Translate

Monday, 3 April 2017

நளன் விஸ்வகர்மா

நளன் விஸ்வகர்மா இராமர் தன் மனைவி சீதையை மீட்டு வர இலங்கைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு கடலைக் கடக்க வேண்டும் இலங்கைக்கும் இந்தியாவிக்குமிடையில் அணை கட்ட ஏற்பாடு செய்தார். அணையைக் கட்ட ஒரு விஸ்வகர்மாவின் உதவி தேவைப்பட்டது. அவர்கட்கு நள விஸ்வகர்மா உதவிக்கு முன் வந்தார். அநுமான் மலைகளைப் பிடுங்கி வந்து கொடுக்க அதை நளன் இடது கையால் வாங்கிக் கொண்டே இருந்தார். தான் இத்தனை பாடுபட்டுக் கஷ்டப்பட்டு மலைகளைப் பிடுங்கிவரத் தன் இடது கையால் வாங்கித் தன்னை அவமதிப்பதாக அநுமான் உணர்ந்தார். இம்முறைப்பாட்டை இராமரிடம் கூறினார். இராமனுக்கோ அணையை சீக்கிரமே முடிக்கவேண்டும். அநுமான் கோபித்துவிட்டால் அணை வேலை தாமதமாகிவிடும் நளவிஸ்வகர்மாவையும் எதுவும் முடியாது என இருவரையும் சமாதானம் செய்து அணையை முடிக்க ஏற்பாடுசெய்தார். அன்று மாலை நளனும் அநுமானும் ஆற்றுக்கு நீராடச் சென்றார்கள். நீராடப் போகும் முன் தன் கமண்டலத்தைக் கழற்றி ஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் வைத்தவிட்டு நீராடினார் நளன். நீராடி முடிந்தும் கமண்டலத்தை மறந்து விட்டதுபோல அங்கேயே விட்டுவந்தார். இருப்பிடம் வந்ததும் கமண்டலத்தை மரத்தடியில் வைத்துவிட்டு மறந்து வந்ததாகவும் அதைப்போய் எடுத்துவரும்படி அநுமானிடம் கூறினார். அநுமான் ஆற்றங்கரைக்குச் சென்றுகமண்டலத்தைக் கண்டு எடுக்க முயற்சி எடுத்தார். எவ்வளவுதான் முயன்றும் கமண்டலத்தை எடுக்க முடியவில்லை. மலைகளையும், மரங்களையும் வேரோடு பிடுங்கி வந்த அநுமானுக்கு நளனின் கமண்டலத்தை எடுக்க முடியவில்லை. தன்பலம் அறியாது அம்பலம் ஏறிய தன்னிலையை எண்ணி வேதனைப்பட்டார். பூர்வஞான பலத்தால் தான் தன் தாயின் கருவறையிலிருந்து வெளிவர முடியாதபோது தன்னை வெளிவர உதவி புரிந்த விஸ்வகர்மாவே நள விஸ்வகர்மா என உணர்ந்தார். தான் அகந்தையால் குறை கூறியதை எண்ணி வேதனைப்பட்டார். தன் தவறை உணர்ந்து நளவிஸ்வகர்மாவிடம் மன்னிப்புக் கேட்டார். இது இராமாயணம் தரும் கருத்து.

No comments: