் .ஸ்ரீமத் பாலகிருஷ்ண பாரதி ஸ்வாமிகள் கரவாது ஸ்ரீமுக சம்மதிப்பத்திரம் ஆதீன முத்திரையுடனும் கைச்சாத்துடனும் , அளித்துள்ளார் , மேலும் , சகாப்தம் 1878 தாது ஸ்ரீ சைத்திர சுக்கில பக்ஷம் குருவாரம் விஜயநகரம் விஜயராம் மகாராஜா அவர்கள் முன்னிலையில் , ஸ்ரீமத் சங்கராச்சாரிய ஸ்ரீ சங்கர பாரதி ஸ்வாமிகளாலும் , பேரூர் விப்பிர அக்கினி ஹோத்திரிகள் .தீஷிதர்கள் , கனபாடி .சாஸ்திரிகள் முதலிய வித்வத் ஜனங்களாலும் , சிருங்கேரி மடாலய தர்மகர்த்தா ஸ்ரீராம் சாஸ்திரிகளாலும் ஸ்ரீ காசி க்ஷேத்திர சுவாமி சாஸ்திரிவகையறாக்களாலும் , பிரதிஷ்டா க்ஷேத்திர வேத சாஸ்திர பாரங்கத வித்வத் ஜனங்களாலும் , பிருந்தாவன ராஜமகேந்திரம் அக்னி ஹோத்திரி வியாகரண பண்டிதர் பிராம்மணர்களென்றும் வேத யாகாதிகாரமுடையவர்களென்றும் , துவிஜோத்தமர்களென்றும் , வேத இதிகாச புராண ஆதாரங்களுடன் சம்மதிப் பத்திரங்கள் வழங்கியுள்ளனர். இன்னும் காசி க்ஷேத்திரத்தின் பண்டிதர்களால் சாலிவாகன சகாப்தம் 1686 புரட்டாசி விஜயதசமி யன்று ஸ்ரீ சங்கர பட்டரின் புத்திரரான ஸ்ரீ ஸியாமபட்டரவர்களால் இதர பண்டிதர்களின் சார்பாகக் கொடுத்த சம்மதிப்பத்திரம் : காசி க்ஷேத்திரத்தில் கொங்கணாதி தக்ஷிண தேசத்திலுள்ள விஸ்வகர்ம ப்ரம்ம வம்சத்தவர்களாய் தெய்வக்ஞ நாமத்தோடு விளங்கும் சில்ப சிரேஷ்டர்களின் பிண்ட தான விஷயத்தில் கேள்வியெழுந்தபோது ' க்ருஹபாஹாத் ஸமுத்ருத்ய .சருணா பாயஸே நவா , பிண்டதானம் ப்ரகுர் வீத த்வாஷ்ட்ர சார்த்தே க்ருதே ஸதி ' என்ற பவிஷ்ய புரோணோக்தத்தால் ( சரு , பாயசம் , பிண்டம் ) பிண்டதானம் அந்த சாஸ்திரப்படியே செய்யவேண்டுமென்று நிர்த்தாரணம் செய்து கோபிநாத பட்டர் முதல் .சிவராம பட்டர் ஈறாக 26 வித்வான்கள் கைச்சாதிட்டு சம்மதிப்பத்திரம் கொடுத்து விஸ்வகர்மப் பிராம்மணர்களைச் சிறப்பித்துள்ளார்கள் .