Translate

Thursday, 18 April 2019

விஸ்வகர்ம மக்களின் வீழ்ச்சியில் இளைஞர்களின் பங்கு

   
   இத்தனை சிறப்பும் சீரும் வாய்ந்த விஸ்வகர்ம இனம் விழ்ச்சியடைவதற்குக் காரணமென்ன ?ஆற்றல் வாய்ந்த இனம் .அறிவு மிக்க இனம் பார்போற்றும் படைப்புக்கெல்லாம் சொந்தம் பாராட்ட வேண்டிய பரம்பரை ஏன் இப்படி விழுந்தது . உலக வரலாற்றில் ஒரு இனம் எழுச்சி பெற அவ்வின இளைஞர்கள் மூல காரணமாக இருந்திருக்கின்றார்கள் .ஆனால் விஸ்வகர்ம இனத்தைப் பொறுத்தவரை கதை வேறாக அமைந்துள்ளது .

 இந்த இனத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்டார்கள் இவ்வினத்தின் தங்கக்கம்பிகளான இளைஞர்கள் என்பதை அறியும் போது வேதனையும் துக்கமும் நெஞ்சை அடைக்கிறது .வரலாற்றின் பக்கங்களை ஒளி மயமாக்கி உலக மக்களெல்லாம் மதித்துப் போற்றிப் புகழ்வதும் பாமாலையும் , பூமாலையும் அணிந்த இனத்தை அனாதையாக்கியவர்கள் .அகிலமெல்லாம் ஓட உதவியவர்கள் வேறுயாருமல்ல அக்குலத்தின் சொற்கேளாப் பிள்ளைகளால் குலத்துக்கே அழிவு வந்தது .

    முதலடி ஜகத்குருப் பதவிக்கு விழுந்தது .விஸ்வகர்ம மக்களுக்கு பூர்வீக காலம் தொட்டு ஆச்சாரிய குரு பீடங்கள் பல இருந்தன .சில மடாதிபதிகள் பிரம்மச்சாரியத்தை அனுஷ்டித்தார்கள் .சிலர் இல்லற வாழ்க்கையோடு மாடதிபதிகளாக இருந்தார்கள் .
        
        மடாதிபதிகள் விஸ்வகர்மப் பிராமணர்கட்கு தரும உபதேசங் களைச் செய்து யாகாதி கிருத்தியங்களைச் செய்தும் குல தருமம் குன்றும் போது அவற்றுக்குப் புத்துயிர் அளித்தும் வந்துள்ளார்கள் தமது கட்டளையை மீறுபவர்கட்குத் தண்டனை வழங்கியும் வந்துள்ளார்கள் .இத்தகைய மடாதிபதிகள் கல்வி அறிவும் தவ வலிமையும் உடையவர்கள் .சித்தர்களாகவும் இருந்தார்கள் .

    "கருதேது வேங்கடாசார்யஸ்த்ரேதாயாம் நரகேசரி ' வாபரே சோட வித்யாத             காளஹஸ்தி காலளயுகோ " 

    இச்சுலோகம் ஆச்சாரிய குரு பரம்பரை என்னும் சமஸ்கிருத நூலிலுள்ளது , கிரேத யுகத்தில் திருவேங்கடச்சாரியார் சுவாமி களும் , துவாரக யுகத்தில் ஜோடாச்சாரிய சுவாமிகளும் , குருமகா சன்னிதானங்களாக இருந்தார்கள் என உறுதி செய்கின்றது .

   ஸ்ரீ காளகஸ்தி முனிவர் காசியில் தவம் செய்த போது காசியை ஆண்ட மன்னன் சுவித்ரமகாராசா அவரிடம் உபதேசம் பெற்றதா கவும் அதன் மூலம் விஸ்வகர்ம புராணம் உண்டாகியது எனக் கூறப்படுகின்றது .

   ஸ்ரீ காளகஸ்தி முனிவர் விஸ்வகர்ம ஆச்சாரிய வித்தியா நகரம் காசி , சிருங்கேரி ஆகிய இடங்களில் விஸ்வகர்ம குரு பீடங்களை ஆரம்பித்து வைத்தார் .அவற்றில் விஜயா நகரத்தில் அமைக்கப்பட்ட பீடம் அன்றிலிருந்து இன்றுவரை விஸ்வகர்ம மக்களிடமிருந்து வருகின்றது .காசி மடாதிபீடமும் சிருங்கேரியும் கைமாறி விட்டது .
  1. சிருங்கேரி ஸ்ரீ விஸ்வரூபாச்சாரியர் பரம்பரை ஜெகத்குரு சங்கரச்சாரியர் சுவாமிகள் 
  2. போத்தலூரி ஸ்ரீ வீரப்பிரமேந்திராசுவாமிகள் 
  3. .ஆனேகுத்திஸ்ரீ வீரயோக வசந்தராயச்சாரியர் சுவாமிகள் 
  4. வீபூதி ஸ்ரீ மத் வெங்காயச்சாரிகள் சுவாமிகள் 
  5. நந்தி கொண்ட ஸ்ரீ சிவசங்கரரையா சுவாமிகள் 


       இன்னும் பல இடங்களில் விஸ்வகர்ம மக்களின் குருபீடங்கள் உண்டு

  சிருங்கேரி மடம் ஆதியில் துவட்டச்சாரியரின் மகன் விஸ்வ ரூபனால் அமைக்கப்பட்டது .அவரே அதன் ஜெகக் குருவாக இருந்தார் .அவர் பின் ஞானயோக விஸ்வரூப ஆச்சாரியார் இவர் 90 வயதில் ஒரு ஆண் மகனுக்கு தந்தையானார் .இதனால் விஸ்வகர்ம மக்கள் வேதனை அடைந்தார்கள் .அக்குழந்தைக்குச் சங்கரன் ' எனப் பெயரிட்டார்கள் .சங்கரன் தன் தந்தையைப் போல சகல கலை வல்லவனாகவும் சித்துக்கள் செய்யும் சித்தனாகவும் தவலிமையுடையவனாகவுமிருந்ததால் அவரே பீடாதிபதி யாக அமர்த்தப்பட்டார் .இவர் தன் சீடராக விஸ்வகர்ம மக்களையும் ஆரியர்களையும் வைத்துக் கொண்டார் .இவர் சமாதியடையும் நேரம் வந்தபோது ஜெகக்குருவாக வரக்கூடியவரைத் தெரிவு செய்ய ஒரு பரீட்சை வைத்தார் .

       தான் ஆற்றில் நீராடித் திரும்பும் போது தனது பாதரட்சையை ஆற்றோரத்தில் விட்டு விட்டு வந்து தனது மாணவனாக இருந்த விஸ்வகர்மகுல மாணவனிடம் அதை எடுத்துத் தரும்படி கூறினர் .அந்த இளைஞன் குரு பக்தி இன்றி விசுவாசமும் , அடக்கமும் , பணிவுமின்றி அந்தப் பாதரட்சையைத் தன் காலிலே போட்டுக் கொண்டு வந்து வைத்தான் , இதைப் பார்த்த சங்கராச்சாரியார் இவருக்கு அத்தகுதி இல்லை என முடிவெடுத்து அடுத்த நாள் மற்ற இன இளைஞனிடம் கூறினார் .

      அந்த இளைஞன் மிகவும் பக்தியுடனும் , பணிவுடனும் சென்று பாதரட்சையை ஆற்றிலே கழுவி தன் மேலாடையில் வைத்து சுற்றித் தன் தலையிலே சுமந்து வந்து குருவின் பாதத்தில் வைத்தான் .ஜெகத்குருவின் கோல் பிராமணப் இளைஞனின் கைக்கு மாறியது .சங்கரச்சாரியார் விஸ்வகர்ம இளைஞனின் பொறுப்பற்ற தன்மையால் விஸ்வகர்ம மக்களுக்குரிய ஜெயகுரு பீடம் பறிபோனது .
      அது மட்டுமல்ல , காந்தக் கோட்டை அழிவுக்கு விஸ்வகர்ம இளைஞர்களின் பொறுப்பற்ற தன்மையும் தான்தோன்றி நிலை யுமே காரணமாக அமைந்தது .இது ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது .எனவே இளைஞர்களே !உங்களின் அடக்கம் இன்மை , பொறுப்பற்ற தன்மை , ஆழ்ந்து சிந்தியாத போக்கு மூத்தோரை மதியாமை போன்ற தன்னிச்சைப் போக்குகளால் வரலாற்றுப் புகழ்மிக்க இனத்தை புண்படுத்தி புழுதியில் தள்ளிவிட்டீர்கள் .இன்னும் இன்னும் இத்தவற்றை விடாது தக்கோர் மதிக்கத்தக்க வரையில் சொற்கேட்டு குலப் பெருமையை மீட்டெடுக்க கடுமை யாக உழையுங்கள் , 

      நாடும் , ஏடும் நல்லவர்களும் உங்களிடமிருந்து பல வல்லமை களை எதிர் பார்க்கிறார்கள் .உடன் மூதாதை உலகில் பல சாதனை கள் படைத்தவர்கள் .அதை நினைத்துப் பார் .அவர்களால் முடிந்தது , உன்னாலும் முடியும் .அவர்கள் சிந்தையை அடக்கிச் சிந்தித்தார்கள் சித்துகள் பெற்றார்கள் .உனக்குப் பெரும் வரலாற்றுச் சிறப்பை மூலதனமாக்கிச் சென்றார்கள் நீ உன் எதிர்காலச் சந்ததிக்கு என்ன செய்யப் போகிறாய் சிந்தி .உன் சினத்தால் அழிவு ஏற்பட்டது .நீ சிந்தித்தால் சிறப்பை நிலை நாட்டலாம் .

      எனவே இளைஞனே !மட்டங்கள் சேர்த்து நட்டங்கள் ஆக்கியது போதும் .இனி நாடு சிறக்சு நாளிலம் போற்ற செயற்கரிய செய்யும் செயல் வீரனாக உன்னை நீயே மாற்று .உழை .காலத்தை பொன்னேனப் போற்றும் .பொறுப்புடன் செயல்பட முன் வா .

     அன்று உன் மூதாதை ஆற்றிய சேவை உள்ளை அழைக் கின்றது .உலகின் முதல் விஞ்ஞானியும் மெய்யாளியுமான வித்தைகள் பலதின் வித்தகர் விஸ்வகர்மாவின் வழித்தோன்ற லல்லவா நீ !நட்டுவள் பிள்ளைக்கு தொட்டிக் காட்ட வேண்டிய தில்லை .எனவே நீ உன்னையே உணர்ந்து கொண்டால் உலகம் உன் காலடியில் தவமிருக்கும் சரித்திரம் விரியும் தரித்திரம் மறையும் .சகாவரம் பெற்ற கலைச் செல்வங்கள் உன் முயற்சியால் வளரும் .டயரும் நாடு போற்றும் நல்லவர்கள் வாழ்த்துவர்கள் .ஏடுகள் உன் எழுச்சியை ஏற்றத்தை எடுத்தியம்பும் .பாமாலையும் பூமாலையும் உன்னினத்திற்கு கிடைக்கும் .

    அன்று நீ இழந்ததை கலியுகத்தில் மீட்டு விஸ்வகர்மாவின் கனவை நனவாக்க நல்லவனே நலமுடன் வா !நெஞ்சில் உறுதியோடு நேர்மை திறத்துடன் எழுந்துவா !

     அன்றும் , இன்றும் , என்றும் உன்னலமே தன்னலமாக கொண் இழைக்கும் நல்லவர்கள் அழைக்கின்றார்கள் .உன்னினத்தவர் .களால் படைக்கப்பட்ட எத்தனையே கலைச் செல்வங்கள் இன்று !அந்த நாடுகட்கு நலமாக அன்னியச் செலவாணியை அள்ளித் கொட்டுகின்றன .இதை அனுபவிக்கும் அரசு உன்னினத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை .உனக்காக எதுவுமே செய்வதில்லை .

      எனவே ஐந்தொழில் புரியும் தங்கக்கம்பிகளான தம்பிகளே !சரித்திரத்தில் வடுபல பெற்ற நீங்கள் அத்தவறுகட்கு மன்னிப்பாக ,இனத்தின் எழுச்சிக்கும் ஏற்றத்திற்கும் வழியும் வகையும் காண ஓடி வாருங்கள்.

        உங்களுக்காக வாசல் கதவுகளும் இருதயக் கதவுகளும் திறந்திருக்கின்றது .எந்தையும் தாயும் மகிழ்ந்து விளையாடிய இந்த மண் .அவர் சிந்தையில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் தோன்றிப் பூத்துக் குலுங்கிய இந்த மண்ணை விண்ணில் சொர்க்கத்தையும் , மண்ணில் மாடமாளிகையையும் விஸ்வகர்மாவின் உழைப்பால் படைப்பால் பார் போற்ற பரணி பாட தரணி சிறக்க உன் சேவை தேவை நாடிவா ?நல்லவனே வல்லவனே நீ படைத்தல் கடவுளின் பரம்பரை மறந்து விடாதே அன்று உன் மூதாதை படைத்த அத்தனையும் இன்று வரலாற்றுச் சின்னங்கள் .வரலாற்று ஆசிரியர்களை வாய்திறக்க வைத்துள்ளது .காலம் உன் வரவுக்காக காத்திருக்கின்றது .கடமை உன்னை அழைக் கின்றது .உன் மூதாதைகளின் தொழில் நுட்பமும் , ஆழ்ந்த அறிவும் , பரந்து விரிந்த நோக்கும் உன்னோடு உறவாடத் துடித்து அழைக்கின்றது .சிரிக்கும் சிகிரியாக்களையும் அழகு சிந்தும் அஜந்தா ஓவியங்களையும் தந்தவனே தங்கமகனே !தரணியில் சிந்திக்க வைத்தவன் நீ !பாவேந்தர் முடியும் தமிழ் புலவருக்கீயும் படியும் உன் முதாதையின் உழைப்பல்லவா ?' 

       நாடு தந்தவன் நகர் அமைத்தவன் வித்தைகள் பலதின் சொந்தக்காரன் நீ !நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே எனப் பரமனுக்கே பதில் கொடுத்த பாட்டுக்கொரு புலவன் நக்கீரன் பரம்பரையே ஓடிவா !உன் மூதாதை உனக்காக விட்டுச் சென்றிருக்கும் சேவையை திறம்படச் செய்யும் திறமை உள் வாங்கப்பட்டுள்ளவன் நீ !" உலக மக்களுக்கு கடவுளைக் காட்டியவனின் இளவல்களே, விழுமின் எழுமின் ஏற்றம் பெறும் நாளை நமதாக்க வாரீர் !

மாந்தை வாசிகளின் மகிமை

   மாந்தையில் வாழ்ந்தவர்கள் கைத்தொழில் வல்லவர்களான கம்மாளர்களாகும் .அவர்கள் உலோகங்களிலும் கல்லும் மரத்திலும் பல ஆக்க பூர்வமான வேலைகளைச் செய்த சாதனையாளர்கள் .
       
          இன்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன் இலங்கை கதிரை மலையிலிருந்து ஆட்சி செய்த குமண மன்னன் தான் தவம் செய்யும் நோக்கோடு காட்டுக்குப் போக அவள் தம்பி ஆட்சிக் கட்டிலேறினான் .ஆட்சி செய்த குமணனின் தம்பி தன் தமைய சளின் தலையைக் கொண்டு வருபவர்கட்கு 1000 பொற்காசு தருவதாக அறிவித்தான் .வறுமையிலும் கொடுமையிலும் வாடி வதங்கிய ஒப்பிலாமணிப்புலவர் தன் வறுமையைப் போக்கவும் குமணனைக் காக்கவும் இதைப் பயன்படுத்த முனைந்தார் .குமணன் , அரசன் மட்டுமல்ல கொடை வள்ளலும் கூட .எனவே காட்டுக்குச் சென்று குமணனைக் கண்டார் .தன் வறுமையைக் கூறி வாழ வழி செய்யுமாறு கேட்டார் .குமணன் புலவரின் வறுமையைப் போக்க முடியாத நிலையில் தாளிருப்பதை நினைத்து வேதனைப்பட்டான் .இவ்வாறு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போது தன் தம்பியின் அறிவிப்பு நினைவில் வந்தது , உடனே புலவரை நோக்கி ஐயா நான் மன்னனாக இருக்கும்போது நீங்கள் வரவில்லை .பொருளனைத்தையும் துறந்து முடியையும் துறந்து தவம் செய்யக் காடு வந்தபோது வந்தீர்கள் .என்னிடம் உள்ளது உயிரொன்றே , என் தம்பி என் தலையைக் கொண்டு தன்னிடம் சேர்ப்பவர்கட்கு 1000 பொற் காசுகள் தருவதாகக் கூறியுள்ளான் .நீங்கள் என் தலையைக் கொண்டு போய் அவனிடம் கொடுத்து ஆயிரம் பொற்காசுகளைப் பெற்று வறுமையைப் போக்கி வாழ்வாங்கு வாழ்க என்றான் .
   .        
     புலவர் அதிர்ச்சியடையவில்லை .குமணனை நோக்கி ஐயா !உங்கள் தலையை எனக்குத் தந்து விட்டீர்கள் , மீண்டும் வந்து பெறும்வரை காத்திருக்க வேண்டியது உங்கள் கடமை எனக் கூறிவிட்டு உடனே மாந்தைக்குச் சென்று விஸ்வகர்ம ஆச்சாரி !மாரைக் கண்டு தத்துருவமான குமண மன்னனின் தலை ஒன்றைச் செய்து தரும்படி வேண்டினார் .அவர் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஆச்சாரி உடனே குமணனின் தத்துரூபமான தலை ஒன்றைச் செய்து கொடுத்தார் .அதைப் பெற்றுக்கொண்டு குமணனின் தம்பியிடம் சென்று வாதிட்டார் .தமையனின் தலையைக் கண்ட தம்பி தமையன் உண்மையில் இறந்துவிட்டாள் என நினைத்து வேதனைப்பட்டு அழுது புரண்டான் .ஆட்சியைவிட்டகன்றான் .பின் புலவர் காடு சென்று குமணனை அழைத்து , வந்து தனக்கு வழங்கப்பட்ட தலைக்கு முடிசூட்டினார் .மாந்தை வாசிகளின் கைத்திறனை மெச்சி , 
" மாந்தையிலே வாழும் மகுடத்தியாகியுனக் கேந்து தழும் போலிரண்டுள்ளது - வேந்தர் முடித்தழும்புன் காலிலே முத்தழிழருக்கீயும் படித்தழும்புன் கையிலே பார் . " 

என பாராட்டிப் புகழ்ந்து பாமாலை செய்தார் .தருமம் தலை காக்கும் என்ற பழமொழி குமணன் வரலாறு மூலம் கிடைத்த தாகும் .
      
       பெரும் பணக்காரராக இருந்து பணத்தைத் துறந்து முற்றும் துறந்த முனியான பட்டினத்தார் 
" ஒரு நான்கு சாதிக்கும் மூவகைத் தேவர்கட்கும் உன் பார்க்கும் திரு நாளும் தீர்த்தமும் வேறுள்ளதோ - வந்திசைமுகனார் வருநாளில் வந்திடும் மாந்தைக் கண்ணாளர் வகுத்தல்லால் குருநாதர் ஆனை கண்டீர் பின்னையேதுக் குவலயத்தில் " .
எனப் பாடி மாந்தைக் கண்ணாளர்களின் முக்கியத்தவத்தை முழங்கியுள்ளார் .

Sunday, 7 April 2019

ஸ்ரீ விஸ்வகர்மாஷ்டகம்

ஆதிரூப நமஸ்துப்யம் நமஸ்துப்யம் பிதாமஹே |
விராடாக்ய நமஸ்துப்யம் விஸ்வகர்மன் நமோ நம : ||
 ஆக்ருதி : கல்பநா நாத த்ரிணேத்ர ஞாந நாயிகா : ||
 ஸப்ரதாதாத்வம் விஸ்வகர்மன் நமோ நம : ||
புஞாந ஸூத்ரஞ்ச காமிஸ்ஸூத்ரம் கமண்டலம் த்ருத்வா ஸம்போ ஹயன் தேவா விஸ்வகர்மன் நமோ நம : ||
விஸ்வாத்மா துப்த ரூபேணா நாநா கஷ்ட பிதாரக |
தாஅநாதி ஸம்சாராத் விஸ்வகர்மன் நமோ நம : ||
ப்ரஹ்மாண்டாகல தேவாநாம் ஸ்தாநம் ஸ்வரூப தலம் தலம் : |
லீலயா ரஜிதம் ஏந விஸ்வரூபாய தே நம : || 
விஸ்வவ்யாபின் நமஸ்துப்யம் த்ரயம்பகோ ஹம்ஸவாஹந : |
 ஸர்வ க்ஷேத்ர நிவாஸாக்யா விஸ்வகர்மன் நமோ நம : ||
 நிராபாசாய நித்யாய ஸத்ய ஞாநாந்தராத்மநே |
விஸுக்தாய விதூராய விஸ்வகர்மன் நமோ நம : ||
நவேதாந்த வேத்யாய வேத மூல நிவாஸிநே |
நவிவிக்த சேஷ்டாய விஸ்வகர்மன் நமோ நம : ||

Friday, 5 April 2019

விஸ்வகர்ம பிராம்மணர்களின் தாம்பிர சாசனங்கள்



விஸ்வகர்ம பிராம்மணர்களின் தாம்பிர சாசனங்கள்
 வேத இதிகாச புராண ஆதாரங்களைக் கொண்டு விஸ்வகர்மப் பிராம்மணீகத்தின் தொன்மை நிலைநாட்டப் பெற்றுள்ளது .அநுஷ்டானத்தில் அத்தொன்மை , பற்பல அரசர்கள் காலங்களில் அங்கீகரிக்கப்பட்டு சில தாம்பிர சாசனங்களாலும் சில அழியாச்சின்னங்களாலும் அறியப்படுவனவாம் .அவைகள் இல்லையேல் எந்நாட்டு மக்களின் நாகரீகத்தையும் திட்டமாய் அளவிட்டு அறிவதற்கில்லை.பௌருஷேயர்களான விஸ்வகர்மப் பிராம்மணர்களுக்கும், பிற்காலத்தில் வசிஷ்டரால் உற்பத்தியான ஆருஷேயப் பார்ப்பனர்களுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெரும் போராட்டங்கள் நிகழ்ந்தே வருவனவாம் , அவற்றால் இருசாராரும் ஒருவர் மற்றொருவரை வெளிப்படையாகவும் தாக்கியே வருகின்றனர் .தங்களுக்குச் சாதகமான பல கல்வெட்டு , தாம்பிர சாசனங்களையும் புனைந்து சிருஷ்டித்துமுள்ளனர் .அரசவைகளில் வித்வ இனங்கள் சபைகள் கூட்டப்பட்டு , இவ்விருவகைப் பிராம்மணர்களின் உயர்வு தாழ்வும் , வேதயாகாதிகாரமும் , மிகவிரிவாகப் பரிசீலனை செய்யப்பட்டுச் சம்மதிப் பத்திரங்கள் கைச்சாத்துடனும் , அரசாங்க முத்திரையுடனும் வழங்கப்பட்டிருக்கின்றன .சில ஊர்களில் , ஆருஷேயப் பார்ப்பனப் புரோகிதர்களால் வீண்விவாதங்கள் ஏற்பட்டு , நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டு , விஸ்வகர்மப் பிராமணீகம் சந்தேகமற நிலைநாட்டப் பெற்றுள்ளது .ஒரு வழக்கிலும் கூட , ஆருஷேயப் பார்ப்பனர்கள் - வசிஷ்டாதி ரிஷிகளின் சந்ததியார்கள் , தங்களை விஸ்வகர்மப் பௌருஷேயப் பிராம்மணர்களை விட பிறப்பினாலும் , கர்மவிசேஷத்தினாலும் உயர்ந்தவர்களென நிலைநாட்ட முடியவில்லை , ஆருஷேயர்கள் வேதமுணர்ந்த பார்ப்பனர்கள் என்பதையும் அவர்களுக்குக் கீழ்ப்பட்ட மூன்று வருணத்தார்களிலும் உயர்ந்தவர்களென்பதையும் பௌருஷேயர்கள் எக்காலத்தும் மறுத்ததில்லை .ஆயினும் ஆருஷேயப் பார்ப்பனர்கள் பௌருஷேயர்களிலும் , உயர்ந்தவர்கள் எனக் கூறிக்கொள்வதையும் , அவர்கள் குருத்துவத்தை இவர்களிடமும் வற்புறுத்துவதையும் , விஸ்வகர்மப் பிராம்மணர்கள் எக்காலத்திலும் ஒப்பினார்களில்லை .இவைகளே அவர்களுள் நிகழ்ந்த பல போராட்டங்களுக்குக் காரணமாகும் .பழையன கழிதலும் , புதியன புகுதலும் இக்கால தர்மமாகும் .ஜாதி வேற்றுமை மறைந்து தீண்டாமை அறவே ஒழிந்து , அம்மக்களுக்கு தேவாலயங்கள் திறந்துவிடப்படும் இந்நாள் , தலசம்பிரதாயம் கைவிடப்பட்டு கலப்பு மணங்களும்,விதவா விவாகங்களும் தாண்டவம் புரியும் இவ்வேளை விஸ்வகர்மப் பிராம்மணீகத்தை அளவுகடந்து வற்புறுத்த வேண்டுமென்பதும் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட வேண்டுமென்பதும் இப்பதிவின் கருத்தல்ல .பட்சபாதமற்ற சரித்திரவல்லோர் நிலையினின்றும் விஸ்வப்பிராமணீகத்தைக் குறித்த ஆதாரங்களை சர்ச்சை செய்து பௌருஷேயர்கள் தங்கள் பூர்வமேன்மையை தங்கள் குல உத்கிருஷ்டத்தை உள்ளபடியே உணர்ந்து தங்கள் முன்னோர்களிலும் எத்துணை தாழ்ந்திருக்கிறோம் என்பதைச் சிந்தித்து இழந்த உயரிய அந்நிலையை மீள அடையப்பெறவும் , ஆருஷேயப் பார்ப்பனர்கள் தங்கள் விதண்டாவாதங்களை விட்டொழித்து பிறப்பினால் தங்களைவிட மேம்பாடுடைய உண்மையான பிராம்மண வகுப்பாரின் உத்கிருஷ்டத்தையும் , பிரம்ம சிருஷ்டித் தொழில்களின் உயர்வையும் கண்டு சந்தோஷ சித்தராய் இனி சகோதரத்வம் பாராட்டி வாழவும் பொதுமக்களைச் சூழ்ந்திருக்கும் அறியாமை என்னும் காரிருளின்றும் அவர்களை விடுவிக்க வேண்டுமென்பதே இப் பதிவின் முக்கிய நோக்கமாகும், இனி முக்கியமான சில தாம்பிர சாசனங்களை எடுத்துக்காட்டி விஸ்வப்பிராம்மணீகத்தையும் , ஆச்சார்யத்துவத்தையும் நிலைநாட்டுவோம். குண்டூர் மண்டலகாரம் பூடி சிலாசாசனத்தில் : பாடுக்கிராமத்தினுடைய பதி தடாக தக்ஷிண பாகத்தில் ஆதித்ய நிர்மித தேவப்பிரசாதமூர்த்தி பிரதிஷ்டா சமயத்தில் நாபோலபோகோஜூ திப்போஜூயென்னும் பெயரினையுடைய சிற்பாச்சார்யருக்கு சிந்துமானிய ரூபமாய் அறுபது ஏக்கர் அளவுள்ள பூமி கொடுக்கப்பட்டது(தெலுங்கில் உள்ளது ) சாலிவாகன சகாப்தம் 1135 க்கு விஜயஸ்ரீ ஜேஷ்ட்ட சுக்ல சதுர்த்தி திதி சுக்ரவாரம் மேடாம்பிகா நந்தனன் வீரகாமராஜன் ராஜ்யம் நடத்தும் காலத்தில் ஆதித்தன் நாகஸ்தம்பத்தை ஸ்தாபித்தான் , இந்த சாசனத்தில் மேலும் கூறுவதாவது : சிருஷ்டிகர்த்தாவும் , சூரியனுக்கு மாமனாருமாகிய விஸ்வகர்மா , சூரியனை சாணைபிடித்து உதிர்ந்த கிரணங்களின் பொடிகளால் சூலம் சக்கரம் முதலான தேவர்களுக்குரிய ஆயுதங்களை உண்டாக்கினார் .அதே உத்திருஷ்டமான வம்சத்தில் பிறந்த துல்லபாச்சாரியன் , அவன் புத்ரன் பாணாச்சார்யன் , இவனது குமாரர்கள் நாகாச்சார்யன் , போகநாக்யன் .திரிபுராந்தகன் இவர்கள் பலவித மூர்த்திகளையும் , நான்குவித ஆலயங்களைச் செய்ய வல்ல சதுரர்கள் , வாஸ்து சாஸ்திர விசாரதர்கள் .இந்த சாசனத்திலிருந்து கி.பி 1207 - ம் வருடத்திலிருந்தும் விஸ்வகர்ம பிரம்ம வம்ஸத்தார்கள் ஆச்சார்யத்துவப் பிரசித்தர்களாய் பிரதிஷ்டா காலங்களில் அரசர்களால் க்ஷேத்திரமான்யம் முதலிய சன்மானங்களைப் பெற்று பூஜிதர்களாயிருந்து வந்தனரென்பதும் நிரூபணமாகிறது .திருவிதாங்கூர் கோவில் வெளிமண்டபம் தெற்குப்புறம் மேலச்சுவரில் கொல்லம் கூரு து மாசி மாதம் கசஉ கலி வருஷம் 4508 இந்த செண்பகராமன் மண்டபம் செய்தேன் என்றும் , கோவில் பஞ்சபாண்டவர் சந்நிதி வடக்கு வாசலுக்கு நேராக ஸ்ரீ கோவில் மதிலில் - கொல்லம் ஙஉ0 வது மீள ஞாயிறு இதில் கல்வெட்டிக்கொள்கவென்று திருவெழுத்து திருமுகப்படி எழுத்து வெட்டினேன் , இவ்வூர் தச்சாச்சாரியன் சோமன் செல்வனான முன்னூற்றுவ ஆச்சாரியன் எனவும் , கரியமாணிக்கபுரம் கோவில் சுற்று மண்டபம் மேலச்சுவரில் கிழக்கு வசம் கொல்லம் வைகாசி மீ ககஉ பஞ்சமி கோட்டாருன் மும்முடி சோழபுரத்திலிருக்கும் சிற்பாச்சாரியரில் தம்பிரான்குட்டி சிற்பப் புரந்தரன் எழுத்து என்றும், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப்பெருமான் கோவில் புறச்சுவரின் கிழக்கு வசத்திலும் வடக்கு வசத்திலும் கலி ஸ்ரீ சஎ ) ச ல் செல்லாநின்ற விருச்சிக சனி தனு வியாழம் கொல்லம் எளOக ஆனிமீ ககஉ , சனிக்கிழமை கல்வெட்டினேன் .கிருஷ்ணன் ஆச்சாரி திருவட்டாறு உடையான் குட்டி சிந்தாமணி ஆச்சாரி , காத்தவன் சுறுவாங்க ஆச்சாரி நயினார் திருநீலகண்ட ஆச்சார்யன் என்றும் , மேலும் திருவிதாங்கூர் மகாராஜா 200 - 300 வருடங்களுக்குமுன்பும் கியாதியுள்ள விஸ்வகர்மர்களான தெய்வேந்திரியனாச்சாரி அனந்தபத்பனாபன் ஆச்சாரி , மார்த்தாண்டனாச்சாரி , சிற்ப புரந்தரனாச்சார்யரென்று தாம்பிர சாசனத்தில் எழுதிக்கொடுத்தும், ஆடையாபரணங்கள் , சங்கிலிவெட்டை , குடை முதலிய பரிசுகளும் , சர்வமானியமாக பூமிகளும் , பல்லக்கும் கொடுத்தும் , யானைமேலேற்றி அரண்மனை வாயிலிருந்து வாத்ய கோஷத்துடன் பட்டணப்பிரவேசம் செய்வித்ததாக வரையப்பட்டுள்ளது. இலங்கை மன்னர்களால் விஸ்வகர்மப்பிராம்மணர்கட்கு கீர்த்திவாய்ந்த தாம்பிர சாசனங்கள் சிங்கள பாஷையில் வரைந்துகொடுக்கப்பட்டுள்ளன .அவைகளில் சிலவற்றை இங்கு தருவோம் .சிலோன் கீர்த்தி ஸ்ரீ ராஜசிம்ம அரசனால் இங்கிலீஷ் 1763ம் ஆண்டில் , வடுவாவலவூர் விஜயவர்த்தன தேவசிம்ம மூலாச்சார்யரென்ற விஸ்வகர்மருக்கு அப்பெயரையும் , கஉ அமுனாம்ஸூம் , ருலாகா பூமியும் வெகுமதியாகக் கொடுக்கப்பட்டதென்றும் மேற்படி அரசரால் சிற்பாச்சார்யர் ஒருவருக்கு ராஜகருண தேவசுரேந்திர மநுவீர விக்கிரம என்னும் பட்டமும் .எல்டினிய அலங்கார புஸ்தகமும் பரிசாகக் கொடுக்கப்பட்டதென்றும் , விக்கிரம பாஹூ வென்ற அரசருக்கு பண்டித நிலை ஆச்சாரியானவர் பட்டாபிஷேகம் செய்துவைத்தவர் , அந்த ஆச்சாரியாரின் பெண் குழந்தைக்கு பஞ்சந்தஹாமி என்ற பட்டப்பெயரும் , அவர் மாதாவுக்கு விஜயவர்த்தனாவென்ற பட்டமும் , ஒரு பெண்யானையும் .கட்டிலும் , பெண்ணடிமையும் , போபத்ஹோட் என்ற அரசாங்க உடுப்பும் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் , 1379ம் ஆண்டில் பண்டித பராக்கிரமபாகு அரசர் இந்தியாவிலிருந்து புலவத்புத்திரா வென்னும் வெகு கியாதியுடைய ஆச்சாரியரை அழைத்துவந்து மன்னோசுவரா என்ற ஆலயத்தைக் கட்டினார் .அதற்காக அவ்வரசர் , முதுகல ராஜ கருணாதி வீரவர்த்தன விஸ்வ கந்தாச்சார்யர் என்ற பட்டப்பெயரும் , பஞ்சிகாலு என்ற ஒரு பெண் யானையும் , நான்கு அடிமைகளையும் , காரலாவென்ற கோட்டையும் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் , 1644ம் ஆண்டில் இரண்டாவது ராஜசிம்ம அரசர் .கீர்த்தி பெற்ற தேவசிம்ம மூலாச்சாரியரை இந்தியாவிலிருந்து தருவிப்பதற்கு வடுமூலாச்சாரி யென்பாரையும் ஒரு யானையையும் அனுப்பினார் .அவர் சிங்கள நாட்டுக்கு வந்து , அந்த அரசனுக்கு பல ஆலய கட்டிடங்களை நிர்மாணித்துக் கொடுத்ததுடன் தூர திருஷ்டிக் கண்ணாடியும் மணி பார்க்கும் கண்ணாடியும் செய்து கொடுத்து அரசனை மகிழ்வித்தார்.அரசர் " மண்டல வல்லி " என்னும் பட்டப்பெயரையும் , மங்கல நாமா என்னும் கிராமத்தையும் பரிசாக வழங்கினார் .இப்பொழுதும் அக்கிராமம் ஆச்சார்ய பரம்பரையிலேயே இருந்து வருகின்றதென்பது குறிப்பிடத்தகுந்தது .மற்றும் , ஒரு சிங்கள அரசருக்கு ஹலம்ஹொ முஹவூர் .ராஜபாக்ஷப ஹோதர சிதராம ஹோதல என்னும் விஸ்வகர்ம சிற்ப சிரேஷ்டர் ஒரு ராஜக்கிரகம் செய்து கொடுத்தார் .அதில் ஒரு விசேஷம் இருப்பதாகவும் , அது , கூர்மம் பூமியைத் தாங்கி , இருப்பதுபோல் அந்த கிரகம் ஒரு வெண்மையான பெரிய ஆமைமேல் அமைத்திருப்பதாகக் கூறினார் .அதை பரீக்ஷித்தறியும் போது ஒரு பிரம்மாண்டமான வெள்ளை ஆமை பூமியினின்றும் வெளிவந்து அந்த இடத்தை மூன்று பிரதட்சணம் .செய்து மீண்டும் பூமிக்குள் மறைந்தது .இந்த ஆச்சரியத்தைப் பார்த்த அரசன் சிற்பாச்சாரியருக்கு ஒரு யானையும் , மகுடமும் வெகுமதியாகக் கொடுத்தார் என்று மற்றெலியில் ஹுலம் கேகாவுகாவிலுள்ள சிலாசாசனத்தில் வரையப்பட்டுள்ளது .எனவே , சிங்கள நாட்டிலும் சிங்கள அரசர்கள் வேறு பாடின்றி தென்நாட்டிலுள்ள சிற்பாச்சாரியர்களை வெகு மரியாதையாக நடத்தினார்களென்பது மேலே காட்டிய சாசனங்களிலிருந்து நன்கு விளங்கும் , சோழநாட்டிலும் பல் சிலாசாசனங்கள் உண்டு .அவைகளுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது .தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்திலுள்ள கல்வெட்டு சாசனங்களாம் .இக்கோவிலின் வடக்கு வெளி மதிலில் ராஜ ராஜ சோழனாலும் , அவனுக்குப் பின் அரசாண்ட சோழமன்னர்களாலும் இக்கல்வெட்டுக்கள் அப்போதைக் கப்போதைய நிகழ்ச்சிகளையும் , முக்கிய அரசியல் காரியங்களையும் விளக்குவதாக வெட்டப்பட்டுள்ளன .இவைகளை ஒருங்கு சேர்த்து அரசியல் வெட்டெழுத்துப் பரிசோதகராயிருந்த டாக்டர் ஹுல்ஸ் என்பார் 1895ம் ஆண்டில் சென்னை கவர்ன்மெண்டார் சார்பில் புத்தகரூபமாக அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ளார் .இன்னும் பல தேவாலயங்களிலுள்ள கல்வெட்டுக்களையும் ஆராய்ந்துள்ளார் .' பிரஸ்தாப கல்வெட்டில் , ராஜ ராஜ சோழன் 19ம் வருட ஆட்சி காலத்தில் ஆலயத்தின் நிபந்தனைக்காரர்களையும் , மானியம் கொடுக்கப்பட்டவர்களையும் கூறுமிடத்து " தச்சாவாயக்கு " சில மானியங்கள் விடப்பட்டுள்ளன .அதே புத்தகம் 306 - ம் பக்கத்தில் விஜயராஜேந்திர ஆச்சாரியருக்கும் இவர் தான் முதன் முதலில் பொதுமக்கள் முன்னிலையில் ராஜராஜேச்சுவரம் என்ற நாடகத்தை இயற்றி மேடை நாடக வரலாற்றின் வித்தை ஊன்றியவர் ) மான்யாதிகள் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது .பன்னிரண்டாவது நூற்றாண்டில் , திருச்சிராப்பள்ளிக்குச் சமீபத்திலுள்ள உய்யக் கொண்டான் திருமலை தேவஸ்தான கோபுரத்தின் கிழக்கு , வடக்குச் சுவர்களில் , சுங்கம் தவிர்த்த குலோத்தங்கச் சோழனால் , சதுர்வேதி மங்கலத்தில் கூடிய பட்டர்களின் பரீட்சத்தின் முடிவு , சாசனமாக வெட்டப்பட்டுள்ளது .அது கூறுவதாவது : " கம்மாளர்கள் ரதகாரர்கள் வகுப்பைச் சேர்ந்தவர்கள் . இவர்கள் உபநயன சமஸ்காரத்திற்கும் , பிரமோபதேசத்திற்கும் உரியவர்கள் , இவர்கட்கு சிற்பம் , வாகனவேலை , விக்ரநிர்மாணம் , கோவில் , கோபுரங்கட்டுதல் , கும்பாபிஷேகம் செய்தல் விக்ரகங்களுக்குக் கண் திறத்தல் , யாக குண்டலங்கள் , பாத்திரங்கள் செய்தல் , கிரீடம் ஆபரணங்கள் செய்தல் முதலிய பிறவுமாம் , ' அக்காலத்தில் விஸ்வப்ராம்மணர்களுக்கும் , பார்ப்பனர்களுக்கும் ஏற்பட்ட விவாதத்தின் விளைவாக இக்கல்வெட்டு தோன்றியதாகும் . இச்சாசனங்களிலுள்ள விசேஷம் யாதெனில் " தச்சாச்சார்ய ' என்றும் " விஜய ராஜேந்திர ஆச்சாரியான் " என்ற பதங்கள் , கிரந்தலபியில் எழுவிதமான ' சா ' க்களில் இருந்தும் விஸ்வப்பிராம்மணர்களின் சிறப்பும் , ஆச்சார்யத்துவமும் நிரூபிக்கப்பட்டுள்ளது .இவ்வழக்கப்பாடு சென்ற சுமார் 1500 வருடங்களுக்கு முன்னரே இருந்ததென்றால் , பௌருஷேய விஸ்வப்பிராம்மணரின் தொன்மையைக் குறித்து ஏனோ சந்தேகமும் , சச்சரவும் வேண்டும் ?ஆருஷேயர் தங்களுக்கு ஆதாரமாக ஏதேனும் ஒரு சாசனத்தைக் காட்டக்கூடுமோ வென்பது அறிவாளிகளால் ஆராயத்தக்கது . இனி சம்மதிப் பத்திரங்களைப் பரிசீலனை செய்வோம் .விஜயநகர சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வத் ஜன சம்மதிப்பத்திரம் , கிபி 1756 - க்கு தாது ஸ்ரீ வைகாசசுக்லபக்ஷ துவிதியை குருவாரத்தில் ஸ்ரீ விஜயநகர ராம ராஜ மஹா ராஜா அவர்கள் சபையில் , வேத சாஸ்திர சம்பந்தர்களாக ஸ்ரீ கநுபர்த்தி பசவாச்சாரியாருக்கும் 49 ஆருஷேய பார்ப்பன பண்டிதர்கட்கும் இரதகார ” சப்தத்தைக் குறித்து நடைபெற்ற விவாதத்தில் , அந்த 49 ஆஸ்தான வித்வான்கள் தோல்வியுற்று , அவர்கள் முன்னரே ஒப்புக்கொண்டது போல் , வெற்றி பெற்ற ஸ்ரீ பசவாச்சாரி சுவாமிகளை பல்லக்கில் சுமந்து நகரப்பிரதட்சணம் செய்வித்தார்கள் .இந்த விவாதத்தில் இரதகாரர்களுக்கு பிராம்மணத்துவம் சந்தேகமற ஸ்தாபிதம் ஆயிற்று என 49 ஆஸ்தான வித்வான்களும் கைச்சாத்திட்டு சம்மதிப்பத்திரம் வழங்கியுள்ளனர் .ஏனைய விவரங்களை இரதகாராதிகரணம் என்னும் தெலுங்கு நூலில் மிக விரிவாகக் காணலாம் . ஸ்ரீமத் சிருங்கேரி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் சம்மதிப்பத்திரம் .சகாப்தம் 1673 பிரஜோற்பத்தி ஸ்ரீ சைத்ர சுத்த துதிகையில் கோல்ஹாபூர் லஷ்மணாச்சார்ய வகையறாக்களுக்கு ஸ்ரீ வித்தியாசங்கர பாரதி ஸ்வாமிகளாலும் , 1682 விக்கிரம சிராவண கிருஷ்ண நவமி புதவாரம் ஷோலாப்பூர் ஜில்லா வராண்டா விஸ்வப்பிராம்மண மகா ஜனங்களுக்கு யாகாதிகாரம் உண்டென ஸ்ரீ வித்யா நரசிம்ம பாரதி ஸ்வாமிகளாலும் , 1709 ஸ்ரீ பிலவங்க ஜேஷ்ட கிருஷ்ண பஞ்சம் பௌம வாரம் பம்பாய் மகா ஜனங்களான விஸ்கர்மப் பிராம்மணர்களுக்கு அவர்களது உத் கிருஷ்டமான பிறப்பையும் பிரம சந்ததியென ஒப்பியும் ஸ்ரீமத் வித்யாரண்ய பாரதி ஸ்வாமிகளாலும் , 1745 சுபா நுஸ்ரீ கிருஷ்ண துவாதசியில் வராடஸபாபதி ஆச்சார்ய வகையறாக்களுக்கு வேதாதிகாரமும் , பிரம்மசிருஷ்டியும் உண்டென்று ஒப்பி ஸ்ரீமத் பாலகிருஷ்ண பாரதி சுவாமிகளாலும் , 1750 சர்வதாரி ஸ்ரீ வைகாச சுத்த அஷ்டமி மங்கள வாரம் ஷோலாப்பூர் ஜில்லா வைராக விஸ்வகர்ம மகா ஜனங்களுக்கு பாஞ்சால சுவர்ணகாரர்கள் என்றும் , விஸ்வகர்ம முகோற்பவர்களான விஸ்வகர்ம சந்ததியார்களென்றும் , ஆச்சார்யரென்றும் , ஆதிப்பிராம்மணர்களென்றும் , வேதோக்த வைதீக கர்மாதிகார முடையவர்களென்றும் , சிற்ப வித்யா பிரவீணர்களென்றும் , அவர்கள் உயர்வு .அநேக சுருதி ஸ்மிருதி மீமாம்ச புராண இதிகாசங்களால் அறியப்படுகின்றனவென்றும் .ஸ்ரீமத் பாலகிருஷ்ண பாரதி ஸ்வாமிகள் கரவாது ஸ்ரீமுக சம்மதிப்பத்திரம் ஆதீன முத்திரையுடனும் கைச்சாத்துடனும் , அளித்துள்ளார் , மேலும் , சகாப்தம் 1878 தாது ஸ்ரீ சைத்திர சுக்கில பக்ஷம் குருவாரம் விஜயநகரம் விஜயராம் மகாராஜா அவர்கள் முன்னிலையில் , ஸ்ரீமத் சங்கராச்சாரிய ஸ்ரீ சங்கர பாரதி ஸ்வாமிகளாலும் , பேரூர் விப்பிர அக்கினி ஹோத்திரிகள் .தீஷிதர்கள் , கனபாடி .சாஸ்திரிகள் முதலிய வித்வத் ஜனங்களாலும் , சிருங்கேரி மடாலய தர்மகர்த்தா ஸ்ரீராம் சாஸ்திரிகளாலும் ஸ்ரீ காசி க்ஷேத்திர சுவாமி சாஸ்திரிவகையறாக்களாலும் , பிரதிஷ்டா க்ஷேத்திர வேத சாஸ்திர பாரங்கத வித்வத் ஜனங்களாலும் , பிருந்தாவன ராஜமகேந்திரம் அக்னி ஹோத்திரி வியாகரண பண்டிதர் பிராம்மணர்களென்றும் வேத யாகாதிகாரமுடையவர்களென்றும் , துவிஜோத்தமர்களென்றும் , வேத இதிகாச புராண ஆதாரங்களுடன் சம்மதிப் பத்திரங்கள் வழங்கியுள்ளனர். இன்னும் காசி க்ஷேத்திரத்தின் பண்டிதர்களால் சாலிவாகன சகாப்தம் 1686 புரட்டாசி விஜயதசமி யன்று ஸ்ரீ சங்கர பட்டரின் புத்திரரான ஸ்ரீ ஸியாமபட்டரவர்களால் இதர பண்டிதர்களின் சார்பாகக் கொடுத்த சம்மதிப்பத்திரம் : காசி க்ஷேத்திரத்தில் கொங்கணாதி தக்ஷிண தேசத்திலுள்ள விஸ்வகர்ம ப்ரம்ம வம்சத்தவர்களாய் தெய்வக்ஞ நாமத்தோடு விளங்கும் சில்ப சிரேஷ்டர்களின் பிண்ட தான விஷயத்தில் கேள்வியெழுந்தபோது ' க்ருஹபாஹாத் ஸமுத்ருத்ய .சருணா பாயஸே நவா , பிண்டதானம் ப்ரகுர் வீத த்வாஷ்ட்ர சார்த்தே க்ருதே ஸதி ' என்ற பவிஷ்ய புரோணோக்தத்தால் ( சரு , பாயசம் , பிண்டம் ) பிண்டதானம் அந்த சாஸ்திரப்படியே செய்யவேண்டுமென்று நிர்த்தாரணம் செய்து கோபிநாத பட்டர் முதல் .சிவராம பட்டர் ஈறாக 26 வித்வான்கள் கைச்சாதிட்டு சம்மதிப்பத்திரம் கொடுத்து விஸ்வகர்மப் பிராம்மணர்களைச் சிறப்பித்துள்ளார்கள் .

Friday, 29 March 2019

பிரம்ம ஸ்ரீ குப்பமுத்து ஆச்சாரியார்

                             

                             
   ஒரு நாள் மன்னர் 


                        ஒரு கோயிலுக்குள் மூன்று மூலவர்கள் தனித்தனி சந்நிதிகளாக அமைக்கப்பட்ட பெருமைக்குரிய கோயில் காளையார்கோயிலில் அமைந்துள்ள சொர்ண காளீஸ்வரர் கோயில். இக்கோயிலின் ராஜகோபுரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருத்தேர் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மருது சகோதரர்களுக்கு எண்ணம் ஏற்பட்டது.
தைப்பூசத் திருவிழாவின்போது தேர்த் திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டு தேர் உருவாக்கும் பொறுப்பு மாலகண்டான் கிராமத்தைச் சேர்ந்த குப்பமுத்து ஆசாரி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பொறுப்பை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டார் சிற்பி.
புதிதாக வடிவமைக்கப்பட்டு வரும் தேரின் சக்கரங்களை இணைக்க மருதமரங்கள் தேர்வு செய்யப்பட்டன. தேர் செய்வதற்காக முதல் முதலாக சிற்பி உளியை எடுத்து விநாயகர் சிலை செய்ய முற்பட்டபோது விநாயகரின் துதிக்கை சிதைந்து விட்டது.
இதனால் கவலையடைந்த சிற்பி, உடனடியாக பெரிய மருதுவை சந்தித்து "தேர் செய்யக் கூடிய கூலியை உடனுக்குடன் வழங்கி விட வேண்டும். எனது தலைமையில் தேர் செய்யப்படுவதால் எனக்குத் தர வேண்டிய தட்சிணையை மட்டும் முதல் முதலாக தேரோடும் நாளில் கேட்டு பெற்றுக் கொள்கிறேன்' என்று கூறி விட்டார்.
தேர் செய்யும் தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் கூலித் தொகை வழங்கப்பட்டது. தலைமைச் சிற்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்குரிய தட்சிணை தொகை மட்டும் வழங்கப்படாமலேயே இருந்து வந்தது. தேரும் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டு தைப்பூசத் திருநாளில் முதல் முதலாக தேர் ஓடத் தொடங்கியது.
தேருக்கு பலி பூஜை செய்ய சென்ற குப்பமுத்து ஆசாரி தேருக்கு அடியில் சென்று தேர் ஓட முடியாத வகையில் ரகசியமாக ஆப்பு ஒன்றை வைத்து விட்டு வந்து விட்டார். இது தெரியாத மருது சகோதரர்கள் இருவரும் ஆர்வத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரின் மீதேறி தேரை கொடியசைத்து துவக்கி வைக்க முற்பட்டனர்.
ஊர் மக்கள் ஆர்வத்துடன் தேரை இழுக்கத் தொடங்கியபோது தேர் அசைய மறுத்து விட்டது. அப்போது தான் பெரிய மருதுவுக்கு சிற்பியின் நினைவு வந்தது. தேரை வடிவமைத்தமைக்காக சிற்பிக்கு தட்சிணை கொடுக்க மறந்து விட்டோமே என்பதை உணர்ந்தார். இதன்பின் அவரை அழைத்தனர்.
பெரிய மருது "தேர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் என்ன வேண்டுமோ, கேளுங்கள் தருகிறேன்' என்றார். அதற்கு சிற்பி "உங்களது கிரீடம், உடைவாள், செங்கோல் இவை மூன்றையும் என்னிடம் தாருங்கள் அவற்றை நான் அணிந்து கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் தேரில் வர வேண்டும். அதுவே எனது தட்சிணையுமாகும்' என்றார்.
சிற்பி இவ்வாறு கூறக் கேட்டதுமே அருகில் இருந்த சின்ன மருது ஆத்திரத்துடன் தனது உடைவாளை ஓங்கியபோது, பெரிய மருது குறுக்கிட்டு "சிற்பி ஏற்கெனவே என்னிடம் சொல்லியிருந்தார். தேரோடும் நாளில் அவர் கேட்கும் தட்சிணையை தருவதாகவும் சொல்லியிருந்தேன். இன்று ஒருநாள் தானே கேட்கிறார். அவரது ஆசையை பூர்த்தி செய்வோம்' என்று கூறிக் கொண்டே தான் அணிந்திருந்த கிரீடம் மற்றும் உடைவாள், செங்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்தார்.
மன்னர் வழங்கியவற்றை சிற்பி அணிந்து கொண்டு தேருக்கடியில் சென்று தேரை வணங்குவது போன்று அவர் ஏற்கெனவே வைத்த ஆப்பினை எடுத்து விட்ட பிறகு தேரின் மேலேறி கொடியசைக்க தேர் புறப்பட்டது.
பொதுமக்களும் ஆரவாரத்துடன் தேரை இழுத்தனர். தேர் நிலைக்கு திரும்பும் சமயத்தில் வீதியில் கிடந்த ஒரு கல் மீது ஏறி இறங்க தேரின் மீதிருந்த சிற்பி நிலைகுலைந்து தடுமாறி சற்றும் எதிர்பாராமல் தலைகுப்புற கீழே விழுந்தார். தேர்ச் சக்கரம் அவர் மீது ஏறியதால் சிற்பியின் உயிரும் பிரிந்தது.
"பேராசைக்காரன் இறந்து விட்டான்' என்று பலரும் சொல்லிக் கொண்டே இறந்து கிடந்த சிற்பியை உற்றுப் பார்த்த போது அவரது வலது கை அவரது இடுப்பில் அணிந்திருந்த பட்டு வஸ்திரத்தை பிடித்துக் கொண்டிருந்தது.
அந்த பட்டு வஸ்திரத்தைப் பிரித்துப் பார்த்தபோது அதில் பனை ஓலை ஒன்று இருந்தது. அதை எடுத்து அதிலிருந்த எழுத்துக்களை மருதுபாண்டியர்கள் படித்துப் பார்த்தனர்.
"மன்னா, நான் தேர் செய்யத் தொடங்கியபோது விநாயகரின் துதிக்கை சிதைந்ததால் எனது வம்சாவளியாக வானசாஸ்திரம் தெரிந்த நான் முத்துப் போட்டு பார்த்த போது இத்தேர் ஓடத் தொடங்கும் நாளில் மன்னருக்கு மரணம் நிகழும் எனத் தெரிந்து கொண்டேன்.
ஏராளமான கோயில்களை கட்டியும், ஏழை மக்களின் காவலராகவும் இருந்து வரும் எங்கள் சிறுவயது மன்னர் பல நூறு ஆண்டுகள் நீடூழி வாழ வேண்டும். வயதான நான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று கருதியே தங்களின் கிரீடத்தையும், செங்கோலையும் வாங்கினேன்.
எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவார்கள் எங்கள் மன்னர்கள் என்ற எண்ணத்தில் தான் இந்தச் செய்தியையும் ஓலையில் எழுதிக் கொண்டு வந்தேன். மருது பாண்டியர்கள் வாழ்க, சிவகங்கைச் சீமை வாழ்க' என்று எழுதப்பட்டிருந்தது.
சிற்பியின் தியாகச் செயலுக்காக காளையார்கோயிலுக்கு வெளியே, கோயிலைப் பார்த்தவாறு சிற்பி குப்பமுத்து இறைவனை வணங்கி நிற்பது போன்ற சிலையையும் அமைத்தார்கள்.

Thursday, 28 March 2019

விஸ்வகர்ம பிராம்மண பஞ்சகிருத்தியம்

       விஸ்வகர்ம பிராம்மண பஞ்சகிருத்தியம்                
                             விஸ்வகர்மப் பிராம்மண சந்ததியார்கள் பூவுலகில் மக்களுக்கு பலவகைப்பட்ட வசதிகளை தருவதற்கு இரும்பு மரம் கல் செம்பு பொன் முதலியவற்றால் நடத்தப்படும் பஞ்ச கிர்த்தியமெனும் ஐந்தொழில்களை விவரிப்போம் , இரும்பு வேலைக்கு அதிபரான சானகரிஷியும் அவர் சந்ததியாராகிய இருபத்தைந்து ரிஷிகளும் , ஏறுமுனை , தராசுமுனை . கதிர்முனை , எழுத்தாணிமுனை , கத்திமுனை என்னும் ஐந்து இரும்புத் தொழில்களையும் உலக சம்ரக்ஷணார்த்தம் நிலங்களை உழுது பயிரிடுவதற்குக் கொழுக்களையும் , பண்டங்களை நிறுத்தற்குத் தராசுக்களையும் , ஆடை முதலியவைகளை நெய்தற்கும் , அதற்கான நூல்களை நூற்பதற்குமான நீண்ட கதிர் , இராட்டினம் முதலிய கருவிகளையும் சகல இயந்திரங்களையும் , வேத இதிகாச புராணங்களை எழுதிப் பதனப்படுத்தற்கான கூர்மையான எழுத்தாணிகளையும் , தாயின் உதரத்தினின்றும் குழவியைப் பிரித்தற்கு உந்திக்கொடியை அறுத்தல் முதலிய தொழில்கட்கு இன்றியமையாத கத்திகளையும் , மற்றும் அரசர்களுடைய வாட்படை , உடைவாள் , கைவாள் , சமுதாடுகளையும் , எஃகுக் கவசச் சட்டைகளையும் , யுகத்தில் சிரங்கள் சேதமாகாதபடி காக்கின்ற முகமூடிக் கவசங்களையும் , கரங்கள் வெட்டப்படாமலிருப்பதற்கான வாகுவலங்களையும் , அம்பு , அம்புராத்தோணி , வில் முதலியவைகளையும் . கதாயுதங்களையும் , ஈட்டி , இருப்புலக்கை , மழு , சக்ர வச்ராயுதங்களையும் போர்க்கோடரி முதலிய கைவிடாப் படைகளையும் , அங்குசம் , கடிவாளங்களையும் , பகைவர்களைப் பிணிக்கும் கை , கால் விலங்குகளையும் , கடப்பாரை , மண்வெட்டி , கோடரி , குறடுகள் , சங்கிலிகள் , துலாக்கோல்கள் படிக்கற்கள் , இரும்புப்பெட்டகங்கள் , பூட்டுத் திறவுகோல்கள் , வண்டிகள் , தேர்கள் , இரதங்களுக்கான இரும்பு அச்சுக்கள் , கதவின் கீல்கள் , முளைகள் , தாழ்ப்பாள்கள் , இன்னும் திரைகடலில் ஓடும் கப்பல்கள் , தோணி , ஓடம் ஆகியவைகளுக்கான செம்புக்கவசங்கள் , பலதரப்பட்ட ஆணிகள் முதலிய பலவற்றைச் செய்து கொடுப்பவர்களாவர் .
           சனாதன ரிஷி முதலாகக் கொண்டு இருபத்தைந்து ரிஷி கோத்திரத்தில் பிறந்த மரவினைஞர்களான தச்சர்கள் சிற்ப சாஸ்திர ரீதியாக நிலங்களை உழுதற்குக் கலப்பைகளையும் , யாகாக் கினி யில் அவிசொரிதற்கு ஸுர்க்கு என்னும் நெய்த்துடுப்புக்களையும் ; வில்லுகளையும் , வண்டி இரதச்சக்கரங்களையும் , தேர் இரதம் வாகனாதிகளையும் , பாரங்களைச் சுமக்கும் வண்டிகளுடன் அலங்கார பவனி வரும் அஸ்வங்கள் . ரிஷபங்கள் பூட்டப்படும் வண்டிகளையும் மத்தளம் வீணை , யாழ் , தம்பூறு , புல்லாங்குழல் முதலிய வாத்தியங்களையும் , இடக்கை வாத்தியங்களையும் , குடை ஆலவட்டம் . சிற்றாலவட்டம் , கொடிமரம் போன்ற விருதுகளையும் , தண்டு கமண்டலங்களையும் , பாதக்குறடுகளையும் , வீடுகளுக்கான விட்டங்கள் , ஸ்தம்பங்கள் , தூண்கள் , பலகணிகள் , கதவுகளையும் , கட்டில்கள் , முக்காலிகள் , நாற்காலிகள் , பீடங்கள் . தூங்கு மஞ்சங்கள் , சிங்காதனங்கள் . ஊஞ்சல்கள் , குடும்பத்துக்கான நானாவித தட்டுமுட்டுக்கள் முதலிய பற்பல உபயோகமான சாமான்களையும் , மானசம்ரக்ஷணார்த்தம் , பலவித கைத்தறி . இராட்டினத்தறி ஆகியவற்றையும் லோகோபகராத்தமாகச் செய்து தருபவர்களாவர் . 
                        அபுவனச ரிஷி மூலமாக வந்த இருபத்தைந்து ரிஷிகளின் சந்ததியார்களின் வழியே உலோகங்களால் ஆகிய சமஸ்தான அலங்கார தீபங்கள் , பலவகைப்பட்ட மணிகள் , திருச்சின்னங்கள் . தாம்பரம் , பித்தளை , வெண்கல முதலியவற்றாலாகிய மிடாக்கள் , கொப்பரைகள் , சேமக்கலங்கள் அழகிய கலசங்கள் பற்பல விதமான , குடங்கள் . கொம்புகள் , தாரைகள் . தாளங்கள் , கிண்ணங்கள் பலவித ஜலபாத்திரங்கள் ஆகிய நானாவித தட்டு முட்டுகள் , ஆலய விக்ரகாதி கவசங்கள் , செப்பேடுகள் ஆகியனவற்றை பூமியிலுள்ள பலவாகிய சமயத்தோர்கள் விரும்புகின்றவாறு செய்து கொடுப்பவர்களாவர்.
                                  பிரத்னச ரிஷி முதலாகிய இருபத்தைந்து ரிஷிகளின் கோத்திரங்களில் பிறந்தவர்கள் , சிற்ப சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவாறு கர்ப்பக்கிரங்களையும் , அர்த்த மண் டங்கள் மஹாமண்டபங்கள் சபாமண்டபங்கள் முதலிய வற்றையும் , தேவதா நிர்மாணங்களையும் , பலவகை மதங்களுக்குரிய பிரதிஷ்டைகளையும் , நாடுகளையும் , நகரங்களையும் , கிராமங்களையும் நெடுமலையாலும் விரி நதிகளாலும் சூழப்பட்ட சிற்றுர்களையும் , முல்லை , குறிஞ்சி , பாலை , மருதம் , நெய்தல் , சூழ்ந்த நாடுகளையும் , அவைகளுக்கேற்ற கோவில்களையும் , கோபுரங்களையும் , ஸ்தூபிகளையும் சந்திரகாந்தக் கற்களாலும் , பளிங்குக் கற்களாலும் , ஆகிய மேடைகளையும் , மதில்கள் , அகழிகள் சூழ்ந்த கற்கோட்டைகளையும் , அரண்மனைகளையும் , ஆஸ்தான மண்டபங்களையும் , தரும் சத்திரங்களையும் , வித்யாசாலைகளையும் , வேதிகைகளையும் , திருக்குளங்கள் , தடாகங்கள் , சுனைகள் , குகைகள் ஆகியவற்றையும் , வாழையடி வாழையென மக்கள் பாரம்பர்யமாக வாழ்தற்குரிய , மாளிகைகள் சிற்பத்தாலாகிய சிறந்த வீடுகளையும் , நிர்மாணித்து லோகத்தைப் பரிபாலிப்பவர் ஆவார்கள் . மேலும் இவர்கள் மக்கள் மோட்ச சாதனத்தைச் சுலபத்தில் அடைவதற்கான , சகுணோபாசனைக்குரிய பற்ப கடவுளர்களை மக்கள் பரிபக்குவத்திற் கேற்றவாறு வழிபடுவதற்குச் செய்து கொடுத்தும் , இன்னும் செய்து கொடுப்பவர்களும் ஆவார்கள் . புண்ணிய பூமியாகிய இந்நாட்டின் கண்ணுள்ள . சிற்பத்தாலாகிய எண்ணிறந்த தேவாலயங்கள் , இச்சந்ததியாரின் திரிகால ஞானத்திற்கும் , உயரிய தொழில் வன்மைக்கும் போதிய சான்றுக்களாகும் . 
                         சுபானச ரிஷி மரபில் வந்த இருபத்தைந்து ரிஷிகளின் சந்ததியார்கள் , ராஜக்கிரீடங்களையும் , செங்கோல்களையும் , மார்பணிகளையும் , பதக்கங்கள் , மகர குண்டலங்கள் , காதணியாகியவைகளையும் , கரசரணாதிகளில் அணியக்கூடிய சகல விசித்திரமான ஆபரணங்களையும் , முக்கியமாக , மனைவி , மக்கள் , குலம் , கோத்திரம் , சட்டப்படி வார்சு பாத்தியம் முதலியவைகளைச் சித்திக்கச் செய்வதும் , மாதர் , ஆடவர்களைக் கற்பின் வழியும் கிருஹாச்சிரம தர்மம் வழுவாதும் நடக்கச் செய்வதற்கான திருமாங்கல்ய முத்திரைகளையும் , நவமணிகள் பதிக்கப்பெற்று ஒளிவீசும் பலப்பட்ட மோதிரங்கள் . மாதாணிகளையும் , அவரவர்கள் விரும்பியவாறும் , பொருளாதாரத்துக் கேற்றவாறும் செய்து கொடுத்து ஒவ்வொரு கிருஹத்தையும் சிறிய பொக்கிஷச்சாலையாகவும் , அவைகளை வேண்டும்போது பண்டமாற்றல் மூலம் , விற்று பணமாக்கவும் செய்து தரக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள் ஆவார்கள், 
                    

Saturday, 9 March 2019

மகாத்மா மௌனேஸ்வரர்

               

                                                  மகாத்மா மௌனேஸ்வரர்
                  சுமார் 800 ஆண்டுகட்கு முன் , கர்நாடக மாநிலம் குல்பர்க்கா ஜில்லா , கோனாலா எனும் கிராமத்தில் சேஷப்பா சேஷம்மா எனும் விஸ்வகர்ம தம்பதிகட்கு ஆதிலிங்கேஸ்வரஸ்வாமியின் அருளால் பிறந்தவர் மௌனேஷா எனும் மகான் .கல்வி கற்க , உரிய வயதில் இவரை ஒரு குருகுலத்தில் சேர்த் தார்கள் .பயிற்சி துவங்கு முன் , ஆசிரியர் இவரை " ஓம் " என்று சொல்லச் சொன்னார் .இவரோ , ஆசிரியரிடம் ' ' ஓம் ' ' எனும் சொல்லுக்கு என்ன பொருள் என்று கேட்க , பொருள் சொல்லத் தெரியாத ஆசிரியர் கோபமுற்று , இவரை அடிக்க கையை ஓங்கினார் .அந்தோ பரிதாபம் !ஓங்கிய கை அப்படியே நின்று விட்டது .உடனே ஆசிரியர் சிறுவனிடம் மன்னிப்புக் கேட்க , அவர் ஓம் எனும் சொல்லின் ( ஓங்காரம் ) பொருளைக் கூறி , ஆசிரியரின் கையை கீழே இறக்கி விட்டார் .அத்தோடு சிறுவன் மெளனேஷாவின் பள்ளிப்படிப்பு முடிவுற்றது .!மௌனேஷாவுக்கு நமது சம்பிரதாயப்படி , பூணூல் அணி விக்க ஏற்பாடு செய்யப்பட்டது .குல குருவானவர் வந்து சடங் குகளை செய்ய துவங்கியதும் , குருவின் உடலெல்லாம் தீப்பற்றி எரிவது போல இருந்தது .சிறுவன் மௌனேஷாவின் அருளால் மேற்படி எரிச்சல் அடங்கியது .வெறும் ஹோமம் செய்வதால் யாதொரு பயனும் இல்லை என்றும் , நம்மிடமுள்ள எல்லா தீய குணங்களையும் எரித்தாலொழிய நாம் பரிசுத்தமானவர்களாக முடியாதென்றும் மௌனேஷா அவருக்கு அறிவுரை கூறினார் .ஒரு சமயம் சிறுவன் மௌனேஷா , தன்னைப் போன்ற சிறுவர்களுடன் பந்து விளையாடிக்கொண்டிருந்தான் .அவர்க ளோடு சூராபூர் இளவரசனும் விளையாடினான் .சூராபூர் இளவரசன் தவறாக விளையாடியதோடு .மௌனேஷாவை தோற்று விட்டதாக கூறியதால் , இளவரசனை மௌனேஷா பந்தால் அடிக்க , அடிபட்ட இளவரசன் கீழே விழுந்து இறந்து போனான் .அதனால் சூராபூர் அரசன் மௌனேஷாவை தூக்கிலிடும்படி ஆணையிட்டான் .மௌனேஷாவைக் கண்டுபிடிக்க முடியாத தால் , அவனது பெற்றோரை தூக்கிலிடும்படி பணித்தான் .உடனே மெளனேஷா அங்கு தோன்றி , இளவரசன்தான் தவறு செய் தாளென்றும் , தீர விசாரிக்காமல் அரசன் தண்டனை தரலா காது என்றும் கூறி , வேண்டுமானால் இளவரசனையே கேட்டுப் பாருங்கள் என்று சொல்லி , இளவரசனை கூப்பிட்டான் , இள வரசனும் உயிர் பெற்றெழுந்து தான் செய்த தவறை ஒப்புக் கொண்டான் .அரசனும் மெளனேஷாவை வணங்கிப் போற்றி மன்னிப்புக்கேட்டான் .மகான் மெளனேஸ்வரா இவ்வாறாக சிறுவயது முதல் பல சித் து விளையாடல்களை நடத்தி , மக்களின் அறியாமையைப் போக்கவும் , மூட நம்பிக்கைகளை ஒழிக்கவும் எல்லா மதங்களையும் சமமாக பாவிக்கவும் ஏராள மான உபதேசங்களை செய்து அருளியுள்ளார் .அதனால் முகம்மதியர்களும் அவரை ஒரு மகானாக மதித்துப் போற்றினர் .அப்போது பீஜப்பூர் நவாப் பாயிருந்த அடில்ஷா என்பவரும் அவரையே சரணடைந்து , மகான் மெளனேஷாவே , உலகில் தோன்றிய மகான்களுக்கெல் லாம் மேலானவர் என்று போற்றி புகழ்ந்துள்ளார் .தமது இறுதிக்காலத்தில் , மகான் மௌனேஷா கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள டிந்தானி எனும் இடத்தை தேர்ந் தெடுத்து யோக நிஷ்டையிலிருந்தார் .அங்கு கிருஷ்ணா நதி பின் நீரோட்டத்தால் ஏற்பட்ட சலசலப்பும் , பெரும் ஓசையும் அவருடைய மோனதவத்திற்கு இடைஞ்சலாயிருந்ததால் , சுமார் ஒரு மைல் சுற்றளவுக்குள் எவ்வித ஓசையுமின்றி மெதுவாக ஓடும்படி , கிருஷ்ணா நதிக்கு அவர் கட்டளையிட , கிருஷ்ணாவும் அதை ஏற்று மிகவும் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள் .இப்போதும் அவர் சமாதியடைந்த மௌனேஸ்வரா கோயிலின் அருகில் கிருஷ்ணா நதி அமைதியாக சென்று கொண்டிருப்பதை நாம் காணலாம் .

Tuesday, 5 March 2019

KSமுத்துசாமி ஆச்சாரியார்

                       

                     பிரிட்டானியப் பேரரசில் கதிரவன் ஒருபோதும் மறைவதில்லை என்று கூறி எக்காளமிட்டு வெறியாட்டமிட்ட வெள்ளையரை எதிர்த்து உரிமைக்குரல் கொடுத்தான் மாவீரன் கட்டபொம்மன் !ஆனால் துரோகத்திற்குத் துணை போகிய எட்டப்பன் என்பவனால் போராட்ட காலத்தில் அந்த மாவீரன் வெள்ளையரிடம் காட்டிக் கொடுக்கப்பட்டான் .விளைவு ?ராஜதுரோகக் குற்றத்திற்கான மரண தண்டனை !அந்த மாவீரன் , தூக்குக் கயிற்றை துணிந்து முத்தமிட்ட ஊர் ' கயத்தாறு " என்னும் பெயருடைய சிறப்புடைச் சிற்றூராகும் . மதுரையிலிருந்து ஏறத்தாழ 120 கி . மீ . தொலைவில் அமைந்துள்ள , வரலாற்றுச் சிறப்புமிக்க கயத்தாறை ' வெட்டும் பெருமாள் " என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான் .அவனது ஆட்சி சீரும் , சிறப்பும் பெற்று விளங்கக் காரணமாகத் திகழ்ந்தவர் அவருடைய மதியமைச்சர் என்பதும் , அவரது பெயர் " சிவராமலிங்க ஆச்சாரியார் " என்பதும் கயத்தாற்றில் இன்று கர்ண பரம்பரைச் செய்தியாகத் திகழ்வதை நாம் உணர முடிகிறது .இவ்வாறாக , நம் கருத்தைக் கவரும் கயத்தாறு என்னும் ஊரில் , மர வேலை மாமன்னர் என்று நம்மவராலும் , வெள்ளையராலும் பாராட்டிச் சீராட்டப்பட்ட " மரவேலை மயன் " ஒருவர்வாழ்ந்து வந்தார் .பதக்கங்கள் பல பெற்ற பெருமைக்குரியவரா திகழ்ந்திருந்த அச்சான்றோரின் பெயர் ' ' சங்கர நாரா ஆச்சாரியார் ' என்பதாகும் .மதியமைச்சரின் வழிவம் அச்சான்றோர் , அன்பும் , பண்பும் ஒருங்கே அமையப்பெற்ற தம் துணைவியார் அன்னபூர்ணம் என்பவருடன் இல்லறமாம் நல்லறத்தைச் சீரும் சிறப்புமாய் இனிதே நடத்தி வந்தார் ." அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன் . " என்ற செந்நாப் போதரின் செம்மொழிக்கிணங்க வாழ்க்கை நடத்திய அன்னார்க்கு 14.10.1905 அன்று தெய்வத் திருவருளால் ஓர் ஆண் மகவு பிறந்தது .அந்த ஆண்மகவே பின்னாளில் விடுதலைப் போரில் வீரச் செயல் பல புரிந்த தியாகி கே .எஸ் .முத்துசாமி ஆச்சாரியார் ஆவார் .கயத்தாறில் வாழ்ந்து வந்த முத்துசாமியின் பெற்றோர் , தொழில் முன்னேற்றம் குறித்து விருதுநகர் சென்றடைந்தனர் .துள்ளித் திரிந்த முத்துசாமி , பள்ளிப் பருவம் எய்தியதும் புள்ளிக் கணக்குப் பயில சுடித்திரிய வித்யாசாலை என்னும் பள்ளியில் சேர்க்கப்பட்டார் .முத்துசாமி படித்துக்கொண்டிருந்த அந்தப் பள்ளியில் அவருக்கு மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார் .முதல் வகுப்பிலிருந்தே முத்துச்சாமியார் அருகில் அமர்ந்திருந்த அவரும் , முத்துசாமியும் ஈருடலும் , ஓருயிருமாகப் பழகி வந்தார்கள் .பிற்காலத்தில் " விருதுநகர் இரட்டையர் " என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட ( பள்ளிப் பாடநூலான ) இந்திய வரலாறு என்னும் நூல் இதை விளக்குவதாக உள்ளது .முத்துசாமி சுறுசுறுப்பும் ஆர்வமும் , துடிப்பும் மிக்கவராகத் திகழ்ந்தார் .அதன் காரணமாக அவரிடம் மிகுந்த மரியாதையும் ஈடுபாடும் வைத்திருந்த அவரது நண்பர் பொதுவாக அமைதியாகவே இருப்பார் .எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்லும் பழக்கம் இருந்தது .பாடசாலையும் அங்கு கற்பிக்கப்பட்ட பாடங்களும் முத்துசாமிக்குப் பாரமாகத் தோன்றியது .அடிக்கடி அங்கு நிகழும் ஊர்வலங்களும் போராட்டங்களும் இரும்பை ஈர்க்கும் காந்தமாய்அவரை ஈர்க்கத் துவங்கின .சுதந்திரப் போராட்ட உணர்வு , சுவாலைப் பெருநெருப்பாய்த் திகழ்ந்திருந்தது .விளைவு ?எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த முத்துசாமி தன் பள்ளிப் படிப்பிற்கு ஒரு புள்ளி வைத்து வெளியேறிவிட்டார் .இவர் வெளியேறியதால் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை இவருடன் ஒன்றாகவே படித்து , பழகி , இவரிடம் மிகுதியான பற்றும் மரியாதையும் , ஈடுபாடும் கொண்டிருந்த அந்த நண்பரும் வெளியேறி விட்டார் , முத்துசாமி போலவே சுதந்திர உணர்வு என்னும் சுட்டெரிக்கும் பெரு நெருப்பு அவரையும் பற்றிப் படர்ந்திருந்தது .பின்னாளில் " கர்மவீரர் என்ற சிறப்புப் பெயருடன் உலகம் போற்ற வாழ்ந்த உத்தமக் காமராசரே அந்த நண்பர் ! - இருவரது மூளைக்குமே ஏட்டுக் கல்வி எட்டவில்லை போலும் ! ஆனால் 15 வயது இளம் பருவத்திலேயே பெரிய அரசியல்வாதிகளுக்குக் கூட இல்லாத அளவில் அரசியல் அறிவும் , ஆர்வமும் இருவருக்கும் ஏற்பட்டிருந்தது . விதியின் விளையாட்டை யாரே நிர்ணயிக்க வல்லார் ? முதல் உலகப் பெரும்போர் - அன்னிபெசண்ட்அ்மையார் துவக்கிய ஹோம்ரூல் இயக்கம் - 1919ல் ஜாலியன் வாலாபாக்கில் நிகழ்ந்த மிருகத்தனமான படுகொலைகள் - காங்கிரசில் தலைமையேற்றுப் புது வழிகாட்டிய புனிதன் காந்திஜியின் அறப்போராட்டங்கள் ஆகியவற்றில் முத்துசாமிக்கு அளவற்ற ஈடுபாடு ஏற்பட்டது . அதன் விளைவாக 1920 ஆம் ஆண்டில் ஒத்துழையாமைப் போரில் குதித்தார் . அப்போது அவருக்கு 15 வயது ஆகியிருந்தது . மனவேகத்திற்கு உடல் வேகம் ஈடுகொடுக்வேண்டாமா ? சிறுவனால் என்ன சாதித்திருக்க இயலும் என்கிறீர்களா ? இலங்கைக்குப் பாலம் அமைக்கும் முயற்சியில் இராமபிரானுக்கு அணில் துணை செய்ததாகப் புராணங்கள் புகல் கின் றனவே ! நம் முத்துசாமி மட்டும் விதிவிலக்காக இருப்பாரா ? | ஒத்துழையாமை இயக்கப் போராட்டம் பற்றிய சுவரொட்டிகளை வெள்ளையர்க்குத் தெரியாமல் இரவோடிரவாக வீதிகளில் உள்ள சுவர்களில் ஒட்டுதல் வீடுதோறும் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்குதல் போராட்டப் பெருந்தலைவர்களின் உடனிருந்து , போராட்டம் வெற்றிபெற அவர்களுக்குத் தேவையான சிறுசிறு உதவிகள் செய்தல் , என்று இவ்வாறாக இராமாயணச் சிற்றணிலாக அந்தப்பிஞ்சு வயதிலேயே நம் அருமை முத்துசாமி திகழ்ந்திருந்தார் !- 1923 - ஆம் ஆண்டு மதுரை மாநகரில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடைபெற்றது .அப்போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்ற அனைத்துச் செயல்களையும் மேற்கொண்ட முத்துசாமியார் , தாமும் அப்போராட்டத்தில் குதித்ததுடன் காமராசரையும் தீவிரமாக ஈடுபட வைத்தார் பின்னர் நிகழ்ந்த நாகபுரிக் கொடிப் போராட்டத்தில் நேரடியாகக் கலந்துகொள்ள அவரால் இயலவில்லை .ஆகவே அப்போராட்டத்தின் நோக்கம் செயல்பாடு , விளைவு முதலியன பற்றிய செய்திகளை விருதுநகர் வட்டார மக்களிடையே திறம்பட எடுத்துரைத்து , சுதந்திரக் கனல் தணியாதவாறு சுடர்விட்டு ஒளிவீச ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார் .விருதுநகர் என்றழைக்கப்படும் அன்றைய விருதுபட்டி , ஜஸ்டிஸ் கட்சியின் கோட்டையாக விளங்கியது .அந்தக் கோட்டையைத் தகர்க்கும் மாபெரும் பொறுப்பை அன்றைய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆர்வமும் , துடிப்பும் , சுறுசுறுப்பும் , தியாக உணர்வும் கொண்ட முத்துசாமி ஆச்சாரியாரிடம் ஒப்படைத்தனர் .அவர் தனது உயிர் நண்பனான காமராசரையும் அப்பணியில் இணைத்துக்கொண்டார் .அன்றைய நிலையில் வி .வி .இராமசாமி நாடார் , செந்தில்குமார் நாடார் போன்ற பிரமுகர்கள் வலிமை மிக்க ஜஸ்டிஸ் கட்சி த் தூண்களாகத் திகழ்ந்தனர் .இத்தகையோரை எதிர்த்து அரசியல் நிகழ்த்துவது என்பது பகீரதப் பிரயத்தனம் ஆகும் .ஆனால் திறமையும் தேர்ச்சியும் பெற்ற முத்துசாமி ஆச்சாரியார் முன்னணி வீரராய் நின்று , போராடி வெற்றியும் பெற்றார் .அதற்கேற்ற அரசியல் சாணக்கியத்தனத்தை இயற்கையிலேயே முத்துசாமி பெற்று இருந்தார் .இக்காரணத்தினாலேயே எதையும் திட்டமிட்டு செயல்பட்டு எதிரிகளை முறியடிப்பதில் கைதேர்ந்தவர் என்று பழம்பெரும் தேச பக்தர்களால் இவர் புகழப்பட்டார் !விருதுநகரில் , கிருஷ்ண சாமிப் பாவலர் என்பவரது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்தக் கூட்டத்தில் மாபெரும் குழப்பத்தினை ஏற்படுத்தினர் , பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர் .கூட்டம் நடைபெறவிடாமலும் , கூட்டத்தினரைக் கலைந்து ஓடும்படி செய்ததிலும் ஜஸ்டிஸ் கட்சியினர் அன்று வெற்றி பெற்றனர் ,ஆனால் அடுத்த நாளே , அதே இடத்தில் ஊர்வலத்தோடு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் , தியாகி முத்துசாமி ஆச்சாரியார் .இந்நிகழ்ச்சியை 191968 ஆம் ஆண்டில் வெளிவந்த “ பாரதம் " என்னும் இதழ் கீழ்க்கண்டவாறு விவரித்துக் காட்டியுள்ளது . " கிருஷ்ணசாமிப் பாவலர் என்பவரது கூட்டம் விருதுநகரில் ஏற்பாடாயிற்று .ஜஸ்டிஸ் கட்சி நரிகள் ஊளையிட்டு , கூட்டத்தைக் கலைத்து விட்டன .- ஆனால் அடுத்த நாளே அதே இடத்தில் கூட்டம் ஊர்வலத்தோடு நடத்தப்பட்டது .மூளை முத்துசாமியுடையது .செயல் காமராஜருடையது .கிருஷ்ணசாமிப் பாவலரை ஒரு வண்டியில் அமர்த்தி முத்துசாமியும் காமராஜும் ஆளுக்கொரு பக்கம் நின்று அழுத்திப் பிடித்துக்கொண்டு ஊர்வலம் நடத்தினர் வண்டிக்குப் பின்னாலேயே மற்றொரு வண்டியில் கத்தி , கம்பு , சோடாபாட்டில் சகிதமாக ஊர்வலம் சென்றது .எவ்விதமான அசம்பாவிதமும் இன்றி காங்கிரஸ் கூட்டம் நன்கு முடிந்தது .காங்கிரசின் மானம் காப்பாற்றப்பட்டது .விருதுநகரில் அடுத்து நடந்த காங்கிரஸ் தலைவர் வேலூர் குப்புசாமி முதலியார் கூட்டமும் திட்டமிட்ட கலவரத்தால் கலைந்தது .இரண்டாம் நாள் நிகழ்வுற்ற கூட்டத்தில் முத்துசாமி ஆச்சாரியார் பேசினார் .அவரது சொற்பொழிவைக் கேட்ட மக்கள் மகுடி கேட்ட நாகமாயினர் .கலவரம் ஏதுமின்றிக் , கூட்டம் அமைதியாக நடந்தது " 1922 ஆம் ஆண்டில் சி . ஆர் . தாஸின் சுயராஜ்யக் கட்சி துவங்கிற்று , சட்டசபை நுழைவை வற்புறுத்தும் அக்கட்சியை முத்துசாமியும் ஆதரித்தார் . அப்போது தான் , எஸ் . சீனிவாச ஐயர் , ஏ . ரெங்கசாமி ஐயங்கார் , எஸ் . சத்தியமூர்த்தி ஆகிய தலைவர்களின் தொடர்பும் , நட்பும் கிட்டிற்று . சட்டசபைநுழைவு தேவை என்றார் சி . ஆர் . தாஸ் . சத்தியமூர்த்தி அதனை ஏற்றார் . ராஜாஜி உடனே அதனை எதிர்த்தார் . 1930ல் அண்ணல் காந்தியடிகள் உப்புச் சத்தியாக்கிரகத்தைத் துவங்கினார் . தண்டி யாத்திரை - வடக்கே ;வேதாரண்ய யாத்திரை - தெற்கே ;காந்திஜியின் தலைமை வடக்கே ;ராஜாஜியின் தலைமை தெற்கே , காந்திஜி கைதானார் .அவர் கைதான சிலமணி நேரங்களிலேயே விருதுநகரில் அரசாங்கத்திற்கு எதிராக உப்புச் சத்தியாக்கிரகத்தைப் புகழ்ந்து பேசிய குற்றத்திற்காக தமிழகத்திலேயே முதன்முதலாகக் கைது செய்யப்பட்டார் முத்துசாமி ஆச்சாரியார் !சிறந்த தேச பக்தரான முத்துசாமி ஆச்சாரியார் 1930 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதியன்று தமது சொந்த ஊரான கயத்தாறைச் சேர்ந்த தாயம்மாள் என்பவரை , தமது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டார் .திருமணம் முடிந்த ஐந்தாம் நாளில் அதாவது 1930 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி மண முடித்த பூவாசமும் புது மாப்பிள்ளைக் கோலமும் கலையுமுன்பே கைதாகி ஒருவருட சிறைத்தண்டனை பெற்றார் .பெல்லாரி , வேலூர் , திருச்சி ஆகிய சிறைகளில் அவரது தண்டனைக் காலங்களைக் கழிக்க நேரிட்டது .திருமணமான 5ஆம் நாளே கணவனைப் பிரிந்து வாடிய அவரது மனைவியின் நிலையை நினைக்கும்போது கல் நெஞ்சும் கரைவதாயிற்று .- 1 ' ' சிறையிலிருந்து விடுதலை பெற்றபின் திரு முத்துசாமி ஆச்சாரியார் இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .திரு .குமாரசாமி ராஜா தலைவராக இருந்தார் .மாவட்ட காங்கிரஸில் காமராசர் சாதாரண உறுப்பினராக இருந்து வந்தார் " . 1932ல் அன்னிய துணி மறுப்புப் போராட்டம் துவங்கிற்று . அதிலும் குதித்தார் முத்துசாமி . ஒரு பிரசங்கத்திற்காகக் கைது செய்து ஓராண்டு சிறைத்தண்டனையும் விதித்தது வெள்ளை ஏகாதிபத்தியம் ! திருச்சி , வேலூர் சிறைகளில் ராஜாஜி , பட்டாபி சீத்தாராமையா , சத்தியமூர்த்தி பிரகாசம் , பக்தவத்சலம் முதலிய தலைவர்களோடு சேர்ந்து மத்துசாமி ஆச்சாரியாரும் சிறைவாசம் அனுபவித்தார் . 1930ல் உப்புச் சத்தியாக்கிரகத்தின்போதும் 1932ல் அன்னியத் துணி மறுப்பு இயக்கத்தின்போதும் கைதாகி ஒவ்வொரு ஆண்டுசிறைத்தண்டனை பெற்ற தியாகி முத்துசாமி 1933ல் காமராசருடன் சேர்ந்து காமராஜ் அண்டு கோ என்ற பெயரில் இன்ஷூரன்ஸ் கம்பெனி ஒன்றினை ஆரம்பித்தார் .ஏற்கனவே தியாகி முத்துசாமி ஆச்சாரியார் அவர்கள் பால்பண்ணை , செங்கல் சூளை மற்றும் ஓடு தயாரித்தல் , கோழிப்பண்ணை தவிர விவசாய வேலைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டிருந்தார் .இந்நிலையில் 1933ல் சென்னைச் சதிவழக்கு என்ற பெயரால் தேசியவாதிகள் மீது தொடரப்பட்ட சர்வமாகாண சதி வழக்கில் காமராஜையும் சேர்க்கப் போலீசார் முயன்றனர் .உதகமண்டலம் வர இருந்த வங்க அடக்கு முறை கவர்னர் சர் .ஜான் .ஆண்டர்சனைச் சுட்டுக் கொல்ல சதி நடந்ததாகவும் அதற்குக் காமராஜ் தான் பொறுப்பு என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது .ஆனால் அது வெற்றி பெறாமல் போகவே அடுத்து ஒரு சதி வழக்கை ஜோடித்தனர் ." ஸ்ரீவில்லிப்புத்தூர் - விருதுநகர் போலீஸ் ஸ்டேஷன் வெடிகுண்டு வழக்கு " என்ற மற்றொரு வழக்கைத் தயார் செய்தனர் .திரு .கே .எஸ் .முத்துசாமி முதல் எதிரி காமராஜ் 2 - வது எதிரி , நிருபர் மாரியப்பன் 3 - வது எதிரி .நாராயணசாமி 4 - வது எதிரி .வெங்கடாச்சலம் என்பவர் அப்ரூவராக மாறினார் , விருதுநகரில் " பாம்பே ஷோ " ஒன்று நடந்தது .அதில் முத்துசாமி இரவு 2 மணி வரை விருதுநகர் சப் - இன்ஸ்பெக்டர் அனந்தராமகிருஷ்ணனுடன் இருந்தார் .ஆனால் அதே இரவில் தான் விருதுநகர் போலீஸ் ஸ்டேசன் மீது வெடிகுண்டு வீசியதாக வழக்கு ஜோடிக்கப்பட்டது .சென்னையிலிருந்து சி ஐ .டி .இன்ஸ்பெக்டர் தோத்தாத்திரி ஐயங்கார் அதற்காகவே விருதைக்கு வந்து அந்த வழக்கை ஜோடித்தார் .ஆனால் அதில் பொய்ச்சாட்சி சொல்வதற்கு விருது நகர் சப் - இன்ஸ்பெக்டர் அனந்தராம் கிருஷ்ணன் மறுத்துவிட்டார் .அதனால் மாற்றல் உத்தரவு பெற்று வேறு ஊருக்குச் சென்றார் .சிவகாசி காவல்துறை உதவிக் கண் காணிப்பாளர் பார்த்தசாரதி ஐயங்கார் ( பின்னாளில் சென்னை மாநில ஐ ஜி . யாக இருந்து சென்னை விமான நிலையத்தில் கவர்னர் ஜெனரல் ராஜாஜியை வரவேற்கச் சென்ற காமராசரை அவமானப்படுத்தியவர் ) இந்த வழக்கை ஜோடிப்பதில் முழுப்பங்கு வகித்தார் .அப்ரூவர் வெங்கடாசலத்தை அடித்து உதைத்து சித்ரவதை செய்து ஒரு ஒப்புதல் கடிதம் வாங்கிநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கச் செய்தார் .ஆனால் மனச்சாட்சியை மதித்து நடக்கும் அப்ரூவர் வெங்கடாச்சலம் " தான் கொடுத்த ஒப்புதல் கடிதம் போலீசாரின் சித்ரவதைக்குப் பணிந்து தான் " என்று நீதிபதியின் முன்பு கூறிவிட்டார் .பிரபல பத்திரிகை ஆசிரியர் போத்தன் ஜோசப் அவர்களின் சகோதரரும் வழக்கறிஞருமான ஜார்ஜ் ஜோசப் , முத்துசாமி - காமராஜ் முதலிய குற்றவாளிகளுக்காக வாதாடி வழக்கில் வெற்றி பெற்றார் .இந்த வழக்கை விசாரித்த அடிஷனல் முதல் வகுப்பு மாஜிஸ்டிரேட் திரு , ஜே .பி .எல் .மன்றோ , போலீஸ் தரப்பின் சாட்சியங்கள் நம்பத்தக்கவையாக இல்லை .இவ்வளவு அறிவுள்ள இளைஞர்கள் ஒரு வெடிகுண்டுச் சதியை இவ்வளவு பலவீனமாகத் திட்டமிடமாட்டார்கள் என்று கூறி முத்துசாமி உட்பட அனைவரையும் விடுதலை செய்தார் , இந்த வழக்கு நடந்துகொண்டிருந்த போது தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த காந்திஜி , ராஜபாளையத்தில் குமாரசாமி ராஜா இல்லத்தில் இருந்த டாக்டர் ராஜனிடம் இந்த வழக்கைத் தீவிரமாக நடத்துமாறு கூறினார் .டாக்டர் ராஜன் , வழக்கு வெற்றிபெறப் பெரிதும் உதவியாக இருந்தார் .|" 1937ல் சட்டசபைத் தேர்தல் நடந்தது . விருதுநகர் தொகுதியில் வெள்ளையரின் அடிவருடிக் கட்சியான ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் வி . வி , ராமசாமி போட்டியிட்டார் . அவரை எதிர்த்துக் காங்கிரசின் சார்பில் காமராஜரையே நிறுத்தவேண்டும் என்று கே . எஸ் . முத்துசாமி வாதாடினார் . ஆனால் காமராஜரை நிறுத்தினால் வெற்றிபெற முடியாது என்று தமிழகப் பார்லிமெண்டரி போர்டு தலைவர் சத்தியமூர்த்தியும் , முத்ுரங்க முதலியாரும் மறுத்தனர் . முத்துசாமியோ மிகவும் பிடிவாதமாக இருந்தார் . அப்போது காங்கிரஸ் மாநாடும் வந்தது . அதற்குச் சென்ற முத்துசாமி மத்திய பார்லிமென்ட்டரி போர்டு தலைவரான வல்லபாய் பட்டேலிடமே வாதாடி விருதுநகர் தொகுதிக்குக் காமராஜரையே ஏற்குமாறு செய்து திரும்பினார் . சத்தியமூர்த்தியையும் , முத்துரங்க முதலியாரையும் எதிர்த்து ஒருவர் சீட் வாங்கினாரென்றால் அது " இந்த முத்துசாமி " தான் என்று அக்காலத்தில் வியந்து பேசப்பட்டது ! ' 'தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அருப்புக்கோட்டை தாலுகா பொறுப்பை முத்துசாமியும் , சாத்தூர் தாலுகா பொறுப்பைக் காமராசரும் கவனிப்பதென்று முடிவு செய்தனர் .இறுதியாக முத்துசாமி ஆச்சாரியாரின் முனைப்பான முயற்சியால் காமராஜர் வெற்றி பெற்றார் .முத்துசாமி ஆச்சாரியார் பொறுப்பு வகித்த அருப்புக்கோட்டையில் பெற்ற அதிக வாக்குகளே காமராசரின் வெற்றிக்கு வழிகோலுவதாக அமைந்தது !1938 ஆம் ஆண்டில் தியாகி முத்துசாமி ஆச்சாரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .அதே ஆண்டில் அவர் விருதுநகர் நகராட்சியின் துணைத்தலைவராகவும் பணிபுரிந்தார் .ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அடிவருக்கட்சி என வருணிக்கப்பட்ட ஐஸ்டிஸ் கட்சியைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிய தியாகி கே .எஸ் .முத்துசாமி ஆச்சாரியார் அவர்களை , " மக்கள் உரிமை காக்கும் மாவீரன் கே . எஸ் . எம் ' ' என்று 1938 ஆம் ஆண்டு வெளியான ' ஹரிபுரா காங்கிரஸ் மலர் " என்ற இதழ் பாராட்டியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது ' .1938 - ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சென்னை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி விவரக் குறிப்பேட்டிலும் தியாகி முத்துசாமி ஆச்சாரியார் அவர்களது புகழ் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது ." தமிழ்நாட்டின் காங்கிரஸ் இயக்க ஸ்தாபன வேலைகளிலே தவிர்க்கமுடியாதவர்கள் எனக் கருதப்பட்ட ' ' விருதுநகர் இரட்டையர்கள் " எனப் புகழ் பெற்றவர்கள் காமராசரும் , முத்துசாமி ஆச்சாரியாருமே ஆவார் ?” என்று 1977ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட 4ஆம் வகுப்பிற்கான " இந்திய வரலாறு " என்ற பாடநூலில் இராமநாதபுரம் மாவட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது .இந்தியத் திருநாடு விடுதலை பெற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக - விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்கு பணிகளின் நினைவாக - அப்போதைய பாரதப்பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்கள் இந்தியத் திருநாட்டின் சார்பில் தியாகி முத்துசாமி ஆச்சாரியார் அவர்களுக்கு 15.08 .1972 அன்று தாமிரப்பட்டயம் வழங்கிச் சிறப்பித்தார் .1 ' சுமார் 30 ஆண்டு காலம் .தமிழக அரசியலைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டு பல மந்திரி சபைகளை ஆக்கவும் , அழிக்கவும் செய்த வல்லவர் ;நேருஜியின் மரணத்திற்குப் பின்னர் இந்தியாவின் பிரதமர் பதவிக்கு எழுந்த போட்டியை மூன்று முறை சமாளித்த இந்திய அரசியல் வழிகாட்டி என்றெல்லாம் புகழப்படும் தலைவர் காமராசருக்கே ஆரம்ப கால அரசியல் வழிகாட்டியாக இருந்த பெருமை ஒருவருக்கு உண்டென்றால் , அவர் பழம்பெரும் தேசபக்தர்களால் கே .எஸ் .எம் .என்று அழைக்கப்படும் விருதுநகர் கே .எஸ் .முத்துசாமி ஆச்சாரியார் அவர்களே ஆவர் .|என்று தேசிய முற்போக்கு வார ஏடான " பாரதம் " என்னும் ஏடு " காமராசரின் அரசியல் வழிகாட்டி " என்ற தலைப்பில் தியாகி கே .எஸ் .முத்துசாமி ஆச்சாரியார் அவர்களைப் பற்றிக் கூறியுள்ளதை எவரேனும் மறுக்கமுடியுமா ?காமராசர் என்ற மாமனிதர் ஒரு மாபெரும் மாளிகையாக கம்பீரமாக , நம் கண்முன்னே காட்சி தருகிறார் என்றால் அந்த மாளிகையின் அஸ்திவாரமாக , அடித்தளமாக அமைந்திருந்தவர் தியாகி கே .எஸ் .முத்துசாமி ஆச்சாரியார் அவர்களேயாவார் என்பது உண்மை !வெறும் புகழ்ச்சியில்லை !* தியாகச் செம்மல் எனத் திக்கெட்டும் புகழப்பெற்ற கே .எஸ் .எம் , அவர்கள் தாயம்மாள் என்னும் நல்லறச் செல்வியின் நயமிகு துணையுடன் இல்லறமாம் நல்லறத்தையும் இனிதே நடத்தி வந்தார் .இராமச்சந்திரன் , இந்திரவதி என்னும் இரு நன்மக்களை உலகிற்கிந்த அன்னார் 16 .12 .1972ல் அனைவரும் நெகிழ , மண்ண கம் விட்டு விண்ணகம் ஏகினார் , இத்தகைய தியாகச் செம்மல் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி கே .எஸ் .முத்துசாமி ஆச்சாரியார் அவர்களின் வரலாற்றினை இன்று மிக அரிதின் முயன்று உலகிற்கு விளக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏன் ஏற்பட்டது என்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது !

Tuesday, 22 January 2019

பிரம்மஸ்ரீ முக்கணாச்சாரியார்

               
                           பிரம்மஸ்ரீ முக்கண் ஆச்சாரியார்

                           கும்பகோணத்தில் பண்டித மார்க்க சகாயம் ஆச்சாரியார் என்பவர் மிகப்பெரிய புலவராகத் திகழ்ந்திருந்தார் .வடமொழி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பெரும்புலமை பெற்றுத் திகழ்ந்திருந்த பண்டித மார்க்க சகாயம் ஆச்சாரியார் அவர்கள் , மேலோரும் , நூலோரும் போற்றும் வண்ணம் வாழ்ந்திருந்தார் .வடமொழி , தமிழ்மொழி ஆகிய மொழிகளில் உள்ள இலக்கண இலக்கிய நூல்களைக் கற்பித்தலிலும் ஆச்சாரியார் அவர்கள் தலைசிறந்து விளங்கினார்கள் .அன்னாரது திருமகனாராக , பின்னாளில் விடுதலைப் போராட்டத் தியாக சீலரும் , மாபெரும் அறிஞருமாகத் திகழ்ந்த முக்கண் ஆச்சாரியார் , முன்னோர் செய்த தவப்பயனாய் வந்துதித்தார் , " கற்க கசடறக் கற்பவை " என்ற ' வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க முக்கண் ஆச்சாரியார் தம் தந்தையிடம் வடமொழி , மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உள்ள இலக்கண இலக்கிய நூல்களை இளமையிலேயே கற்றுத் தேர்ந்தார்.
                   இளமையிற் கல்வி சிலையில் எழுத்து அல்லவா? ஆதலின் பின்னாளில் அவரது வாழ்க்கையில் வெற்றிபெற அக்கல்வி அவர்க்கு உறுதுணையாகவும் , வழித்துணையாகவும் நல்ல முறையில் அமைந்தது ." தமிழ்த்தென்றல் " என்று மாபெரும் தமிழறிஞர்களால் வியந்து போற்றிப் பாராட்டப்பட்டுள்ள அறிஞர் திரு .வி , கல்யாணசுந்தரனார் ( திரு . வி . க . அவர்கள் தியாகி முக்கண் ஆச்சாரியாரைப் பற்றி வியந்து பாராட்டிக் கூறுகிறார் . திரு . வி . க . அவர்கள் தொண்டர்களாலும் தமிழ் அறிஞர்களாலும் , தொழிலாளர்களாலும் " தமிழ் அறிஞர் " என்ற பெயரால் அறியப்பட்ட மிகப்பெரிய அறிஞர் ஆவர் . அத்தகைய பேரறிஞர்நமது தியாகி முக்கண் ஆச்சாரியார் அவர்களை " அறிஞர் ” என்று தெரிவித்து , " அறிஞர் முக்கண் ஆச்சாரியார் சிறந்த தமிழ்ப்புலவர் நாவலர் " என்று " மேடைத்தமிழ் " என்ற நூலில் தாம் அளித்த அணிந்துரையில் குறிப்பிடுகிறார் . ' ஆகவே இத்தகைய புதல்வரைப் பெற இவரது தந்தை என்ன தவம் செய்தாரோ என்று உலகோர் வியப்புறும் வண்ணம் இவரது தந்தைக்கு இவர் பெருமை தேடித் தந்தார்என்பதும் புலனாகிறதல்லவா ? முன்ர்க் கூறியது போல் " மகன் தந்தைக்காற்றும் உதவி " என்னும் குறட்பாவிற்கிலக்கணமாக இவர் திகழ்ந்தார் என்பதும் இதனால் புலனாகிறதல்லவா ? தியாகி முக்கண் ஆச்சாரியாரின் புதல்வர் , திரு . டி . எம் . தெய்வ சிகாமணி ஆச்சாரியார் ஆவார் . " மேடைத்தமிழ் " என்னும் ஒப்பற்ற நூலை , திரு . எம் தெய்வசிகாமணி ஆச்சாரியார் அவர்கள் தமிழுலகிற்கு ஈந்தார் அந்நூல் 1952 ஆம்ஆண்டு தமிழக அரசின் இலக்கியத்திற்கான முற் பரிசை வென்ற சிறப்புடைய நூலாகும் . சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் , பாடநூலாக அமைக்கப்பெறும் சிறப்பினைப் பெற்றுத் திகழ்ந்தது . இந்த நூல் , தந்தை பெரியார் , * தமிழ் வல்லார் டாக்டர் . வரதராசனார் , பண்டிதமணி மு . கதிரேசச் செட்டியார் , தமிழ்த்தென்றல் திரு .வி .க முதலிய பல பேரறிஞரின் பாராட்டைப் பெற்றது .திரு டி .எம் .தெய்வசிகாமணி ஆச்சாரியார் அவர்கள் கிடைத்தற்கரிய எப் ஆர் .எஸ் .ஏ .( லண்டன் ) பட்டத்தைப் பெற்றவர் .தமிழ்த்தென்றல் திரு .வி .க .அவர்கள் " விஸ்வகுல திலகம் குலோத்தாராக " திரு .டி .எம் .தெய்வசிகாமணி ஆச்சாரியார் அவர்களைப் பற்றி " மேடைத்தமிழ் " என்னும் நூலின் அணிந்துரையில் , பர்கள் " மேடை சீர்பட்டால் எல்லாஞ் சீர்படும் , மேடையைச் சீர் செய்யும் பல திறத் தொண்டுகளை முறை முறையே கிளந்து கூறலாம் . ஈண்டு விழுமிய ஒன்றைக்குறித்தல் சாலும் . அது நல்லிலக்கியத் தொண்டு அத்தொண்டில் நந்தமிழ் நாட்டில் ஒருவர் ஈடுபட்டனர் . அவர் எவர் ? அவர் விஸ்வகர்ம மணிவிளக்கு -கலைக்கூடம் - சற்பச் செல்வம் - திரு . தெய்வசிகாமணி ஆச்சாரியார் என்பவர் ,திரு , தெய்வசிகாமணி ஆச்சாரியார் 1881 ஆம் ஆண்டில் மேடைத் தமிழ் செய்த தவப்பயனால் தோன்றியவர் .அவர் தந்தையார் தமிழ்க்கலைஞர் முக்கணாச்சாரியார் , தாயார் பார்வதி அம்மையார் , ஒரு தமிழ்ச்சேயை ஈன்ற வயிற்றுக்கு எனது வாழ்த்தும் வணக்கமும் உரியனவாக !" அறிஞர் முக்கண்ணாச்சாரியார் சிறந்த தமிழ்ப் புலவர் நாவலர் . காங்கிரஸ் மேடையில் 1887 - ல் முதல் முதல் தமிழ் மழை பொழிந்தவர் அவரே , அந்நாவலர் வழித்தோன்றலாகிய தெய்வ சிகாமணி ஆச்சாரியார் வழி நாவலர் இலக்கியம் - மேடைத் தமிழ் பிறந்ததில் வியப்பொன்றுமில்லை , நெல் கமுகாய் நீளுமோ தந்தையறிவு மகனறிவு , தக்கார் தகவில ரென்பது தத்தம் எச்சத்தால் காணப்பெறும் . தந்தை மகற்காற்றும் உதவிஅவையத்த- முந்தியிருப்பச் செயல் என வரூஉம் பெரியோர் மொழிகள் பொய்க்குமோ ? திரு , தெய்வசிகாமணி ஆச்சாரியார் இளமையில் கற்பன கற்றார் , கேட்பன கேட்டார் அவர்தங் கல்வி அறிவு ஒழுக்கத்திறன் கண்ட அரசாங்க ஊழியம் அவரை வலிந்து அணைந்தது . அன்பர் ஆச்சாரியார் வாழ்க்கையை ஒரு செல்வக் களஞ்சியம் என்று சுருங்கச் சொல்லலாம் . அவர்தம் வாழ்க்கையில் கல்விச் செல்வம் , பொருட்செல்வம் , மனைச்செல்வம் , சேய் செல்வம் வழிவழிச்செல்வம் முதலிய செல்வங்கள் பூத்துள்ளன . இச்செல்வங்கட்கெல்லாம் உயிர்ப்பளிக்கும் ஒரு பெருஞ்செல்வம் ஆச்சாரியாரிடம் பொருந்தியுள்ளது . அது தொண்டுச் செல்வம் அதுவே செல்வத்துள் செல்வம் , அச்செல்வம் , தெய்வசிகாமணி ஆச்சாரியாரைத் தமக்கென வாழாது , பிறர்க்கென வாழ்வோராக்கியது .விசுவகர்ம சமூகத்துக்கு ஆச்சார்யார் ஆற்றிய பணிகள் மலையென ஓங்கி நிற்கின்றன .கடலெனப் பரந்து கிடக்கின்றன .அவரது வாழ்க்கை பெரிதும் சமூகப் பணிக்குப் பயன்பட்டது .அதை நன்குணர்ந்த சமூகம் அவரைக் " குலோத்தாரகர் " என்று போற்றித் தனது நன்றியைத் தெரிவித்தது .ஆச்சாரியாரின் சமூகப் பணிகளிடையே , நாட்டுப்பணி , சமயப்பணி , கலைப்பணி , மொழிப்பணி முதலிய பணிகளும் விரவியே நிற்கின்றன " ' என்று குறிப்பிடுகிறார் . பின்னாளில் இத்தகு சிறப்புப் பெற்ற திரு . டி . எம் . தெய்வசிகாமணி ஆச்சாரியார் அவர்களை உலகுக்கு ஈந்து " கண்ணெனத் தகும் எனக் கூறப்படும் எண்ணும் எழுத்தும் அறிவித்து , நல்லொ நல்லியல்புகளைக் கற்பித்து உலக அரங்கில் விளங்கித் தோல் செய்தவர் அவர்தம் தந்தையாகிய முக்கண் ஆச்சாரியாரல்லவா ? இவ்வாறு முன்னரே கூறியது போல் " தந்தை மகற்காற்றும் நன்றி !என்ற குறட்பாவிற்கு தியாகி முக் கண் ஆச்சாரியார் உதாரணமாகத் திகழ்ந்ததை நாமறிகிறோமல்லவா ?ஆகவே தான் மேலே கூறப்பட்ட இரு குறட்பாக்களுக்கும் இலக்கியமாகத் திகழ்ந்த ஒப்பற்ற விஸ்வகர்மப் பெருங்குலத் தலைவர் தியாகி முக்கண் ஆச்சாரியார் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறமுடிகிறது .முக்கண்ணாச்சாரியார் அவர்களின் |வாழ்க்கைத் துணைவியாக - " தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற சொற்காத்துச் சோர்விலாத பார்வதியம்மையார் பலர் போற்றும் தெய்வீக நற்பண்புடைய பெண்மணியாகத் திகழ்ந்திருந்தார் . தியாகி முக்கண் ஆச்சாரியார் ஒருவர் மட்டுமே வெள்ளையர்களால் புகழப்பட்டு இந்திய வரலாற்று நூல்களில் இடம்பெற்றுவிட்ட விஸ்வகர்ம ஏந்தல் என்பதை நாம் உணர்ந்து பூரிப்படைகிறோம் . | 1885ல் இந்தியக் காங்கிரசை நிறுவிய " ஆக்டேவியன் ஹியூம் என்பவர் முக்கண் ஆச்சாரியாரைப் பற்றி விரிவாகப் பாராட்டி எழுதியுள்ளார் , அன்னிபெசன்ட் அம்மையாரும் தியாகி முக்கண் ஆச்சாரியாரை விரிவாகப் பாராட்டியுள்ளார் .வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் தேச பக்தர்கள் ஆண்டு தோறும் ஒரு நகரில் கூடுவார்கள் .சுதந்திரம் அடைவதற்கான பல்வேறு திட்டங்களைத் தீட்டி அவை குறித்து விவாதித்து அவற்றைச் செயல்படுத்தும் வழிவகைகளைப் பற்றி அப்போது முடிவு செய்வார்கள் .அவ்வாறு அவர்கள் கூடும் கூட்டமே " காங்கிரஸ் மகாசபை " என்பதாகும் .நாட்டுப்புறங்களிலே முக்கியமான நிகழ்ச்சிகள் நடைபெற , அதுகுறித்து விவாதிக்க வளர் கூடுதல் என்ற நிகழ்ச்சி நடைபெறுவது போலக் காங்கிரஸ் மகாசபை கூடியது " காங்கிரஸ் " என்ற ஆங்கிலச் சொல்லுக்கே கூட்டம் அல்லது சபை என்பது தான் பொருள் , இந்திய தேசியக் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட பின் , முதல் காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் கிபி .1885ல் டிசம்பர் 28 , மற்றும்29 ஆம் நாட்களில் பம்பாய் " கோகுல்தாஸ் தாஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில் கூடியது , 1886 ஆம் ஆண்டில் இரண்டாவது காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் கல்கத்தாவில் நடைபெற்றது . பின்னர் , மூன்றாவது காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் கி . பி . 1887 ஆம் ஆண்டு டிசம்பர் 28 , 29 , 30 , 31 ஆகிய நான்கு நாட்கள் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் "மக்கீஸ் கார்டன் " என்ற இடத்தில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட பந்தலின் கீழ் நடைபெற்றது . மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா முழுவதிலிருந்தும் 760 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் . அவர்களில் 607 பேர் மட்டுமே கலந்துகொண்டனர் . மாநாட்டிற்கு பத்ருதீன் தயாப்ஜி " என்பவர் தலைமை தாங்கினார் .மூன்றாவது காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் ஏழாவது தீர்மானம் மிக முக்கியமானதாகும் ." ஆங்கில மோகம் அலைமோதிக்கொண்டிருந்த அக்காலத்தில் , காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலில் ஆணித்தரமான கருத்துக்களை அழகுத் தமிழில் அள்ளி வீசியவர் முக்கண் ஆச்சாரி என்பது அந்நாளில் மூக்கின் மேல் விரல் வைத்து வியப்புறத் தக்கதொன்றாகும் ! பம்பாயில் நடைபெற்ற முதல் காங்கிரஸ் மகாசபைக் கூட்டநடவடிக்கைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் நடைபெற்றது .ஆங்கிலம் படித்த வகுப்பாரின் கட்சியை எடுத்துக் கூறும் இடமாகவே இந்த மகாசபை இருந்தது என்று " உலகச் சரித்திரக் கடிதங்கள் " என்ற நூலில் " முன்னாள் பாரதப் பிரதமர் நேரு அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக , க . பொ அகத்தியலிங்கம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் ' ஆங்கில மோகம் அடைமழை மேகமாகச் சூழ்ந்திருந்த அக்காலத்தில் தான் முக்கண் ஆச்சாரியார் அவர்கள் முதன்முதலில் காங்கிரஸ் மகாசபையில் தமது கருத்துக்களை ஆணித்தரமாக தமிழில் எடுத்துரைத்தார் என்பது உலக வரலாற்றுச் செய்தியாகி விட்டது ! காங்கிரஸ் வரலாற்றில் தனிச்சிறப்புக் கொண்ட , " முதல் தமிழ்ச் சொற்பொழிவாற்றிய திரு .முக்கண்ணாச்சாரியாரை ஹ்யூம் உத்தியோகபூர்வமான அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் ஆனால் திரு .பட்டாபி சீதாராமய்யா எழுதிய " காங்கிரஸ் வரலாற்றில் முக்கண் ஆச்சாரியாரின் விவாதத் திறமை வாய்ந்த முதல் தமிழ்ப் பேச்சுப் பற்றிய பாராட்டுரை இடம்பெறவில்லை " சுதேசமித்திரன் ” வெளியிட்ட காங்கிரஸ் வரலாற்றில் முக்கண் ஆச்சாரியாரின் சொற்பொழிவின் சுருக்கம் இடம்பெற்றுள்ளது ஆனால் இதில் கூட இவரது பேச்சு முதல் தமிழ்ப் பேச்சு என்னும் குறிப்பு இல்லை என்பது வருந்தத்தக்கதாகும் !தொழிற்கல்வி பற்றிய சென்னைக் காங்கிரசின் ஏழாவது தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் முக்கண் ஆச்சாரியார் முதன் முதலாகத் தமிழில் உரை நிகழ்த்தினார் என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம் .இவருடன் எஸ் .வி .அய்யாசாமிப் பத்தர் எண் 213 ) மற்றும் ( எண் . 214 ) என் , வைத்தியலிங்கப் பத்தர் ஆகியோரும் இம்மாநாட்டில் பங்கேற்றனர் .முக்கண் ஆச்சாரியார் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவின் தமிழ் மூலம் கிடைக்கப் பெறவில்லை ." ஆக்டேவியன் ஹியூம் " தொகுத்த காங்கிரஸ் அறிக்கையில் , அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது .காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலாக நிகழ்த்தப்பட்ட தமிழ்ச் சொற்பொழிவின் மூலம் கிடைக்காத நிலையில் நமக்குக் கிடைத்துள்ள ஆங்கில மொழி பெயர்ப்பின் தமிழாக்கம் இங்கு குறிப்பிடப்படுகிறது ." தலைவர் அவர்களே , பெரியோர்களே ! கல்கத்தா , பம்பாயில் நடைபெற்ற இரு காங்கிரஸ் மாநாடுகளிலும் குறிப்பிடத்தக்க குறைபாடு ஒன்று தெரிந்தது . இந்திய மக்கட் தொகையில் உத்தியோகஸ்தர்கள் , தொழில் துறையாளர் , வர்த்தகர்கள் விவசாயிகள் ஆகியோர் நான்கு முக்கிய வகுப்புகளாகும் . இவர்களுள் தொழில் துறையாளர் அந்தக் காங்கிரஸ் மாநாடுகளில் போதுமான அளவு பிரதிநிதித்துவம் பெறவில்லை . ஆனால் அந்தக் குறைபாடு , இந்தக் காங்கிரசில் நீங்கியது . கனவான்களே ! இந்தத் தொழில்துறையாளர் பிரதிநிதிகளில் தான் ஒருவன் தஞ்சாவூர் மாவட்ட அனைத்துத் தொழில் துறையாளர் சார்பில் கும்பகோணத்தில் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவர் , பிரதிநிதிகளாக வந்துள்ளோம் . இந்த அவையின் முன்னுள்ள தொழிற்கல்வியைப் பற்றிய விவாதம் நாட்டிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் . நான் பிரதிநிதித்துவம் வகிக்கும் வகுப்பிற்குப் பெருமளவு நன்மை பயக்கும் இந்த விவாதத்தில் நான் சில சொற்கள் கூறக் கடமைப்பட்டவன் - நமது நாட்டின் முன்னேற்றத்திற்காகக் காங்கிரஸ் மனப்பூர்வமாகப் பாடுபடுகிறது என்பதில் ஐயமில்லை . பெருமக்களே ! புகழொளி மிக்க ராஜதந்திரி சர்டி மாதவராவ் அவர்கள் , நடுநிலைமையுடன் பணியாற்றும் , நீதிபதி திரு .முத்துசாமி ஐயர் போன்ற ஆயிரக்கணக்கானவர்கள் உயர்ந்த பொறுப்பான பதவிகளை அலங்கரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோம் .|ஆனால் இது மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கு நம்மை வழிப்படுத்தும் என நாம் எதிர்பார்ப்பது முற்றிலும் பொருந்தாது , தொழில் துறை முற்றிலும் இல்லாத நிலையில் , வர்த்தகமோ , விவசாயமோ நாட்டின் வளர்ச்சிக்கு நம்மை வழிப்படுத்தாது .ஏனென்றால் , வர்த்தகத்திற்கும் , விவசாயத்திற்கும் முதன்மையான தூண்டுதல் அளிப்பது தொழில் துறையே !ஆக , நாட்டின் வளர்ச்சிக்கு முதற்காரணமாக விளங்கும் தொழில் துறையின் இன்றியமையாமையை இந்த உலகத்தில் யார் மறுக்கத் துணிந்தவர்கள் ?ஐரோப்பிய நாடுகள் தற்போது உண்மையிலேயே மகிழ்ச்சியில் திளைக்கும் வளர்ச்சிக்குத் தொழில் துறையல்லவா உதவியுள்ளது !ஆகையினால் , பெருமக்களே !நாட்டின் வளர்ச்சிக்கு உறு துணையாகவுள்ள கலைகளும் , தொழில்களும் நலிந்து தேய்ந்து ஒழிந்து போகாமல் காப்பாற்ற வேண்டியது நமது முக்கிய சுடமையல்லவா ?நாட்டின் பல பாகங்களிலும் கலைகளும் , தொழில்களும் காக்கமுடன் வளர்க்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் கருத்தாக இருக்கவேண்டும் கருணை யும் , பெருந்தகைமையும் வாய்ந்த நமது ஆட்சி , நாட்டின் தொழில் துறை முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தொழிற் கல்விக்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி , பெருமளவில் மக்கள் பயன்பெற , விரிவாகப் புகுத்த முன்வருவதில் காலதாமதம் செய்யக்கூடாது .பெருமக்களே !நமது நாடு இன்று நெருக்கடியான நிலையில் உள்ளது வரிவிதிப்பு உயர்ந்து விட்டது , முறையான முன்னேற்றத்திற்கான மூலாதாரங்கள் பற்றாக்குறையாக உள்ளன .இந்த நாட்டின் செல்வம் தொடர்ந்தாற்போல வெளியேறிக் கொண்டிருக்கிறது .இந்த ஆட்சி , நாட்டின் தற்பொழுதுள்ள நிலைமையைக் கண்டும் பிடிவாதமாக அலட்சியம் காட்டி வருமாயின் , இந்த ஆட்சி , இப்பொழுதுள்ள நெருக்கடி நிலையை உணர்ந்து கடுமையான முயற்சிகளை விரைந்து எடுத்து நாட்டைக் காப்பாற்றத் தவறுமாயின் , நாட்டிலுள்ள எஞ்சிய செல்வமும் , இந்த நாட்டை முழுமையான அழிவில் ஆழ்த்திவிட்டு , தொலைவில் உள்ள நாடுகளிடம் சென்றடையும் நாட்டை எதிர்நோக்கியுள்ள இந்தப் பேரழவைத் தவிர்க்க , கனவான்களே !நாம் ஆட்சியாளரிடம் முறையிடுவோம் .|தொழிற்கல்வி நிலையங்கள் நாடெங்கும் நிறுவப்பட்டு நன்கு நடத்தப்பட வேண்டும் .இந்தியர்களுக்குத் தேவைப்படும் இயந்திரப் பொருட்கள் இங்கேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் .இவ்வாறு உற்பத்தியில் ஈடுபடுவோர்களுக்குத் தேவைப்படும் பயிற்சி , செய்முறைகளைப் பற்றிய படிப்பு முதலானவற்றிற்கு இங்கேயே ஏற்பாடு செய்யவேண்டும் .நாடு முழுவதுமாக இத்தகைய தொழில் நிலையங்களை நிறுவ இயலவில்லையென்றால் , முக்கிய நகரங்களிலாவது நிறுவுமாறு , நாம் ஆட்சியாளரிடம் கேட்கவேண்டும் கெ மூலதனத்தை ஆட்சியாளர் தருவதானாலும் சரி , அல்லது ஆட்சியாளரின் உத்தரவாதத்தின்பேரில் பிறர் தருவதானாலும் சரி , ஏற்றுக்கொள்ளவேண்டும் - இந்தத் தொழில் நிலையங்களின் நிர்வாகம் , சென்னை கலைப் பள்ளியைப் போன்று அரசாங்கத்திடமே முழுவதுமாக இருக்க விடக் கூடாது , அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும் , மேற்பார்வையிலும் உள்ள , தனியார் நிர்வாகத்தில் விடப்பட வேண்டும் .இந்த நிலையங்களில் உற்பத்தியாகும் பண்டங்களை அரசாங்கம் வாங்கி ஊக்குவிக்கவேண்டும் .இந்த முயற்சிகள் வெற்றி அடைந்தால் மேலும் பல நகரங்களில் நிலையங்களை நிறுவி விரிவுபடுத்தவேண்டும் , |நம் நாட்டுக் கைவினைஞர்கள் , தொழில் துறையாளர்களை ஊக்கப்படுத்த , அரசாங்கம் ஆங்காங்கு பொருட்காட்சிகளை நடத்த வேண்டும் பொருட்காட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் திறமையைப் பாராட்டிப் பரிசுகளும் , சான்றிதழ்களும் வழங்குவதற்குத் திட்டங்கள் வகுக்கவேண்டும் .இதற்காக எல்லா ஊராட்சிகளும் , நகர்மன்றங்களும் " பரிசு நிதி " ஒன்றை ஏற்படுத்தவேண்டும் காங்கிரஸ் , இந்த வழியில் சாதனைகள் காணப் பாடுபட வேண்டும் .இதனால் , அழிந்துவரும் தொழில்கள் உயிர் பெற்று , முன்னேறத் தூண்டுதல் கிடைப்பதுடன் , நாடும் சுயபலத்தில் நிற்க உதவும் உலக நாடுகளில் நாம் இழந்த இடத்தை மீண்டும் பெற முடியும் , தொழிற்சாலைகளும் , தொழிற்பட்டறைகளும் பெருகி - விட்டால் நமது நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கெளரவமாக வேலை வாய்ப்புகளைப் பெறுவர் .வேலைவாய்ப்பற்ற இந்த மக்கள் உயிர்வாழப் போராடுகிறார்கள் !இந்த நாட்டின் நானூற்றைம்பது இலட்சம் மக்கள் , அனாதைகளாக இருக்கிறார்கள் .அரசாங்கப் புள்ளி விவரங்களுக்கிணங்க ஒருநாளுக்கு ஒரு வேளைச் சாப்பாடு சுட இம்மக்களுக்குக் கிடைப்பதில்லை , இந்த அனாதைகளுக்கு ஒரு வேளை உணவேனும் தரக்கூடிய வேலை வாய்ப்புக்களை உண்டாக்கிப் பெரும் கலைகளும் , தொழில்களும் வளர்ந்தோங்கும் நன்னாளை நாம் எதிர்பார்ப்போமாக !பெருமக்களே !உங்கள் பொன்னான நேரத்தை நான்வெகுவாக எடுத்துக்கொண்டேன் !பொறுத்தருள்வீர் !உங்கள் முன் நான் பேசியதில் அற்ப விஷயங்கள் ஏதேனும் இருந்தால் பொருட்படுத்தவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டு என் உரையை முடித்துக்கொள்கிறேன் " 1 சற்றேழத்தாழ 111 ஆண்டுகளுக்கு முன்பு முழங்கப்பட்ட முக்கண் ஆச்சாரியார் அவர்களின் முதல் தமிழ்க் குரலின் தீர்க்கமும் தீட்சண்யமும் , தெவிட்டாத சிந்தனைத் தேன் மழையாய்த் திகழ்வதை நாம் இன்னும் உணரமுடிகிறதல்லவா ? | " ஆக்டேவியன் ஹியூம் " தமது அறிக்கையில் முக்கண் ஆச்சாரியார் பற்றி மிக அற்புதமாகப் பாராட்டிக் கூறியுள்ளார் " But perhaps the most interesting feature in the debate was a long sensible , matter of fact speech in Tamil by Mr .Mookanasari of Tanjore " ? என்று குறிப்பிடுவது நமது சிந்தையையும் , செவியையும் கவர வல்லதாயுள்ளது . | முக்கண் ஆச்சாரியாரின் முதல் முழக்கத்தைப் பற்றி அன்னிபெசன்ட் அம்மையார் அவர்கள் " How India wrought for freedom " என்ற நூலில் வெகுவாகப் பாராட்டியுள்ளார் . " On the following day , Resolution VII was very earnestly and competently discussed ;a working carpenter - sent with two other artisarts from Tanjore - made a very ser1sible speech ..." " விடுதலைத் தெய்வமே உழைப்பவர்க்கெல்லாம் உணவு நீ யாவாய் ஆங்கில நாட்டில் அன்றி நாம் காணும் சோற்றுப் பஞ்சம் , சுதந்திர தேவியே நின்னுடை இன்னருள் நிலவு நாடுகளில் தோன்றாதம்ம ..தோன்றாதம்ம " என்ற ஷெல்லியின் கவிதையைக் குறிப்பிட்ட அன்னிபெஸண்ட் ஆங்கில நாட்டில் என்பதை ' பாரத நாட்டில் ' என்று மாற்றி வாசிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார் . Referring to Mr . Mokkanasari ' s concluding words . . . என்றுஅன்னிபெசன்ட் , முக்கண் ஆச்சாரியின் முதல் தமிழ்க் குரல் குறித்துத் தொடர்ந்து சொல்லிச் செல்கிறார் .தாய்மொழியில் தான் விடுதலை உணர்வைத் தட்டி எழுப்பமுடியும் என்று 1887ல் முக்கண் ஆச்சாரி முதன்முதலாக வீரமுழக்கம் செய்து வித்திட்டார் .1920ல் நடைபெற்ற நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டில் அந்த உண்மை உறுதி செய்யப்பட்டது , அதன் பலம் அங்கீகரிக்கப்பட்டது ." தாய்மொழி வழிவகுத்த தந்தை ' என்று தமிழகத்தின் தவப்புதல்வராம் முக்கண் ஆச்சாரியார் உலக வரலாற்றில் ஓர் உன்னதமான இடத்தைத் தமக்கென ஒதுக்கி வைத்துவிட்டார் . தியாகி முக்கண் ஆச்சாரியார் பற்றி அவர்தம் அருந்தவப் புதல்வர் விஸ்வகுல திலக குலோத்தராக டிஎம் , தெய்வசிகாமணி ஆச்சாரியார் எப் ஆர் . எஸ் . ஏ . ( லண்டன் ) முன்னாள் மேலவை உறுப்பினர் அவர்கள் , தமது "மேடைத்தமிழ் ” என்ற நூலில் , - " தென் இந்திய விஸ்வகர்ம மகாநாட்டுத் தந்தைய ரென சிறப்புப் பெயர் வாய்ந்தவரும் அம் மத்திய சபையின் ஆயுள் காலத் தலைவரும், குடந்தை நக ராண்மைக் கழகத்தின் நீடிய கால அங்கத்தினரும் ,அந்நகர் நிர்மாணத்தை முயன்று முடித்தவரும் , ஓவிய வித்தகரும், நற்றமிழ்ப் புலவரும் , சீரிய மேடைத் தமிழ் நாவலரும், மேடைத் தமிழ்ப் பேச்சின் அபிவிருத்திக்குத் தனிப் பாடசாலைகளைக் கண்டு அக்கலையை ஆர்வத்தோடு வளர்ததவரும்1887 ஆம் ஆண்டு சென்னையில் குழுமிய மூன்றாவது இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபையில் கைத்தொழில் , தொழிற்கல்வி , சுதேசியம் ஆகியவை பற்றி முதல் முதல் தாய்மொழியில் பொன்மாரி பெய்து நாட்டுக்கு நல்வழி காட்டியவருமாகிய எமது நற்றந்தையர் " என்று கூறுவது இங்கே நினைந்தின்புறத்தக்கதாகும் !' இத்தகு சிறப்பு வாய்ந்த பெருமையுடைய தியாகியாரின் பெயரைக் குறிப்பிடுவதில் தான் எத்தனைக் குழப்பம் நிலவுகிறது !ஒருசிலர் மூக்கன் ஆச்சாரியார் என்று குறிப்பிடுகின்றனர் .வேறு சிலர் " முக்கண்ணா " ஆச்சாரியார் என்றும் " மூக்கண்ணு " ஆச்சாரியார் என்றும் குறிப்பிடுகின்றனர் .இன்னும் சிலர் " முக்கன் " ஆச்சாரியார் என்றும் குறிப்பிடுகின்றனர் .ஆனால் முக்கண் ஆச்சாரியார் " என்பதே சரியான பெயராகும் என்பது தமிழ் அறிந்தவர்களுக்குப் புலனாகும் . சிவபெருமானுக்கு முக்கண்ணான் , முக்கண்ணன் என்ற பெயர்களுண்டு ; மூன்று கண்களையுடையவன் என்பது இதன் பொருள் . சிவபெருமானுக்கு நெற்றியில் உள்ள கண் மூன்றாவது கண் என்று புராணங்கள் புகல்கின்றன . ' நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே " என்று தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவர் நக்கீர் நவின்றதாக நாம் அறிகிறோம் , வடமொழியிலும் தமிழிலும் பெரும்புலமை பெற்றிருந்த பண்டிதமார்க்க சகாயம் ஆச்சாரியார் தமது புதல்வர்க்கு முக்கண் ஆச்சாரியார் ( பரமசிவம் ஆச்சாரியார் ) என்று பெயரிட்டது அவரது நுண்மாண் நுழைபுலனை நமக்கு நன்கு எடுத்துக் காட்டுகிறது !

Thursday, 1 June 2017

ஸ்ரீ வீரவைராக்ய மூர்த்தி சுவாமிகள்

ஶ்ரீ வீர வைராக்கிய மூர்த்தி சுவாமிகள்
திருவண்ணாமலை அருகிலுள்ள சீனந்தல் எனும் ஊரில் ஆதி விஸ்வகர்ம பிராமண மடமான ஸ்ரீ ஜெகத்குரு ஆதி சிவலிங்காச்சாரிய குருபீடத்தின் ஏழாவது பீடாதிபதியே ஸ்ரீ வீர வைராக்கியமூர்த்தி சுவாமிகள் ஆவார் .இவர் இளமையிலேயே ருக்,யசூர், சாம, அதர்வண , பிரணவ எனும் ஐந்து வேதத்தின் தேர்ச்சியும் மற்றைய ஆகம,புராண இதிகாச நூல்களையும் கசடறக் கற்று வல்லுனரானார். இவர் திரிகால சிவபூஜை செய்து செம்பொருட்சோதியின் இன்னருள் பெற்று சிறப்புற வழி நடத்தி சென்றார்.
இவர் இவ்வாறு இருக்கும் போது திருவண்ணாமலை திருநகரை ஓர் மன்னன் ஆட்சி செய்து வந்தான் . அப்பொழுது கார்த்திகை தீபத்திருவிழா நிகழ்ந்து கொண்டிருந்தது .அவ்விழாவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வரும்  சமயம் திருவருணையில் உள்ள ஐந்து மடாதிபதிகளும் பல்லக்கில் ஆலய மரியாதையுடன் சுவாமிக்கு பின்னால் செல்வது வழக்கம். அவ்வண்ணமே திருவண்ணாமலையில் உள்ள பஞ்சமூர்த்திகளுக்கு பின்னால் பல்லக்கில் சென்றார்கள் .அது கண்ட மன்னன் சுவாமிஉலா வருவது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் மடாதிபதிகளை பல்லக்கில் ஏற்றி வருவது எதற்காக எனக் கேட்டான் .அது கண்ட அங்கிருந்த அன்பர்கள் அவர்கள் ஆலயத்திற்கு நேரும் இடையூறுகளை நீக்க வல்லவர்கள் . எனவே தான் இவர்களுக்கு இத்தகைய சிறப்பு என கூறினார்கள். அவர்தம் சொல் கேட்ட மன்னன் நன்று இதோ இங்குள்ள கோவிலின் காராம் பசுவை உடல் வேறு தலை வேறாக வெட்டுகிறேன் எனக்கூறி வெட்டினான் .இவர்கள் தெய்வ வல்லமை உடையவராக இருப்பின் இப்ப சுவை உயிர்ப்பிக்கட்டும் .இல்லையென்றால் இந்த சிவாலயத்தை அழிப்பேன் என சீறி ஆவேசமாக ஆணையிட்டு சென்றான்.
இது கண்ட மடாதிபதிகள் பல வகையிலும் காராம் பசுவை உயிர் பெற வைக்க முயன்றனர். முடியாத நிலையில் கருவறையில் உள்ள ஸ்ரீ அண்ணாமலையாரிடம் சென்று முறையிட்டனர். அப்பொழுது அண்ணாமலையார் அசரீரியாக "இங்கிருந்து வடதிசையில் கண்ணுவ மகரிஷி ஆஸ்ரமத்தின் கண் ஸ்ரீ ஆதி சிவலிங்காச்சார்ய குருபீட பாரம்பர்ய ஏழாவது பீடாதிபதியாக உள்ள ஸ்ரீ வீர வைராக்கியமூர்த்தியை அழைத்து வந்தால் தான் இவ்வரிய பணியினை செய்ய முடியும். எனவே அனைவரும் சென்று அழைத்து வருக" என்று கூறி மலர்ந்து அருளினார் .இது கேட்ட மடாதிபதிகள் திருமூலாரண்ய திவ்ய க்ஷேத்திரமாகிய சீனத்தில் மடாலயம் நோக்கி சென்றார்கள். அப்பொழுது சுவாமிகள் வயது பதினான்கு ஆகும் அவர் தமது நித்திய அனுஷ்டானங்களை மிருகண்டு நதிக்கரையில் முடித்து சிவயோகத்தில் அமர்ந்து இருந்த வேலையில் இரண்டு புலிகள் அவர் இருபுறமும் நின்று காவல் இருந்தன.இது கண்ட மடாதிபதிகள்  நாம் வயதில் மூப்பு எய்தி பூரணத்துவ நிலைக்கு பக்குவப்பட்டு உள்ளோம். ஆனால் இவரோ சிறுவனாக உள்ளாரே, இவரால் எப்படி இச்சீரிய அருஞ்செயலை செய்ய முடியும் என மனதளவில் எண்ணினார்கள். இவ்வாறு இவர்கள் எண்ணியதும் புலிகள் கர்ஜிக்கத் துவங்கின. இறைவன் அருள் தூண்ட தியானம் கலைத்த சுவாமிகள் அப் புலிகளை சாந்தம் அடையச் செய்ய அவைகள் புலித் தோல்களாக மாறி விட்டன.பின் தங்களது தவறை உணர்ந்து, தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை எடுத்துக் கூறினர்.
ஸ்ரீ வீரவைராக்கியமூர்த்தி சுவாமிகள் ஸ்ரீ ஆதிசிவலிங்காச்சார்ய மூர்த்தியின் அருளாசியை பெற்று பின்வருமாறு கூறினார், "நன்று நாங்கள் திருவண்ணாமலைக்கு வந்து துண்டிக்கப்பட்ட காராம் பாவினை உயிர் உண்டாக்க வேண்டுமாயின் ஒரு நாழிகை தூரத்திற்கு ஒரு உலைக்கூடம் அமைக்க வேண்டும் .அங்கே பாதரட்சை, கமண்டலம், தண்டம் காய்ந்து கொண்டிருக்க வேண்டும்" என ஆணையிட்டார். சுவாமிகள் உத்தரவுப்படி அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டன.
சுவாமிகள் அன்று தனது வழிபாட்டை நிறைவு செய்து சீனத்தல் மடத்திலிருந்து புறப்பட்டு ஒவ்வொரு உலைக்கூடத்திலும் புதிதாக காய்ந்து கொண்டிருக்கும் பாதரட்சை, கமண்டலம், தண்டம், முதலியவற்றை அணிந்து கொண்டு பழுக்க காய்ச்சிய பாதரட்சையை பூண்ட வண்ணமாகவே திருவண்ணாமலை ஈசான்ய குளக்கரையை அடைந்தார். மாலைப் பொழுதை நெருங்கியதால் சந்தியா வந்தனத்தை அங்கிருந்து ஓர்க் கைபிடி புல்லை எடுத்துக் கொண்டு ஆலயம் நோக்கி சென்றார். சுவாமிகள் ஆலயத்தினை நெருங்க நெருங்க வெட்டப்பட்டிருந்த காராம் பசுவின் உடல் ஒன்றாக இணையத் துவங்கியது, பின் கோவிலின் உட்சென்று சிவலிங்க மந்திரத்தை கூறி கமண்டலத்தில் உள்ள புனித நீரினை காராம் பசுவின் மீது தெளித்து பிரம்பால் தட்டினார். உடனே உயிரிழந்த அந்த பசு முழக்கமிட்டு எழுந்தது. அப்பொழுது தாம் கொண்டு வந்த புல்லை அதற்கு கொடுத்தார். அப்ப சுவின் கன்று துயர் நீங்கி துள்ளி வந்து பாலுண்டது. இக்காட்சியைக் கண்ட மன்னனும் மக்களும் வியப்புற்று நின்றனர். உடனே சுவாமிகள் நின் அருமை அறியா இம்மக்கள் மத்தியில் நீ இருக்கலாகாது எனக்கூறி பசுவை முக்தி அடைய செய்தார். பின்பு பசுவானது மறைந்தது.
இது கண்ட மன்னன் சுவாமியை நோக்கி என்னால் இதனை நம்ப முடியவில்லை, இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக நினைக்கிறேன், எனக்கூறி மீண்டும் சுவாமியை மன்னன் பரிசோதித்து பார்த்தான்.சுவாமியிடம் தாங்கள் உண்மையான இறைவனின் இன்னருள் உடையவர் எனில் நான் அளிக்கும் நெய்வேத்தியப் பொருட்களையே இறைவனுக்கு படைக்க வேண்டும் என்றான்.சுவாமிகள் அவ்வாறே ஆகட்டும் எனக் கூற அம்மன்னன் பல வகை மாமிச உணவுகளை தட்டிவி வைத்து ஓர் ஆடையால் மறைத்து அளித்தான்.சுவாமிகள் அண்ணாமலையாருக்கு அதனை நெய்வேத்தியமாக காட்டி பின் மேலாடையை நீக்க மாமிசங்கள் அனைத்தும் வண்ணமலர்களாக மாறி இருந்தன. அதனைக் கண்டதும் அனைவரும் வியந்தனர். மீண்டும் அம்மன்னன் நம்பவில்லை, மீண்டும் பரிசோதிக்க எண்ணினான். இறுதியாக தாங்கள் தவப்பயன்மிக்கவர் எனில் இங்குள்ள பெரிய கல் நந்தியை கனைத்தெழ செய்ய வேண்டும், எனக் கூறினான். அதைக் கேட்ட சுவாமிகள் தங்கள் விருப்பம் அதுவானால் இறைவன் குரு அருளால் அவ்வாறே நிகழும் என்றார். உடனே பெரியகல் நந்தி கனைத்து எழுந்து நின்று தனது காலை மடக்கி சுவாமிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மடாலயம் உள்ள திசையை நோக்கி தனது வலது காலை மடக்கி வலப்புறமாக தலையை திருப்பிய வண்ணம் அமர்ந்தது. ( திருவண்ணாமலை ஆலயத்தில் உள்ள நான்கு நந்தியும் இடது பக்கம் காலை மடக்கி அமர்ந்து இருக்க பெரிய நந்தி மட்டும் வலது பக்கம் காலை மடக்கியும் தலைவலது பக்கமாக பார்த்தவாறு உள்ளது). சிவலிங்க மந்திரத்தால் விளைந்த அரிய செயல்களை கண்ட மன்னன் மெய்சிலிர்க்க சுவாமியின் காலில் விழுந்து வணங்கி தனது ஆளுமைக்கு உட்பட்ட இந்த திருவண்ணாமலை முழுவதையும் உங்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான்.சுவாமிகள் பொருளாசை எமக்கு இல்லை எனவே எமக்கு தேவையில்லை எனக் கூறினார். இது கேட்ட மன்னன் இவ்வாதீன பீடாதிபதிகள் திருவண்ணாமலை ஆலயத்திற்கு வரும் சமயம் ஆலய பரிவாரங்களுடன் பல்லக்கில் அழைத்து வர வேண்டும் என செப்பேடு சாசனம் எழுதி வைத்து ,இன்றுமுதல் இம்மடம் மகத்துவமடம் என பெயர் பெறட்டும் என்று கூறி வணங்கி பணிந்து நின்றான்.
பின்னர் நால்வகை படைகளுடன் சுவாமிகளை அழைத்து சென்று மடாலயத்திற்கு சென்று மரியாதை செய்து விட்டு திருவண்ணாமலை திரும்பினான்.ஸ்ரீவைராக்யமூர்த்தி சுவாமிகள் வேத பாராயணம் செய்தும் மக்களுக்கு நல்லொழுக்கத்தையும், நற்பண்புகளையும் மக்களுக்கு பரப்பி வரலானார்.ஸ்ரீ சுவாமிகள் தனது மடத்தின் முதலாம் பீடாதிபதி ஸ்ரீஜெகத்குரு ஆதிசிவலிங்காச்சார்யமூர்த்தி சுவாமிகள் முக்தி அடைந்த இடத்திற்கு வலது புறம் தானும் முக்தி அடைந்து மக்களுக்கு இன்றளவும் அருள்பாலித்து வருகின்றார்.
ஸ்ரீ வீரவைராக்கியமூர்த்தி சுவாமிகள் முக்தி அடைந்த நாளிலிருந்து இன்று வரை அவருக்கு பின் வந்த மடாதிபதிகளாலும் விஸ்வகர்ம மக்களாலும் அவரது குரு பூஜா மகோன்னத விழா பிரதி ஆண்டு வைகாசி மாதம் முதல்ஞாயிற்றுக்கிழமையன்று ஆதினத்தில் வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.