Translate

Thursday, 30 March 2017

விஸ்வகர்ம ஸூக்தம்

   ஸ்ரீ விஸ்வகர்ம ஸூக்தம்

ய இமா விஸ்வா புவநாநி ஜுஹ்வத்                                                  ருஷி ர்ஹோதா நிஷஸாதா பிதாந:|                                                                 ஸ ஆஸிஷா த்ரவிண மிச்ச மாந                                                  பரமச்சதோ வர ஆவிவேச ||
விஸ்வகர்மா மனஸா யத்விஹாயா                                                                                             தாதா விதாதா பரமோத ஸந்த்ருக் ||                                                 தேஷா மிஷ்டாநி ஸமிஷா மதந்தி                                                                                  யத்ர ஸப்தரிஷீந் பர ஏக மாஹு: ||
யோ ந: பிதா ஜநிதா யோ விதாதா                                              யோநஸ் ஸதா அப்யாஸ ஜ்ஜஜாந |                                                     யோ தேவாநாம் நாமதா ஏக ஏவதகும்                                                        ஸம்ப்ரச்நம் புவநா யந்த்யந்யா ||
த ஆயஜந்த த்ரவிணகும் ஸமஸ்மா                                                    ருஷய: பூர்வே ஜரிதாரோ ந பூநா ||                                                            அ ஸுர்தா ஸ்ஹுர்தா ரஜஸோ விமாநே                                               யே பூதாநி ஸமக்ருண் வந்நிமாநி ||
ந தம் விதாத ய இதம் ஜஜாநாந்ய                                                                                  த்யுஷ்மாக மந்த்ரம் பவாதி |                                                      நீஹாரேண ப்ராவ்ருதா ஜல்ப்யாசாஸு                                             த்ருப உக்தஸாஸ ச்சரந்தி ||  
பரோ திவா பர ஏநா ப்ருதிவ்யா                                                           பரோ தேவேபி ரஸுரை ர்குஹாயத் |                                                       கக் கஸ் வித்கர்பம் ப்ரதமம் தத்ர ஆபோ                                            யத்ர தேவா ஸ்ஸமகச்சந்த விஸ்வே ||
விஸ்வகர்மாஹ்ய ஜநிஷ்ட தேவ                                                       ஆதித் கந்தர்வோ அபவ த்விதீய: |                                                  த்ருதீய: பிதா சுநிதௌ ஷதீநாம்                                                     அபாம் கர்பம் வ்யததாத் புருத்ரா ||
விஸ்வதசக்ஷு ருத விஸ்வதோ முகோ                                    விஸ்வதோ ஹஸ்த உத விஸ்வ தஸ்பாத் |                                            ஸம் பாஹுப்யாம் நமதி ஸம்பதத்ரைர்                         த்யாவாப்ருதிவீ ஜநயம் தேவ ஏக: ||
கிக்கும் ஸ்விதாஸீ ததீஷ்டாந மாரம்பநம்                                        கதமத் ஸ்வித்கி மாஸீத் யதி பூமிம் ஜநயந் |                         விஸ்வகர்மா வித்யா மௌர்ணோ                                             ந்மஹிநா விஸ்வ சக்ஷா: ||
யா தே தாமாநி பரமாணி யாவமா                                                          யா மத்யமா விஸ்வகர்மந்து தேமா |                                                சிக்ஷா ஸகிப்யோ ஹவிஷிஸ்வதாவ                                             ஸ்வயம் யஜஸ்வ தநுவம் ஜுஷாண: ||
கிக்ம்ஸ்வித் வநம் க உ ஸ வ்ருக்ஷ ஆஸீ                                       த்யதோ த்யாவாப்ருதிவீ நிஷ்டதக்ஷு : |                               மநீஷிணோ மநஸா ப்ருச்சதே துதத்ய                                 தத்யதிஷ்டத் புவநாநி தாரயந் ||
விஸ்வகர்மண் ஹவிஷா வாவ்ருதாந                                          ஸ்வயம் யஜஸ்வ தநுவம் ஜுஷாண: |                                         முஹ்யம் த்வந்யே அபிதஸ்ஸபத்நா                                 இஹாஸ்மாகம் மகவா ஸூரி ரஸ்து ||
வாசஸ்பதிம் விஸ்வகர்மாண மூதயே                                   மநோயுஜம் வாஜே அத்யாஹுவேம |                                              ஸநோ நேதிஷ்டா ஹவநாநி ஜோஷதே                                       விஸ்வசம்பூ ரவஸே ஸாதுகர்மா ||
விஸ்வகர்மண் ஹவிஷா வர்தநேந                                                த்ராதாரா மிந்தர மக்ருணோ ரவத்யம் |                                                தஸ்மை விசஸ்ஸமந மந்த பூர்வீ                                                                                  ரய முக்ரோ விஹவ்யோ யதா ஸத் ||
ஸமுத்ராய வயுநாய ஸிந்தூநாம் பதயே நம:                              நநீநாகும் ஸர்வாஸாம் பித்ரே ஜுஹுதா                      விஸ்வகர்மணே விஸ்வாஹாமர்த்யம் ஹவி: ||

விஸ்வகர்ம சங்க கால புலவர்கள்

சங்ககாலப் விஸ்வகர்ம புலவர்கள் சங்க காலத்தில் தமிழ் வளர்த்த பெருமை விஸ்வகர்மா சமூகத்திற்கு உண்டு. விஸ்வகர்மா சமூகத்தைச் சார்ந்த சங்க கால புலவர்கள் சிலர் இதோ: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் குட்டுவன் கீரனார் மதுரை கணக்காயனார் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர் குடவாயிற் கீர்த்தனார் வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் தங்கால கொற்கொல்லனார் வடமவண்ணக்கன் தமோதனார் பொருத்தில் இளங்கீரனார் மதுரை நக்கீரர் மோசி கீரனார் மதுரை வேளாசன் (புறநானூறு) அத்தில் இளங்கீரனார் இடையன் நெடுங்கீரனார் உமட்டூர் கிழார் மகனார் இளங்கீரன் எயினந்தை மகனார் இளங்கீரன் கழாக்கீரன் எயிற்றியர்(பெண் புலவர்) செல்லூர்கிழார் மகனார் பெரும் பூதக்கொற்றனார் செயலூர் இறும்பொன் சாத்தன் கொற்றனார் மதுரை பொன்செய் கொல்லன் வெண்ணகனார் இடையன் சேதங் கொற்றனார் இம்மென் கீரனார் உவர்க் கண்ணூர்ப் பல்லங் கீரனார் குடவாயிற் கீர்த்தனார் பறநாட்டு பெரும் கொற்றனார் நக்கீரர் (அகநானூறு) இளங்கீரந்தையர் இருந்தையூர் கொற்றன் புலவன் உறையூர் முதுகூத்தனார் இளங்கீரன் உறையூர் முது கொற்றன் முதுகூத்தனார் கொல்லன் அழிசி குறுங்கீரன் கோழிக் கொற்றன் கொற்றன் கச்சிப்பட்டி பெருந்தச்சன் சேத்தன் கிரன் முடக்கொல்லனார் வினைதொழிற்சேர் கீரனார் மூலங்கீரனார் மதுரை கொல்லன் வெண்ணகனார் நற்றம் கொற்றனார் பாலங்கொற்றனார் தும்பி சேர் கீரனார் குடவாயிற்கீரத்தனன் பெருங்கொற்றனார் கீரங்கண்ணனார் காசிப்பண் கீரனார் கணக்காயனார் கண்ணன் கொற்றனார் கண்ணகாரன் கொற்றனார் கந்தரெத்தனார் பெருந்தச்சனார் எயினந்தையார் இளங்கீரன் அல்லங்கீரனார் குமரனார் மோசிகொற்றன் வெண்கொற்றன் பெருங்கொல்லன் கோடங்கொல்லன் கிரந்தை (குறுந்தொகை)

Wednesday, 29 March 2017

விஸ்வகர்ம வழிபாடு



விஸ்வகர்மா வழிபாடு!
நாம் நவராத்திரி கடைசி நாளில் சரஸ்வதி - ஆயுத பூஜை கொண்டாடுவதுபோல், வட இந்திய மாநிலங்களான, திரிபுரா, அஸ்ஸாம், பீகார், ஜார்கண்ட், மே.வங்கம், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் விநாயக சதுர்த்தி முடிந்த சில நாட்களுக்குப் பிறகு வெகு கோலாகலமாக வணங்கப்படும் ஆயுத பூஜை விழாவுக்கு ‘விஸ்வகர்மா பூஜை’ என்று பெயர். புராண கால தேவலோகச் சிற்பி, சிறந்த கட்டடக்கலை நிபுணர், பொறியியல் வல்லுநர், தொழில் படைப்பாற்றலுக்கானத் தெய்வம் என அழைக்கப்படுபவர் விஸ்வகர்மா. மனிதன் பொறியியல் கல்வி விஞ்ஞானத்தைப் பற்றி அறிந்து கொள்ள மூலகாரணமாக இருப்பவர் இவர்தான். தொழிலாளர்களுக்கும், கைவினைக் கலைஞர்களுக்கும் ஞானம் அளிப்பவர். அழகுப் பெட்டகமென, உள்ளம் கவரும் கலை ரசனைமிக்க, குறைபாடில்லாத சிற்பங்களை உள்ளடக்கிய கட்டடங்களை உருவாக்குவதில் வல்லமை மிக்கவர். பூமி, உலகம், தேவலோகம் ஆகிய அனைத்துக்கும் பிரம்ம தேவனின் ஆணைக்கிணங்க அழகான வடிவம் தந்தவர். சத்ய யுகத்தில் சொர்க்கத்தையும், திரேதாயுகத்தில் தங்கத்தில் ஜொலித்த இலங்கையையும், துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணனின் துவாரகையையும் நிர்மாணித்தவர். இவைதவிர, இந்திரன், யமன் அரண்மனை, கடலுக்குக் கீழ் வருணனுக்கு மாளிகை மற்றும் அஸ்தினாபுரம், இந்திரப்ரஸ்தம் நகர்களையும் உருவாக்கியவர். இவைமட்டுமின்றி, தேவர்கள், தேவியர் அணிந்திருந்த பல்வேறு ஆபரணங்களைத் தயாரித்தவரும் இவரே! தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தன் உடல் எலும்புகளால் பலவிதமான ஆயுதங்களை விஸ்வகர்மாவைச் செய்யச் சொன்னார் ததீசி ரிஷி (தயிரை மட்டுமே உணவாகக் கொண்டு வாழ்ந்ததால் ‘ததீசி’ எனப் பெயர் உண்டாயிற்று). அவரின் முதுகுத் தண்டுவடத்தைக் கொண்டு உருவானதே இந்திரனின் ‘வஜ்ராயுதம்.’ சூரியனின் மனைவியான இவரது மகள் சஞ்சனா, கணவரின் உஷ்ணம் நிறைந்த கதிர்களின் தீவிரத்தைச் சற்றுக் குறைக்கும்படி தந்தையிடம் வேண்ட, இவரும் சூரியனிடமிருந்து எட்டில் ஒரு பங்கு பிரகாசத் தீவிரத்தைக் குறைத்தார். கீழே விழுந்த அந்தத் துகள்களிலிருந்து விஷ்ணுவுக்கு ‘சுதர்சனம்’ என்ற சக்ராயுதத்தையும், சிவனுக்குத் ‘திரிசூல’த்தையும், தேவர்களின் உபயோகத்துக்காகப் ‘புஷ்பக விமான’த்தையும் (மார்க்கண்டேயப் புராணத்தில் முருகனுக்குரிய ‘வேலாயுதம்’ எனக் குறிக்கப்படுகிறது) உருவாக்கினார். மேலும், தான் இயற்றிய ‘ஸ்தாபத்ய வேதம்’என்ற நூலில் 64-வகை இயந்திரவியல் நுணுக்கங்கள், சிற்பக்கலை அறிவாற்றல் பற்றிய விளக்கங்களையும் விவரித்திருக்கிறார். பொதுவாக, இவர் கனத்த உடல்வாகு கொண்டவராக, வயது முதிர்ந்த, மதிநுட்பம் நிறைந்தவராகச் சித்தரிக்கப்படுகிறார். ஐந்து முகங்கள் உடையவராக ‘ரிக் வேத’த்தில் கூறப்பட்டாலும், ஒரு முகம், நான்கு கரங்கள் கொண்டவராக உருவகப்படுத்தப்படுகிறார். உடலில் தங்க நகைகள் அணிந்து, ஒரு கையில் நீர் கலசம், ‘இரண்டாவதில் புத்தகம், மற்றொன்றில் சுருக்குக் கயிறு, பிறிதொன்றில் சிற்றுளியுடன் காட்சி தருகிறார். சுறுசுறுப்பான படைப்புத் திறனுக்கு அதிபதியாதலால் அதற்குரிய சிவப்பு வண்ணப் பின்புலத்திலேயே, யானை வாகனத்தில் (அன்னமும் உண்டு) அமர்ந்தவராகக் காணப்படுகிறார். எட்டு வஸுக்களில் கடைசி இளவல் பிரபாஸ வஸு (‘விடியலின் பிரகாசம்’ எனும் இவர், வசிஷ்ட முனிவரின் சாபத்தினால் மறுபிறவியில் கங்கை - மகாராஜா சந்தனுவின் எட்டாவது மகன் தேவவிரதன் என்ற பீஷ்மராகப் பிறந்தவர்) - யோகசித்தா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். (இவருக்கு பிரஹஸ்தி என்ற ஒரு சகோதரியும் உண்டு) இவர் மனைவியின் பெயர் காயத்ரி. இவர்களது ஐந்து மகன்களும் புகழ்மிக்க முனிவர்களாகவும், தந்தையைப் போன்று தங்கள் தங்கள் துறைகளில் தலைசிறந்த விற்பன்னர்களாகவும் விளங்கினர். அவர்கள் மனு (கருமான் என்கிற கொல்லன்), மயன் (தச்சர்), த்வஸ்தா (உலோக வேலைப்பாடு மற்றும் வார்ப்படத் துறை), சில்பி (கைவினைக் கலைஞர், கொத்தனார்) மற்றும் விஸ்வஞர் (தங்கம், வெள்ளி, இரத்தினம், வைர நகைகள் தயாரிக்கும் பொற்கொல்லன்) ஆவர். இப்படிப்பட்டப் புகழ் வாய்ந்தவருக்கு அவர் வழி வந்தவர்கள், அவர் பிறந்த தினமாகக் கருதப்படும் நாளில் விழா கொண்டாடுகிறார்கள். விஸ்வகர்மா ஜயந்தி நாளாகச் சொல்லப்படுவது ஒன்றல்ல; இரண்டு நாட்கள். ஒன்று, ரிஷி பஞ்சமி தினம். மனிதர்கள் போல் பிறந்த நாள் என்பது விஸ்வகர்மாவுக்குக் கிடையாது என்பது ஒரு சாராரின் கருத்து. கல்வி, கேள்விகளில் சிறந்த தங்கள் தகப்பனாரை நினைவு கூறும் வகையில் அவரது ஐந்து மகன்களும் சேர்ந்து அவர் காண்பித்த வழியை உறுதியுடன் பின்பற்றிச் செல்வதாக உறுதியேற்ற இந்நாளையே வெகுசிலர் பின்பற்றுகிறார்கள். மற்றொன்று, கன்னி சங்கராந்தி தினம் - இதுவே அனைவராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, வட இந்தியப் பஞ்சாங் கப்படி பாத்ரபத் (புரட்டாசி) மாதம் முடியும் கடைசி நாளன்று, சூரியன் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடம் பெயரும் போது விஸ்வகர்மா பூஜை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. எப்போதும் செப்டம்பர் 17 - ஆம் தேதியே இந்நாளாக விளங்குகிறது. அன்றைய தினம், கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் காரியாலயங்களில் தாங்கள் கையாளும் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்களைச் சுத்தப்படுத்தி, புது வண்ணம் பூசி ஜோடிப்பார்கள். செய்யும் தொழில் வளமுடன் பெருகவும், விபத்துகளின்றி நாட்கள் நகரவும் தேவலோகச் சிற்பியின் அருள் வேண்டி கோலாகலமாக விழா நடத்தப்படும். புதிய பொருட்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தவும், உற்பத்தித் திறனைப் பெருக்கவும், தொழிலாளர்கள் விஸ்வகர்மா சிலை அல்லது படத்தின் முன் உறுதிமொழி எடுப்பார்கள். அன்றைய தினம் விடுமுறை விட்டு மறுநாள் வேலையைத் தொடர்வார்கள். கலைத்திறனுக்கும், அதன் மேம்பாட்டுக்கும் உதாரணமாய் விளங்கும் விஸ்வகர்மாவின் நினைவுக்கு ஒரு சான்றாக எல்லோராவின் பத்தாம் குகை அமைந்துள்ளது.

Friday, 24 March 2017

விஸ்வபிரம்ம ஸ்தோத்ரம்

 ஸ்ரீ விஸ்வகர்ம காயத்ரி மந்த்ரம்


ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே விராட்புருஷாய தீமஹி| 

தந்நோ விஸ்வ கர்ம ப்ரசோதயாத்||

ஓம் விஸ்வாய விஸ்வகர்மஞ்ச விஸ்வமூர்த்தி பராத்பரம் |

விஸ்வ மாதா பிதா சைவ விஸ்வகர்மண் நமோஸ்துதே ||

ஓம் விஸ்வமங்கள மாங்கல்யே விஸ்வ வித்யா விநோதி நே |

விஸ்வ ஸம்ஸார பீஜானாம் விஸ்வகர்மண் நமோஸ்துதே  ||

ஓம் நமஸ்தே விஸ்வரூபாய விஸ்வ பீஜா௬ய தே நம: |

நமோ விஸ்வாத்ம பூதாத்மன் விஸ்வகர்மண் நமோஸ்துதே ||



                 ஸ்ரீ விஸ்வகர்ம அஷ்டகம்

ஆதிரூப நமஸ்துப்யம் நமஸ்துப்யம் பிதாமஹ: விராடாக்ய நமஸ்துப்யம் விஸ்வகர்மண் நமோ நம:

ஆக்ருதி: கல்பநா நாத த்ரிநேத்ர ஞான நாயகா: ஸர்வஸித்தி ப்ரதா தாத்வம் விஸ்வகர்மண் நமோ நம:

புஸ்தகம் ஞான சூத்ரஞ்ச காமிச சூத்ரம் கமண்டலம் த்ருத்வா ஸம்போஹயன் தேவா விஸ்வகர்மண் நமோ நம:

விஸ்வாத்மா(அ)துப்த ரூபேனா நாநாகஷ்ட விதார க தாரகோ அநாதி சம்சாராத் விஸ்வகர்மண் நமோ நம:

ப்ரம்மாண்டாகல தேவானாம் ஸ்தாநம் ஸ்வரூப தலம் தலம் லீலயா ரஜிதம் ஏந விஸ்வரூபாயதே நம:

விஸ்வ வ்யாபின் நமஸ்துப்யம் த்ரியம்பகோ ஹம்ஸ வாஹந: ஸர்வ க்ஷேத்ர நிவாஸாக்யா விஸ்வகர்மண் நமோ நம:

நிராபாசாய நித்யாய ஸத்யக்ஞானாந்தராத்மனே விசுக்தாய விதூராய விஸ்வகர்மண் நமோ நம:

நமோ வேதாந்த வேத்யாய வேதமூல நிவாஸிநே          நமோ விவிக்த சேஷ்டாய விஸ்வகர்மண் நமோ நம:

பலஸ்ருதி

            யோ நர: படேந் நித்யம் விஸ்கர்மாஷ்டகம் த்விதம்

            தநம் தர்மஞ்ச புத்ரஞ்ச லபே தந்தே பராங்கதி:

இதி ஸ்ரீ விஸ்வகர்ம அஷ்டகம் ஸம்பூர்ணம்.


              ஸ்ரீ விஸ்வகர்ம த்யானம்

ஏக சிம்மாஸனா ஸீனம் ஏக மூர்த்தி ஸ்ருணத்வஜம்

பஞ்ச வக்த்ரம் ஜடாமகுடம் பஞ்சாதஸ விலோசனம்

ஸத்யோ ஜாதானனம் ஸ்வேதம் வாம தேவந்து க்ருஷ்ணகம்

அகோரம் ரக்தவர்ணஞ்ச தத் புருஷம் பீதவர்ணகம்

ஈஸான்யம் ஸ்யாமவர்ணஞ்ச ஸரீரம் ஹேம வர்ணகம்

தஸபாஹு ஸமாயுக்தம் கர்ணகுண்டலம் ஸோபிதம்

பீதாம்பர தரம் தேவம் நாக யக்ஞோபவீதனம்

ருத்ராக்ஷ மாலாபரணம் வ்யாக்ர சர்மோத்தரீயம்

அக்ஷமாலாஞ்ச பத்மஞ்ச நாகஸூல பிநாகிநம்

மேரும் வீணாஞ்ச பாணஞ்ச சங்க சக்ர ப்ரகீர்த்திதம்

கோடி ஸூர்யப் ப்ரதிகாஸம் ஸர்வ ஜீவ தயாபரம்

தேவ தேவ மஹாதேவம் விஸ்வகர்ம ஜகத்குரும் 

த்ரிலோகஞ் ஸ்ருஷ்டி கர்த்தாரம் விஸ்வப்ரமம் நமோஸ்துதே||

    ஸ்ரீ விஸ்வகர்ம ஸூக்தம்

ய இமா விஸ்வா புவநாநி ஜுஹ்வத்                                                  ருஷி ர்ஹோதா நிஷஸாதா பிதாந:|                                                                 ஸ ஆஸிஷா த்ரவிண மிச்ச மாந                                                  பரமச்சதோ வர ஆவிவேச ||
விஸ்வகர்மா மனஸா யத்விஹாயா                                                                                             தாதா விதாதா பரமோத ஸந்த்ருக் ||                                                 தேஷா மிஷ்டாநி ஸமிஷா மதந்தி                                                                                  யத்ர ஸப்தரிஷீந் பர ஏக மாஹு: ||
யோ ந: பிதா ஜநிதா யோ விதாதா                                              யோநஸ் ஸதா அப்யாஸ ஜ்ஜஜாந |                                                     யோ தேவாநாம் நாமதா ஏக ஏவதகும்                                                        ஸம்ப்ரச்நம் புவநா யந்த்யந்யா ||
த ஆயஜந்த த்ரவிணகும் ஸமஸ்மா                                                    ருஷய: பூர்வே ஜரிதாரோ ந பூநா ||                                                            அ ஸுர்தா ஸ்ஹுர்தா ரஜஸோ விமாநே                                               யே பூதாநி ஸமக்ருண் வந்நிமாநி ||
ந தம் விதாத ய இதம் ஜஜாநாந்ய                                                                                  த்யுஷ்மாக மந்த்ரம் பவாதி |                                                      நீஹாரேண ப்ராவ்ருதா ஜல்ப்யாசாஸு                                             த்ருப உக்தஸாஸ ச்சரந்தி ||   
பரோ திவா பர ஏநா ப்ருதிவ்யா                                                           பரோ தேவேபி ரஸுரை ர்குஹாயத் |                                                       கக் கஸ் வித்கர்பம் ப்ரதமம் தத்ர ஆபோ                                            யத்ர தேவா ஸ்ஸமகச்சந்த விஸ்வே ||
விஸ்வகர்மாஹ்ய ஜநிஷ்ட தேவ                                                       ஆதித் கந்தர்வோ அபவ த்விதீய: |                                                  த்ருதீய: பிதா சுநிதௌ ஷதீநாம்                                                     அபாம் கர்பம் வ்யததாத் புருத்ரா ||
விஸ்வதசக்ஷு ருத விஸ்வதோ முகோ                                    விஸ்வதோ ஹஸ்த உத விஸ்வ தஸ்பாத் |                                            ஸம் பாஹுப்யாம் நமதி ஸம்பதத்ரைர்                         த்யாவாப்ருதிவீ ஜநயம் தேவ ஏக: ||
கிக்கும் ஸ்விதாஸீ ததீஷ்டாந மாரம்பநம்                                        கதமத் ஸ்வித்கி மாஸீத் யதி பூமிம் ஜநயந் |                         விஸ்வகர்மா வித்யா மௌர்ணோ                                             ந்மஹிநா விஸ்வ சக்ஷா: ||
யா தே தாமாநி பரமாணி யாவமா                                                          யா மத்யமா விஸ்வகர்மந்து தேமா |                                                சிக்ஷா ஸகிப்யோ ஹவிஷிஸ்வதாவ                                             ஸ்வயம் யஜஸ்வ தநுவம் ஜுஷாண: ||
கிக்ம்ஸ்வித் வநம் க உ ஸ வ்ருக்ஷ ஆஸீ                                       த்யதோ த்யாவாப்ருதிவீ நிஷ்டதக்ஷு : |                               மநீஷிணோ மநஸா ப்ருச்சதே துதத்ய                                 தத்யதிஷ்டத் புவநாநி தாரயந் ||
விஸ்வகர்மண் ஹவிஷா வாவ்ருதாந                                          ஸ்வயம் யஜஸ்வ தநுவம் ஜுஷாண: |                                         முஹ்யம் த்வந்யே அபிதஸ்ஸபத்நா                                 இஹாஸ்மாகம் மகவா ஸூரி ரஸ்து ||
வாசஸ்பதிம் விஸ்வகர்மாண மூதயே                                   மநோயுஜம் வாஜே அத்யாஹுவேம |                                              ஸநோ நேதிஷ்டா ஹவநாநி ஜோஷதே                                       விஸ்வசம்பூ ரவஸே ஸாதுகர்மா ||
விஸ்வகர்மண் ஹவிஷா வர்தநேந                                                த்ராதாரா மிந்தர மக்ருணோ ரவத்யம் |                                                தஸ்மை விசஸ்ஸமந மந்த பூர்வீ                                                                                  ரய முக்ரோ விஹவ்யோ யதா ஸத் ||
ஸமுத்ராய வயுநாய ஸிந்தூநாம் பதயே நம:                              நநீநாகும் ஸர்வாஸாம் பித்ரே ஜுஹுதா                      விஸ்வகர்மணே விஸ்வாஹாமர்த்யம் ஹவி: ||

Monday, 20 March 2017

காலாங்கி நாதர்

காலாங்கி நாதர். இந்தப் பெயருக்குக்கூட, ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்கள் உண்டு. அங்கி என்றால் ஆடை என்றும் அணிவது என்றும் பொருள். காலாங்கி என்றால் காலத்தையே ஆடையாக அணிந்தவர் என்பார்கள். இல்லையில்லை, அவர் காலாங்கி நாதர் இல்லை. காளாங்கி நாதர்... அதாவது காளம் என்றால் கடுமையானது என்று பொருள். அப்படிப்பட்ட கரிய நிறத்தையே ஆடை போல உடம்பு முழுக்க பெற்றவர் என்றும் கூறுவர் சிலர். இதுவும் பிழை... எப்பொழுது ஒருவர் நாதர் என்று தன்னை குறிப்பிடுகிறாரோ, அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட இறை அம்சத்துக்கோ இல்லை தன்னைக் கவர்ந்த அம்சத்துக்கோ தன்னை இனியவராகவும் அடிமையாகவும் ஆக்கிக் கொண்டவர். அப்படிப் பார்த்தால் காளாங்கி எனப்படும் சிவாம்சத்துக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டு காளாங்கி நாதரானவர் அவர் என்பார்கள். உண்மையில், அவர் பெயர்க்காரணம் துல்லியமாக விளங்கவில்லை. தனது பெயர்க் காரணம் பற்றி எங்கும் அவர் கூறவில்லை. வாழ்க்கை குறிப்பு காளாங்கி நாதர், தனக்கான ஜீவன் விடுதலை குறித்துதான் பெரிதும் சிந்தித்தார். ஊரையும் உலகையும் வழிப்படுத்த வேண்டும். அதற்கே நமக்கு இந்த ஜென்மம் என்றெல்லாம் அவர் எண்ணவே இல்லை. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை கடைத்தேற்றிக் கொண்டாலே போதும்; சமுதாயம் தானாக மாறிவிடும் என்பதற்கு ஒரு முன் உதாரணம் போலவும் காலாங்கிநாதர் விளங்குகிறார் எனலாம். இவரது குருநாதர், திருமூலர். சீடனை பல விஷயங்களில் கடைத்தேற்றியவர். காலாங்கிநாதர், பேச்சைவிட கேட்டல் பெரிதென்று எண்ணியிருந்தார். எனவே அவர் பற்பல சித்தர்களது உபதேசங்களைத் தேடி அலைந்தார். பலரது உபதேசங்கள் அவரைத் தேடியே வந்தன. இப்படித்தான் ஒருமுறை, பூமியில் பிரளயம் ஏற்பட்டது. நிலப்பரப்பு முற்றும் நீரால் சூழ்ந்தது. மலைமுகடுகள் மட்டும் தப்பித்தன. மலை முகடுகளில் தான் சித்த புருஷர்களும் வசித்து வந்தனர். அவர்களை சந்திக்கும் பாக்கியம், பிரளயத்தால் காலாங்கிநாதருக்கு கிட்டியது. அதற்கு முன்பே காலாங்கிநாதர் காயகற்பங்கள் தயாரிப்பதில் நிபுணராக விளங்கினார். அதேபோல குளிகைகள் செய்வதிலும் வல்லவராக இருந்தார். உயிருள்ள அனைத்தும் உள்வெளித் தொடர்பு இயக்கத்தால் ஒரு நிலையில் இருக்காது. அதை நடுநிலைப்படுத்திவிட்டால் நீராக இருந்தால் மிதக்கலாம். காற்றாக இருந்தால் பறக்கலாம். உயிருள்ள மனிதன், சுவாசச் செயல்பாடு காரணமாக சதா புறத் தொடர்புடன் இருக்கிறான். இறந்தபின் அந்தத் தொடர்பு அற்று விடுகிறது. இதனால், எத்தனை திடமானதாக அவன் உடல் இருந்தாலும், மிதக்கிறது. அதற்கு முன்வரை திடமற்றதாகவே இருந்தாலும் மூழ்கித்தான் போகிறது. பறவைகள் பறப்பதன் பின்னணியிலும் இப்படி ஒரு நிலைப்பாடு இருந்து, அதுவே பறக்கத் துணை செய்கிறது. நுட்பமான சிந்தனைகளால் இவைகளை அறிந்த காலாங்கி நாதர், குளிகைகளை தயாரித்து அதை வாயில் போட்டுக் கொள்வதன் மூலம் புறத்தில் மூச்சடக்கி, அகத்துக்குள் குளிகை மூலமாகவே பிராண சக்தியைத் தந்து, உடம்பை புறத்தில் இருந்து பிரித்து, மிதத்தல் பறத்தல் போன்ற செயல்பாடுகளை சாதாரணமாக செய்பவராக விளங்கினார். அவரது குளிகைகளும் காற்றுக்குச் சமமான பிராண சக்தியை அளிப்பதாக இருந்தன. இதனால், சித்தர்கள் பலர் காலாங்கிநாதரை ஒரு விஞ்ஞானியாகவே பார்த்து வியந்தனர். பிரளய சமயத்தில், மலை உச்சியில் இருந்த சித்தர்கள், காலாங்கிநாதரின் குளிகை ஞானத்தை அவர் வாயாலேயே கேட்டும் அறிந்தனர். அப்போது, ‘தானறியும் அனைத்தும் பிறர்க்குக் கொடுக்கவே’ என்கிற ஒரு தர்ம உணர்வை அவருக்குள் விதைத்தனர். ‘‘நீ அறிந்ததெல்லாமும் கூட பிறர் கொடுத்த ஞானத்தால்தானே?’’ என்று கேட்டு, அவரைக் கிளறிவிட்டனர். அப்படியே மலைத் தலங்கள் ஏன் சித்தர்கள் வாழக் காரணமாகிறது என்பதையும் விளக்கினார். ‘பூமியில், தட்டையான நிலப்பரப்பில் திக்குகள் தெளிவாகத் தோன்றி ஒன்பது கிரக சக்திகளும் அந்த நிலப்பரப்பில் தங்களுக்குரிய பாகங்களில் நிலைபெற்ற பிறகே, அந்த மண்ணை, பின் அந்த மண்ணுக்குரியவனை ஆட்சி செய்கின்றன. மலையகத்தில் இப்படித் தட்டையான நிலப்பரப்பு இல்லை. மலை என்றாலே கூர்மையானது என்றும் ஒருபொருள் உண்டு. காற்று கூட இங்கே குளிர்ந்து விடுகிறது. இயக்க சக்தியான வெப்பமும் முழுத் திறனோடு இருப்பதில்லை. நீரும் நிலை பெறுவதில்லை... எவ்வளவு மழை பெய்தாலும் கீழே ஓடி விடுகிறது. மொத்தத்தில், பஞ்ச பூதங்கள் இங்கே தங்கள் இயல்புக்கு மாறாகவே விளங்குகின்றன. அடுத்து, கிரகங்கள் காலூன்றி அமர்ந்து சக்தி கொள்ள, சரிவான பரப்பில் இடமில்லை. இதனால், உலகப்பற்றை கைவிட்டு பஞ்ச பூத சக்திகளின் அதிவலுவான பிடியில் இருந்து தப்பித்து, தன் இச்சைப்படி சுதந்திரமாக செயல்பட, மலையகங்கள் துணை செய்வதை, ஓர் உபதேசமாகவே காலாங்கிநாதர் பெற்றார். எனவேதான் சிங்கம், புலி போன்ற வலிய மிருகங்கள் கானகத்தை, குறிப்பாக மலைக் கானகத்தை வலிமையானதாகக் கருதுகின்றன. தங்களுக்கு அங்கே பாதுகாப்பு இருப்பதாகவும் எண்ணுகின்றன. மலைச் சிறப்பை உணர்ந்த காலாங்கிநாதர், அங்கே புலிவடிவில் திரிந்த சித்தர் ஒருவரை இனம் கண்டு கொண்டார். ஒரு தவசி, மான் தோலில் அமர்ந்து தவம் செய்கிறார் என்றால், அவர் புலிபோல ஒரு சக்திக்குள் அடங்கி மோட்சம் பெற எண்ணுகிறார் என்பது நுட்பப் பொருள். அதே சமயம், புலித்தோல்மேல் அமர்ந்து ஒருவர் தவம் செய்தால், மற்ற அனைத்தையும் அடக்கி அவர் மோட்சம் செல்லத் தயாராகிறார் என்பதே நுட்பமான உட்பொருளாகும். பிற காரணங்கள், காலத்தால் பலரது எண்ண நுட்பங்களால் உருவானவைகளாக இருக்கலாம். காலாங்கி நாதரும், அடக்கி ஆளும் புலியானது அடங்கிய நிலையில் சாதுவாக இருப்பதை முதலில் உணர்ந்தார். அந்த மாறுபட்ட இயல்பை வைத்தே, அவர், அந்தப் புலி, தோற்றத்தில் தான் புலி; அதன் உயிர் அம்சம் வேறாக இருக்கலாம் என்பதை அறிந்து, துணிந்து அதன் முன்சென்று நின்றார். அந்தத் துணிவைக் கண்ட புலியும் சித்த புருஷராகத் தோன்றி, காலாங்கிநாதரின் பட்டறிவைப் பாராட்டினார். வாழ்வில் பல உண்மைகள் இப்படித்தான், இயல்புக்கு மாறுபட்ட இடத்தில், சில காரணங்களுக்காக ஒளிந்துள்ளன. அவைகளை கண்டறியத் தெரிந்தவனே ஞானி என்று உபதேசித்தார். அவர் கருத்து, காலாங்கி நாதரை புடம் போட்டது. இந்த உலக வாழ்க்கையை ஒருவார்த்தையில் கூறுவதானால், ‘மாயை’ என்பார்கள். மாயை என்றால், ‘இருந்தும் இல்லாமல் இருப்பது’ என்பதே பொருள். அடுத்து, நிலைப்பாடுகளில் மாறிக் கொண்டே இருக்கும். கடலோரமாய் அலைகள் எழும்புகின்றன. அந்த அலையின் ஒரு பாகம் உயர்ந்திருக்கும். மறுபாகம் தாழ்ந்திருக்கும். அதே மறுபாகம் அடுத்து உயர, உயர்ந்த பாகம் தாழும் இதில் உயர்வு தாழ்வை பார்க்கவே முடியாது. இரண்டும் சேர்ந்ததே அலை! அந்த அலையை உருவாக்கும் நீண்ட கடல் வெளியோ எந்த உயர்வு தாழ்வும் இன்றி சமனமாக நீண்டிருக்கும். எங்கே நிலமானது நீரை விட உயர்ந்து செல்ல எண்ணுகிறதோ, அங்கே அந்த விளிம்பில், ஓர் அலை பாயும் தன்மை ஏற்பட்டு விடுகிறது. ஆன்மாவும் வாழ்வில் மூழ்கிய இடத்தில் இருந்து உயர்ந்து எழுந்து, மூழ்கியதை தவிர்க்க நினைக்கும் போது அங்கே ஒரு பெரும் போராட்டம் எழுகிறது. ஒரு வகையில் அந்தப் போராட்டம்தான், இயக்கம். அங்கே இருக்கும்வரை இயக்கம்தான். அங்கிருந்து நீருக்குள்ளோ, நிலத்துக்குள்ளோ நாம்போய் விட்டால், அங்கே போராட்டம் இல்லை. அலைகடல் நமக்கு மறைமுகமாக போதிக்கும் பாடம் இது. சிந்திக்க சிந்திக்க இதுபோல வாழ்க்கை அம்சங்களில் நுட்பமான உட்பொருள் பொதிந்து கிடப்பதைதான் புலியாய் இருந்த சித்தரும், காலாங்கி நாதருக்கு விளங்க வைத்தார். அது, அவரது அகக் கண்களை நன்றாகவே திறந்துவிட்டது. பேசாமல் இருப்பதையும் கேட்பதையே பெரிதாகவும் கருதியவர், பின்னர், தான் அறிந்ததை பலருக்கும் உபதேசிக்கலானார். இவரால் பலர், நான் யார்? என்கிற கேள்வியில் விழுந்தனர். காலாங்கிநாதரோ நுட்பமான உட்பொருளை விளங்கிக் கொள்வதிலேயே குறியாக இருந்தார். ஒரு மரமானது இரை தேடி எங்கும் செல்வதில்லை. அது இருக்கும் இடத்திலேயே, அதற்கு உணவை பஞ்ச பூதங்கள் மூலம் இறைவன் தந்துவிடுகிறான். அதுவும், நின்ற இடத்திலேயே, காய் கனிகளை பதிலுக்கு வழங்குகிறது. சித்தனும் எங்கும் அலையத் தேவையில்லை. அமர்ந்த இடத்தில் அவன் தனக்கான உணவை, காற்று _ அதில் உள்ள நீர் _ தன் மேல் படும் ஒளி _ அதன் உஷ்ணம் மூலம் பெற முடியும் என்று நுட்பமாய் உணர்ந்தார். இதனால், பல நூறாண்டுகள் அமர்ந்த இடத்தில் தவம் செய்வது என்பது இவரது வாடிக்கையாகி விட்டது. திருமூலரே, இப்படி அமர்வதில் உள்ள சிறப்பு, நடப்பதிலும் உள்ளது என்பதை இவருக்குப் புரியவைத்தவர். அதன்பிறகே இவர் தேச சஞ்சாரியானார். அந்த சஞ்சாரங்களில், ஆமைக்குள் அடங்கிக் கிடந்த சித்தர் முதல், பட்சி ரூபமாய் திரிந்த சித்த புருஷர் வரை பலரை தரிசனம் செய்தார். அவர்கள் எதனால் மானிட உருவம் விட்டு அதுபோன்ற உயிர்களாக வடிவம் கொண்டார்கள் என்பதையும் அறிந்தார். இப்படி அவர் தரிசித்தவர்கள் பலர். அவர்கள், தசாவதார சித்தர்கள் ஆவர். திருமாலின் தசாவதார அம்சங்களிலேயே சித்த மூர்த்திகள், அந்த அவதார நோக்கங்களையே தத்துவமாகக் கொண்டு திகழ்ந்தனர். அவர்களையெல்லாம் தரிசனம் செய்தார். அதேபோல, அஷ்டமாசித்திகளை தங்களுக்குள் அடக்கிக்கொண்ட பல சித்தர்களை தரிசனம் செய்தார். அஷ்டமாசித்து எட்டும், தங்களின் பிரதி பிம்பத்துடன் கூடிப் பெருகியே 8 ஜ் 8=64 என்கிற கலைகள் ஆனது. இந்தக் கலைகளை நோக்கினால், அவைகளில் அஷ்டமாசித்து ஒளிந்திருக்கும். இந்தக் கலைகளும் தங்களின் பிரதி பிம்பங்களால் அணு அணுவாகச் சிதறி அறுபத்து நான்கு கோடியாயிற்று. இது சப்த லோகங்களில் பரவியதால், நானூற்று நாற்பத்தியெட்டுக் கோடியாயிற்று. இதில் ஒன்றைத்தான் கோடானு கோடி மனிதர்களாகிய நாம் நமக்கெனப் பெற்றுள்ளோம். ஒருவருக்கு தமிழாற்றல், ஒருவரிடம் எழுத்தாற்றல், ஒருவரிடம் பேச்சாற்றல் என்று அந்தக் கோடிகளின் தெரிப்புதான் நம் உயிரணுவுக்குள் புதைந்து நமக்கான வலிமையாக வெளிப்பட்டு நம்மை வழிநடத்துகிறது. நமக்குள் இருக்கும் ஓர் அணுவுக்கே நம் வாழ்வை ஒளிப்படுத்தும் ஆற்றல் உண்டென்றால், இவை அனைத்தையும் உள்ளடக்கிய அந்த நானூற்று நாற்பத்தியெட்டுக் கோடியின் மூலமான அஷ்டமா சக்திக்கு எவ்வளவு சக்தி இருக்கும்! கற்பனை செய்யும் சக்தி கூட நமது மூளைக்குக் கிடையாது. ஆனால், காலாங்கிநாதர் இப்படிப் பல நுட்பங்களை விளங்கிக் கொண்டவர். இறுதியாக, நகரங்களுள் சிறந்த காஞ்சியம்பதியில் அடங்கினார் என்பர். திருமூலர் திகைத்தார். இங்கே இருந்த நம் சீடன் காலாங்கி எங்கே போய் தொலைந்தான்? அதோ, அங்கே ஒரு இளைஞன் நிற்கிறான்! அவனிடம் கேட்டால், விஷயம் தெரியும்! என சிந்தித்தவராய், தம்பி! இங்கே ஒருவர் சமையல் செய்து கொண்டிருந்ததை பார்த்தாயா? என்றார். அந்த இளைஞர் திருமூலரின் பாதங்களில் அப்படியே விழுந்தார். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. குருவே! மன்னிக்க வேண்டும். நான் தான் உங்கள் சீடன் காலாங்கி. நடுத்தர வயது தோற்றத்தில் இருந்தவன் தான், இப்போது இப்படி இளைஞனாகி விட்டேன், என்று அரற்றினான்.திருமூலர் ஆச்சரியத்துடன், காலாங்கி!இதென்ன விந்தை! இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது? உன்னை சமைக்கத்தானே சொன்னேன். அதை விட்டுவிட்டு, நீ என்ன செய்தாய்? என்றார். குருவே! தங்கள் உத்தரவுப்படி நான் சமைக்கவே செய்தேன். சோறு பாத்திரத்தின் அடியில் பிடித்து விடக்கூடாதே என்பதற்காக, ஒரு மரத்தின் குச்சியை ஒடித்து கிளறினேன். அவ்வளவு தான்! சோறு கருப்பாகி விட்டது. தாங்கள் வந்தால் அரிசியை பாழாக்கி விட்டாயே மடையா என திட்டுவீர்கள் இல்லையா? அதற்கு பயந்து, சோறை வெளியில் கொட்டவும் தயங்கி, அதை சாப்பிட்டு விட்டேன். அடுத்த கணமே என் முதுமை மறைந்தது. நான் இளம்பிள்ளையாகி விட்டேன், என்றார் காலாங்கி.திருமூலருக்கு ஆச்சரியத்துடன் கோபமும் வந்தது.சோறு என்ன ஆனாலும், என்னிடமல்லவா சொல்லியிருக்க வேண்டும். உண்மையை மறைப்பதற்காக அதை சாப்பிட்டிருக்கிறாய். குருவிடம் சீடன் எதையும் மறைக்க நினைப்பது பாவம். இந்த பாவத்திற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள், என சொல்லி விட்டு அங்கிருந்து அகல முயன்றார். காலாங்கி, திருமூலரின் காலைப் பிடித்தார். குருவே! இந்த சிறுவனை மன்னியுங்கள். என்னை பிரிந்து சென்றுவிட்டால், நான் உயிர் தரிக்கமாட்டேன். சற்று பொறுங்கள். உங்கள் முன்னாலேயே என் தவறுக்கு பரிகாரம் தேடிக்கொள்கிறேன், என்றவர் தொண்டைக்குள் விரலை விட்டார். சாப்பிட்ட சோறை வாந்தியெடுத்தார். இதைப் பார்த்த திருமூலர், அவர் வாந்தியெடுத்ததை எடுத்து அப்படியே சாப்பிட்டு விட்டார். அடுத்த கணமே அவரும் இளைஞராகி விட்டார். காலாங்கிநாதரும் இளமை மாறாமல் அப்படியே இருந்தார். வயதில் முதியவர்களாக இருந்தாலும், வாலிப முறுக்கைப் பெற்ற இவர்கள் சேலம் அருகிலுள்ள கஞ்சமலையில் தங்கியிருந்தனர். திருமூலரின் காலத்துக்கு பிறகு, அங்கிருந்து புறப்பட்டு, மதுரை அருகில் ஏராளமான சித்தர்கள் வசித்த சதுரகிரி மலைக்குச் சென்றார் காலாங்கி.அந்த மலையில் ஒரு சிவாலயம் கட்டும் பணியில் வணிகர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். மிக உயரமான, மனிதர்கள் மிக எளிதில் நுழைய முடியாத காட்டுப்பகுதியில் கோயிலைக் கட்டி வந்ததால், அவர் கையில் இருந்த பணமெல்லாம் தீர்ந்து விட்டது. யாரிடமாவது உதவி பெற்று கோயில் பணியை முடிக்க வணிகர் முடிவு செய்திருந்தார். இந்நேரத்தில் காலாங்கிசித்தர் அங்கு வரவே, அவரிடம், சுவாமி! தாங்கள் தான் இந்தக் கோயிலை கட்டி முடிக்க செல்வத்தை தந்தருள வேண்டும், என்றார். காலாங்கியோ துறவி. அவரிடம் ஏது பணம்? அவர் அந்த வணிகரிடம், நான் அருட்செல்வத்தை தேடி அலைபவன். மக்கள் நன்றாக வாழ அவர்களின் கர்மவினைகளை ஏற்று, என்னை வருத்திக் கொள்ளவே இங்கு வந்துள்ளேன், என்றார். வணிகரோ விடவில்லை. அவருடனேயே தங்கி அவருக்கு பல சேவைகள் செய்து வந்தார். அந்த வணிகரின் குரு பக்தியையும், கோயில் கட்ட வேண்டும் என்ற மனஉறுதியையும் மெச்சிய காலாங்கிநாதர், அந்த மலையில் கிடைத்த பலவித மூலிகைகளை பறித்து வந்தார். அவற்றில் இருந்து தைலம் தயாரித்தார். அந்த தைலத்தைக் கொண்டு தங்கம் தயாரித்தார். அதில் கோயில் கட்ட தேவையான அளவு வணிகருக்கு கொடுத்தார். மீதி தங்கம் ஏராளமாக இருந்தது. ஒரு பெரிய பள்ளத்தில் அதைப் போட்டு மூடி, பெரும்பாறை ஒன்றால் மூடிவிட்டார். கெட்டவர்களின் கையில் அது கிடைத்தால், அதை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதால் அப்படி செய்தார். மேலும் அந்தப் பாறையை சுற்றி காளி, கருப்பண்ணன், வராஹி, பேச்சியம்மன் என்ற காவல் தெய்வங்களை பிரதிஷ்டை செய்து அந்தப் பொன்னை பாதுகாக்கச் செய்தார். பழநியில் முருகனுக்கு சிலை செய்த போகர் இவரது சீடர்களில் ஒருவர். சதுரகிரி மலையில் பல சித்தர்களை அவர் கண்டார். இந்த சித்தர் காற்றைப் போன்றவர் என்பதால் பறக்கும் சக்தி பெற்றிருந்தார் என்கிறார்கள். இதைப் பயன்படுத்தி அடிக்கடி சீனா சென்று வந்துள்ளார். இவர் அங்கேயே சமாதி அடைந்ததாக ஒரு தகவல் இருக்கிறது.இன்னும் சிலர், தான் தன் குருவுடன் வசித்த கஞ்சமலையில் இரும்புத்தாதுவாக மாறி அங்கேயே ஜீவசமாதி அடைந்தார் என்கிறார்கள். இப்போதும் கஞ்சமலையில் லிங்கவடிவில் அருள் செய்வதால், இந்த லிங்கத்தை சித்தேஸ்வரர் என்கின்றனர். அமாவாசை அன்று இவரை தரிசிப்பது விசேஷம். கஞ்சமலையை பவுர்ணமியன்று மாலையில் கிரிவலமும் வருகின்றனர். இம்மலையிலுள்ள மூலிகை காற்று பல நோய்களை தீர்ப்பதாக பக்தர்கள் சொல்கிறார்கள். இம்மலையின் சுற்றளவு 18 கி.மீ.,பிரம்மலோகத்திற்கே இவர் சென்று விட்டதாகவும் சொல்கின்றனர். அந்த லோகத்தில், ஒரு வில்வமரத்தூண் இருக்கிறது. இதை காலங்கி நாதர் கால் என்பர். இந்த தூணில் அவர் உறைந்திருப்பதாகவும், பிரம்மனை வழிபடுபவர்களுக்கு காலாங்கிநாத சித்தரின் அருள் கிடைக்குமென்றும், அவர்களின் தலைவிதி மாற்றப்பட்டு ஆயுள் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள்.இன்னும் சில நூல்களில், இவர் காஞ்சிபுரத்தில் சமாதி அடைந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.காலாங்கி முனிவர் காலத்தை வென்றவர். ஒருமுறை உலகமே தண்ணீரால் அழிந்த வேளையில், இவர் மேருமலையில் ஏறி அங்கிருந்த சித்தர்களுக்கு காயகல்ப வித்தைகள் பலவற்றை சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவரை வணங்குபவர்களுக்கு கோபம் கட்டுப்படும். திறமைசாலியாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை. காலாங்கி நாதர்விஸ்வகர்ம மரபில் பிறந்தவர் காலாங்கி நாதர். கால் + அடங்கி = காற்றினை உடலாகக் கொண்டு வாழ்ந்தவர். ஆகையால் காலாங்கி எனப் பெயர் பெற்றார் எனலாம். காலாங்கி நாதரின் குரு திருமூலர் ஆவார்; சீடர் போகர். ஒரு முறை காலாங்கி நாதர் சதுரகிரியில் தவம் இயற்றிக் கொண்டிருக்கையில், சிவன் கோயில் கட்ட வேண்டும் என்ற தணியாத ஆசை கொண்ட ஒரு வணிகனுக்கு வகார தைலம் மூலம் பொருளுதவி செய்த செய்தி, சதுரகிரித் தலபுராணத்தில் குறிக்கப் பெற்றுள்ளது. சதுரகிரியில் தான் சந்தித்த சித்தர்களைப் பற்றி, காலாங்கி நாதர் தமது ஞான விந்த ரகசியம் 30 என்ற நூலில் குறிக்கிறார். இவர் மருத்துவத்திலும் ஆன்மிகத்திலும் பல நூல்கள் செய்துள்ளார். அவருடைய வகாரத் திரவியம், வைத்திய காவியம், ஞான சாராம்சம் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. ஞான பூஜா விதி, இந்திர ஜால ஞானம், ஞான சூத்திரம், உபதேச ஞானம், தண்டகம் போன்ற வேறு பல நூல்களையும் காலாங்கி நாதர் இயற்றியுள்ளார். இவர் சமாதி காஞ்சிபுரத்தில் உள்ளதாகக் கூறுவர். காற்றையே உடலாகக் கொண்டவர் என்றும் காலனைப் போன்ற நெருப்பானவர் என்றும், காலனால் நெருங்க முடியாதவர் என்றும் காலங்கி நாதருக்கு பெயர்க் காரணமுண்டு. காலங்கி நாதர் சித்தர்களில் மிகவும் ஆற்றல் வாய்ந்தவர். திருமூலரின் சீடர்களில் முதன்மையானவர். இவர் மூவாயிரம்வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருந்தார் என்று யோக முனிவர் இவரைப் பற்றிக் கூறியுள்ளார். யுகங்களைக் கடந்து வாழ்ந்த காலங்கி நாதர் பல ரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்ற சம்பவங்கள் பலவுண்டு. திரேதாயுகத்தில் ஒரு சமயம் பூவுலகின் ஒரு பகுதியில் கொடியதொரு பிராளயம் ஏற்பட்டது. மழையும், புயலும் வெள்ளமும் கரை புரள பூவுலகம் மூழ்கிக்கொண்டிருந்தது. அங்கிருந்த மரம்,செடி, கொடிகள், யாவும் மூழ்கிய நிலையில் காலங்கிநாதர் ஒரு பெரிய மலைமேல் ஏறினார்.வெள்ளம்உயர்ந்துகொண்டே இருந்தது. அதற்கேற்பக் காலங்கி நாதரும் மலை உச்சியை நோக்கி ஏறிக்கொண்டேபோனார்.காலங்கி நாதர் இப்படி ஒரு பிரளயத்தை அதுவரை சந்தித்ததே இல்லை. மக்கள் எல்லோரும் வெள்ளத்தில் மூழ்கி இறந்து போன் துயரம் நெஞ்சை வாட்டியது மலையின் உச்சியை நோக்கியே சென்று கொண்டிருந்த காலங்கி பல சித்தர்களும், ரிஷிகளும் ஓரிடத்தில் கூட்டமாகக் கூடி நிற்பதைக் கண்டார். “ரிஷிமார்களே!...எல்லோரும் இவ்விடத்தில் கூடி நிற்கும் காரணத்தை நான் அறியலாமா? என்று கேட்டார்” காலங்கி நாதர். “சித்தரே இதற்கு மேல் எங்களால் உயரே ஏறிச் செல்ல முடியவில்லை.அதனால் இங்கேயே நிற்கிறோம்.வெள்ளம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. நாங்கள் பிழைக்க முடியாது. உம்மால் முடிந்தால் உயரேஏறிச் சென்று உயிர் பிழைத்துக்கொள்ளவும் ” என்று அந்த ரிஷிகள் காலங்கி நாதர்க்கு பதில் கூறினார்கள். அதனைக் கேட்ட பின்பும் காலாங்கி நாதர் மலையுச்சிக்கு ஏறி சென்றார். அங்கு ஒரு பயங்கரமான புலி படுத்துக்கிடப்பதைக் கண்டார். அதனருகில் சென்று கூர்ந்து கவனித்தபோதுதான் தெரிந்தது யாரோ ஒரு சித்தர் புலி உருவத்தில் படுத்து இருக்கிறார் என்பது. மனிதர்களின் தொல்லைகளில் இருந்து விடுபடவே அருவுருவாக அங்கு தங்கி வாழ்ந்து வருவது தெரிந்தது. காலாங்கி நாதர் அந்த சித்தருக்கு வணக்கம் செய்துவிட்டு மேலும் தம் பயணத்தை தொடர்ந்தார். மலை மீது ஓரிடத்தில் ஒரு சுனை இருப்பதைக் கண்டார். காலாங்கி நாதர் அந்தச் சுனை ஓரத்தில் ஓர் அபூர்வக் காட்சியைக் கண்டார்.மீனின் உடலும், மனித முகமுமாய் ஒரு ரிஷி ஆழ்ந்த தவத்தில் இருந்தார்.அவர் மச்ச ரிஷி என அழைக்கப்பட்டவர். மச்ச ரிஷிக்கு வணக்கம் செய்து பயம் தொடர்ந்தபோது மற்றோர் இடத்தில் ஆமை உடலும் மனிதமுகமுமாய் ஒரு ரிஷியை தரிசித்தார். அவர் “ காலங்கி நாத நான் பன்னொடுங்காலமாக இங்குதவமிருக்கிறேன். என்னைப் பார்க்க இதுவரை யாரும் வந்தது இல்லை. இங்கே உனக்கு என்ன வேண்டும்?” என்ற குரல் கேட்டு திரும்பினார் காலங்கி நாதர். அப்படி அழைத்தவர் வராகரிஷி. காலங்கி நாதர் அவரை வணங்கி உபதேசம் பெற்றார். பிரளயம் ஏற்பட்டு மலையுச்சி நோக்கி திரேதாயுகத்தில் பயணம் செய்த காலங்கி நாதர் அதன் பிறகும் பல ரிஷிகளைக் கண்டு உபதேசம் பெற்றார். வாமன, பரசுராமர், பலராமர்,பெளத்த, கல்கி, போன்ற ரிஷிகளும் திரேதாயுகத்திலிருந்து தவம் செய்து வருவதை அறிந்து காலங்கி நாதர் அவர்கள் யாவரிடமும் வணங்கி ஆசி பெற்றார்.சதுரகிரி மலைப்பகுதியில் வேதவியாசர்,மிருகண்டேயர்,பதஞ்சலி நாதரிஷி போன்ற முனிவர்களையும்,குதம்பைச் சித்தர்,பாம்பாட்டி சித்தர், ஞான சித்தர், வேதாந்த சித்தர், தவசித்தர், யோக சித்தர் போன்றவர்களயும் சந்தித்து அவர்களின் பேரருளைப் பெற்றார். அதன் பின்பு காலங்கி நாதர் தவத்தில் ஆழ்ந்திருந்த போது அங்கே வந்த வணிகன் ஒருவன் அவரைப் பற்றி மிகவும் கேள்விப்பட்டு அவரது கால்களில் வீழ்ந்து வணங்கி அழுதான். தான் அவரைப் பார்க்க வந்த நோக்கத்தைக் கூறினான்.