Translate

Tuesday, 4 April 2017

காந்தகற்க்கோட்டை

டில்லி நகரை அடுத்திருந்த அவந்தி நாட்டில் காந்தக்கற்களால் கட்டப்பட்ட மதில்களைக் கொண்ட கோட்டைகளால் சூழப்பட்ட "மாந்தை" நகரத்தில் விஸ்வகர்ம பிராமணர்கள் வாழ்ந்து வந்தார்கள். விஸ்வபுராணம் பஞ்சகிருத்திய காண்டம் 4ம் செய்யுளில் "சித்திர மேடை சூழ்ந்த டில்லி நகரடுத்தவத்திரத்தின் மிக்கள ஊசிக் காந்தத்தினாலே சுற்றிலுமகல நாலைந்து யோசனை தூரமுள்ள முத்திரை மிகுந்த கோட்டை சிருட்டித்தார் முத் தினத்தில்" என்று கூறப்பட்டுள்ளது. இக்கோட்டை மதில்கள் காந்தக் கற்களாலானபடியால் மாற்றார்களின் ஆயுதங்கள் பயனற்றுப்போயின. காரணம் காந்தக் கற்கள் ஆயுதங்களைத் தன் வசம் இழுத்து அழித்து விடுவதால் காந்தக் கோட்டையை அழிப்பது இலேசுப்பட்ட காரியமாகத் தெரியவில்லை. இருந்தும் மாந்தைக்கருகிலிருந்த பத்தலகிரி என்னும் பகுதியை ஆண்ட மன்னன் காந்தக் கோட்டையைப் பிடிப்பதிலும் அழிப்பதிலும் வன்மம் கொண்டி ருந்தான். பலமுறை படை நடத்தினான். பகல் பொழுதில் படை நடத்திப் பார்த்தான். விஸ்வகர்மாக்கள் சூரியனின் கதிர்களை திருப்பி எதிரிமேல் பாய்ச்சி ஓடவிட்டுத் துரத்தினர். இரவுப் பொழுதில் சந்திரனின் கதிர்கள் எதிரிகள் மேல் பாயவிட்டு துரத்தி அடித்தனர். இவ்விதமான மோசமான தாக்கங்களால் பலமுறை பலமாகப் பாதிக்கப்பட்ட பத்தலகிரி மன்னன் தான தரும தண்டத்தால் முடியாததைச் சூழ்ச்சியால் சாதிக்க முன் வந்தான். கண்ணைக் கவரும் வண்ண ஒவியங்களான ஒற்றாட லில் கைதேர்ந்த கன்னிகள் தேர்ந்தெடுத்து மாந்தை நகருக்குள் அனுப்பி வைத்தான். பெண் என்றால் பேயும் இரங்கும் சூழலில் சில நுழைவாயில் காவலர்களாகிய விஸ்வகர்ம வாலிபர்கள் வனிதையர்களின் வாய் வீச்சிலும் விழிவீச்சிலும் விழுந்து விட்டார்கள்.காவலர் போதையில் தூங்கிக் கொண்டிருந்த போது விலை மாதர்கள் கோட்டை எரிகிறது என்று கத்தினார்கள்.விழித்தெழுந்த காவலர்கள் ''வரகு வைக்கோல் வைத்து எரித்து விட்டார்களா'' என்று இரகசியத்தை போதையில் புலம்பிவிட்டார்கள் இளைஞர்கள். இளைஞர்களின் அற்பஆசையால் அனைத்து விஸ்வகர்ம மக்களின் வாழ்க்கையையும் பாதாளத்தில் வீழ்த்தி விட்டது.காவலர்கள் பிரச்சனையாக இருக்கிறது என்று புரிந்து கொண்டு பெரியோர்களிடம் கூற ஓடினர்.விபரீதம் முற்றிவிட்ட நிலையில் காந்தக் கோட்டைக்குள்ளிருந்த அறிஞர்கள், ஆற்றல் அறிவு வாய்ந்த சான்றோர்கள், சரித்திரநாயகர்கள் விமானம் மூலமும், இயந்திரப் பொறிமூலமும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள்.கயவர்கள் கோட்டையை உடனடியாக எரிக்க ஆரம்பித்தார்கள்.கோட்டை முழுவதும் எரிவதற்குள் குழந்தைகளும் பெண்களும் வேறு சில இடங்களுக்கு தப்பி சென்றனர்.பாரத நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று அவரவர்கள் சார்ந்திருந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தொழிலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.சிறுவர்கள் தந்தையின் தொழிலை பாதி கற்றும் கற்காமலும் பல இடங்களுக்கு சென்று வாழ்க்கை நடத்தி வருகின்றனர். பல அறிஞர்கள் சென்று விட்ட நிலையில் பல தொழில் நுட்பங்கள் இல்லாமல் போய்விட்டன. சிலர் மட்டும் சுரங்கப் பாதை மூலம் வெளிவந்து அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ள மாரண பீஜாட்சர உச்சாடனம் செய்து பத்தலஹிரியையும் நகரையும் அழித்தார்கள். இவ்வாறு டில்லி அவந்திநாட்டு மாந்தை அழிந்தது. சோழநாட்டு மாந்தை தஞ்சாவூர், ஜில்லா, நன்னிலம் தலுக்காவில் மாந்தை நகர் இருந்திருக்கின்றது. இந்த மாந்தை நகரிலும் விஸ்வகர்ம மக்களே வாழ்ந்து வந்தார்கள். சோழநாட்டு மாந்தையிலிருந்தே திருகோணமலை கோணேசர் ஆலயம் கட்டுவதற்கு ஆச்சாரியர்கள் வந்ததாகக் கோணேச்சர் கல்வெட்டுக் கூறுகின்றது. "சோழவள நாட்டில் மாந்தையம்பதியார் அக்கசாலை தலைவர்மார் இவர்களைக் கொண்டு குளக்கோட்டு மகாராசாசிரிகைலாயா சிலம்பி லிருந்த ஆலயங்களும் சகல திருப்பணிகளையும் திருக்குளத்து மதகும் விதிமறையாயச் செய்த ஆசாரியார்களான உலகுரு ஆச்சாரி, சித்திரகுருவாச்சாரி, வேதகுருவாச்சாரி, அட்சணா குருவாச்சாரி, வாமதேவகுருவாச்சாரி ஆகியோர். இவர்கள் 5பேரும் மனதில் நினைத்தபடி கையால் செய்த விசித்திர குருவாச்சாரியார் எனக் கூறப்பட்டுள்ளது. மாந்தையில் வாழ்ந்தவர்கள் கைத்தொழில் வல்லவர்களான கம்மாளர்களாவர். அவர்கள் உலோகங்களிலும் கல்லும் மரத்திலும் பல ஆக்க பூர்வமான வேலைகளைச் செய்த சாதனையாளர்கள்.

No comments: