ஸ்ரீ விஸ்வகர்ம காயத்ரி மந்த்ரம். ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே விராட்புருஷாய தீமஹி| தந்நோ விஸ்வ கர்ம ப்ரசோதயாத்|| ஓம் விஸ்வாய விஸ்வகர்மஞ்ச விஸ்வமூர்த்தி பராத்பரம் | விஸ்வ மாதா பிதா சைவ விஸ்வகர்மண் நமோஸ்துதே || ஓம் விஸ்வமங்கள மாங்கல்யே விஸ்வ வித்யா விநோதி நே | விஸ்வ ஸம்ஸார பீஜானாம் விஸ்வகர்மண் நமோஸ்துதே || ஓம் நமஸ்தே விஸ்வரூபாய விஸ்வ பீஜாய தே நம: | நமோ விஸ்வாத்ம பூதாத்மன் விஸ்வகர்மண் நமோஸ்துதே ||
Translate
Wednesday, 5 April 2017
கொல்லிமலை பாவை
கொல்லிமலை என்பது தமிழ் நாட்டில் சேலம் ஜில்லாவிலுள்ள ஒருமலை இம்மலைப்பிரதேசத்தில் சித்தர்களும் ஞானிகளும் இன்றும் வாழ்கிறார்கள். பலஅரிய மூலிகைகள் நிறைந்தமலை. இதனால் பலரின் கவனத்தை தன்பால் ஈர்த்த மலையாக இன்றும் மிளிருகிறது. பதினெண் சித்தர்களின் நூல்களிலும் சங்க நூல்களிலும் இம்மலை பற்றிய பாடல்கள் பல உண்டு. பதினெண் சித்தர்களால் தயார் செய்யப்பட்ட அரியமருந்துகள், தைலங்கள், காயகற்பமருந்துகள், மூப்பு சுண்ணங்கள் எல்லாம் புதைப் பொருளாக இம்மலையில் புதைக்கப்பட்டதாக காலாங்கி நாதர் தான் எழுதிய மலைவறம் என்னும் நூலில் கூறியுள்ளார்.
கொல்லிமலை செழுமை மிகுமலை அங்கே தேன் பலா, தோடை, கொய்யா, போன்றவை நிறைந்த மலை அமைதி நிறைந்த இடம் காய கற்பம் மூலிகைகள் இயற்கையாகவே வளரும் இடம் அதனால் சிததர்களும் ஞானிகளும் இம் மலையைத் தங்கள் இருப்பிடமாக்கினார்கள். இதை தெரிந்துக் கொண்ட அசுரர்கள் இந்த மலைக்கு அடிக்கடி போய் தொல்லைகள் கொடுக்க முற்பட்டார்கள். முனிவர்களின் தவத்திற்கு இடையூறு செய்தார்கள்.
இதனால் பெரிதும் கலவரம் அடைந்த தேவர்கள் முனிவர்கள் அசுரர்களை அழிக்கவும் அடக்கவும் வழியும் வகையும் தெரியாது கவலைப்பட்டார்கள் கஸ்ட்டப்பட்டார்கள். பின் சகல கலா வல்ல வரும் தேவகுருவுமான விஸ்வகர்மாவிடம் சென்று தங்கள் குறைகளை முறையிட்டார்கள்.
சித்தர்கள் முனிவர்கள் தேவர்களின் குறைகளையும் முறையீடுகளையும் கேட்டறிந்த விஸ்வகர்மா இக்குறைகளை தீர்ப்பதற்கு கல்லால் ஒரு அழகிய பாவையைச் செய்து அதற்குப் பல சக்தியை ஊட்டி அசுரர்களின் வாடைப்பட்டதும் பாவை நகைக்கவும் கண் சிமிட்டவும் காண்பவர்களின் காமஇச்சையை வரவித்து பாவையைத் தொட்டதும் அழிந்து போகக்கூடியமாய சக்தியை ஊட்டி அசுரர்கள் வரும் வழியில் நிறுத்தினார்கள்.
இந்த மாயப்பாவையை நிசப்பெணி என நம்மிய அசுரர்கள் பலர் அதன் மாயசக்தியால் மயக்கப்பட்டு மரணமடைந்தார்கள் சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் தேவர்களும் நிம்மதியாகத் தங்கள் தவங்களை ஆற்றி எத்தனையோ எண்ணக்கரு வுலங்களை தமிழ்மக்களுக்கு உரிமையாக்கியுள்ளார்கள் சித்த வைத்தியம் கிடைத்தது பல நோய்களை அகற்றும் காயகற்ப மூலிகைகள் நெந்துாரங்கள் இலேகியங்கள் பஸ்பங்கள் தமிழர் உடமையாகின. இவை கிடைக்க தன் படைப்புச் சக்தியை பயன்படுத்தி உதவிய விஸ்வகர்மாவை தமிழ் மக்கள் நினைத்துப் பார்ப்பதே அரிதாகவுள்ளது. தமிழர் தம் நாகரீகத்தின் முது கெலும்பு அவர் வித்தைகள் பலதின் வித்தகர் அவர். இதைப்பற்றி சித்திரமடல் பின்வருமாறு கூறியுள்ளது. "திரிபுரத்தைச் சென்றவனும் செரும்பாவையும் நகைக்க கற்தெல்லாம இந்த வகை கண்டாயோ"எனப்பட்டிருப்பதால் அறியலாம்.
இந்த கொல்லிமலைப்பாவை காற்று மழை இடி மின்னல் பூகம்பம் ஆகியவற்றால் பாதிக்கப்படாதவாறு சிறந்த உகந்த தொழில் நுட்பத்துடன் செய்யப்பட்டது. என்பதை பரணர் என்ற சங்கப்புலவரின் நற்றினைப்பாடல் 201ன் மூலம் அறியலாம்.
"மலையுறைக்குறவன் காதல் மடமகன் பெறவரும் குறையன் அருங்கடி காப்பினன் சொல்லெதிர் கொல்லான் இறையன் அனையரேன் உள்ளக் கூடாதென் றோய் மற்றுஞ் செய்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி
தெய்வங் காக்கும் தீது தீர் நெடுங்கோட்டு
அவ்வென் அருவிக்குடவவரை அகத்துச் காலபொருது இடிப் பினுங் காதமூறைக் கடுகினும் உருமுடன்று எறியினும் உறுபல தோடன்றினும் பெருநில குன்றினும் திருநகம் உருவில் மாயா வியற்கைப் பாவையிற் போதல் இல்லாணென் நெஞ்சத்தானே"
இதுமட்டுமல்ல இப்பாவைபற்றிசங்க இலக்கியங்கள் பலதிலும் பலவேறு புலவர்கள் பாடியுள்ளார்கள். இம்மலையை அண்டிய பகுதியயை கடை எழுவள்ளல்களில் ஒருவனான ஓரி ஆண்டதாக வரலாறு கூறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment