Translate

Thursday, 6 April 2017

ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில்



ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில்



கற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம். கி.பி 1639 -ம் ஆண்டுக்கு முன்பே விஸ்வகர்ம பிராம்மண குலத்தினரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. சென்னை என்று இந்த நகருக்கு பெயர் வர காரணமாக இருக்கும் அன்னை குடி கொண்டிருக்கும் தலம். வீர சிவாஜியும், மஹா கவி பாரதியாரும் வழிபட்ட தலம், விஸ்வ கர்மாவிற்கு தனி சன்னதி உள்ள தலம், ஆதி சங்கரர் ஸ்ரீ சக்ரம் ஸ்தாபித்த தலம் என்ற அனைத்து பெருமைகளையும் கொண்ட தலம் தான் சென்னை காளிகாம்பாள் திருக்கோவில். கமடேஸ்வரி, கோட்டையம்மன், சென்னியம்மன், நெய்தல் நில காமாட்சி என்றும் ஆயிரம் திருநாமம் அம்பாளுக்கு இத்தலத்தில். மச்ச புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஷ்ய புராணம் முதலிய புராணங்களில் இத் திருக்கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. வாருங்கள் இத்திருகோவிலின் பெருமைகளை பார்ப்போம்.

அகில புவனங்களையும் படைத்தும், காத்தும் கரந்தும் விளையாடும் அந்த ஆதி பராசக்தியானவள் நாம் உய்யக் கொள்ளும் வேடங்கள் அநேகம் அவற்றுள் ஒன்றுதான் காளி. துஷ்டர்களை அழித்து பக்தர்களை காக்க அம்மை கொள்ளும் கோலமே காளி ரூபம். காலம் என்பதன் தெய்வீக ரூபமே காளி. இந்த பூவுலகிலே பிறந்த எந்த உயிரும் வளர்ந்து பின் இறந்து மறுபடியும் பிறக்கும் என்பது நியதி. இவ்வாறு புதிதாய் தோற்றுவிக்க சக்தி வடிவம் கொள்பவள் ஒரே அன்னையே!. கோரமும் இறைவன் செயலே என்பதை எடுத்துக் காட்டவே, சௌந்தர்யமான அன்னை சக்தி, குரூரமான காளி உருவம் கொள்கிறாள். அழிவு இல்லாமல் ஆக்கம் ஏது? இரவை அழித்து பகலையும் பகலை அழித்து இரவையும் உண்டு பண்ணுபவள் அன்னையே.

காளிகாம்பாள் உற்சவர்
தர்மமிகு சென்னை என்று போற்றப்படும் சென்னை மாநகரிலே தம்பு செட்டி தெருவிலே நாம் விரும்பும் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றும் காமாக்ஷ’யாய், தீயவர்களை அழிக்கும் காளிகாம்பாளாய், உலகையாளும் தேவியாய், தன்னை வணங்குபவர்களின் துன்பம் நீக்கி இன்பம் அளிக்கும் கமடேஸ்வரி அன்னையாய் கொலு வீற்றிருக்கிறாள் அந்த பராசக்தி. அவள் குங்குமம் பெற்றாலே முக்தி.

மிகவும் புராதkalikambal4னமான கோவில், சுமார் 400 வருடங்கள் பழமையானது. சிவாஜி மஹாராஜா வழிபட்ட பவானி ஸ்ரீ காளிகாம்பாள், யாதுமாகி நின்றாய் காளி என்று பாரதியாருக்கு நா வன்மையை கொடுத்த ஸ்ரீ சாரதை காளிகாம்பாள், தன்னை வணங்கும் அன்பர்களின் செல்வ நிலயை உயர்த்தும் ஸ்ரீ மஹா லக்ஷ்மி கல்வியை கலைகளை வழங்கும் ஸ்ரீ மஹா சரஸ்வதி இருவரையும் தன் கண்களாகக் கொண்டவள் காளிகாம்பாள்.

தனது இச்சா மந்திர சக்தியால் பன்னிரண்டு ஸ்தலங்களில் காட்சி தந்து வரும் காமாட்சி அன்னை, அவற்றுள் ஒன்றான இத்திருக்கோவிலில் மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் வலக்கால் தொங்கவிடப்பட்ட நிலையில், அங்குச பாசம் மேற்கையில் ஏந்தி, தாமரை வரத முத்திரையுடன், மூக்குத்தி மின்ன, மரகத பதக்க பொன் தாலியும், ஒட்டியாணம், கொப்பு, குழை, கங்கணம், பாதச்சிலம்பு மின்ன, காலை மூன்று அரக்கர்களின் மேல் வைத்த நிலையில் எழிற் கோலம் காட்டுகின்றாள். நாம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் நீக்கினாலே அந்த பரம் பொருளுடன் சேர முடியும் என்பதை குறிப்பாக காட்டுகின்றாள் அன்னை. காளி என்றாலும் சாந்த ரூபத்தில் காமாக்ஷ’யாக எழிற் கோலம் காட்டுகின்றாள் அன்னை. அவள் சன்னதியில் நின்றாலே ஒரு நிம்மதி அம்மையை தரிசித்தவுடன் நம் பாவமெல்லாம் விலகுகின்றன. ஆதி சங்கர பகவத் பாதாள் ஸ்தாபித்த ஸ்ரீ சக்ர அர்த்த மேருவும் அம்மையின் முன் உள்ளது. அர்ச்சனை அர்த்த மேருவிற்க்குத்தான் நடைபெறுகின்றது.

ஸ்ரீ காளிகாம்பாள் திருப்பல்லாண்டிலிருந்து ஒரு பாடல்:
                                          கலைமகளே திருமகளே மலைமகளே
காshivaji-1லை கதிரொளியே!
குலக்கொழுந்தே கொற்றவையே காளிஎனும்
கலைக்கடலே கருணை ஈவாய்
சிறந்தொளிசேர் செம்பூவும் பசுந்தழையும்
சேர்ந்தன போல் சிவமும் தாயும்
அறந்தழைக்க நேர் பாதி கலந்த கோல
அழகினுக்கு ஆயிரம் பல்லாண்டு.

இந்திரன், குபேரன், வருணன், விராட புருஷன் விஸ்வகர்மா, வியாசர், பராசரர், அகத்தியர், ஆங்கிரேசர், புலஸ்தியர் ஆகியோர் வழிபட்ட தலம். கி.பி 1639 -ம் ஆண்டுக்கு முன்பே விஸ்வ கர்மா குலத்தினரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. பரதபுரி, ஸ்வர்ணபுரி என்றெல்லாம் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இப்புராதன ஆலயம். விஸ்வ கர்மாக்கள் கோட்டையிலே வழிபட்டதால் கோட்டையம்மன். முற்காலத்தில் கடல் ஓரத்தில் இருந்திருக்கலாம் ஆங்கிலேயர் காலத்தில் இப்போது உள்ள இடத்திற்கு மாறியிருக்க வேண்டும். செம்படவர்களும் மற்றவர்களும் செந்து‘ரம் பூசி வழிபட்டதால் இவ்வன்னைக்கு சென்னியம்மன் என்ற திருநாமமும் உண்டு. சென்னம்மன் குப்பமே, சென்னை ஆயிற்று.

“ஸமாசர ரமாவாணி ஸவ்ய தக்ஷ’ண சேவிதா” என்ற லலிதா சகஸ்ரநாம நாமாவின் படி ஸ்ரீ மஹா லக்ஷ்மியும், ஸ்ரீ மஹா சரஸ்வதியும் தன் இரு கண்களாய் அமையப் பெற்ற காளிகாம்பாள் இவளாவதால் செல்வமும் கல்வியும் குவிந்துள்ள நகரமாய் சென்னை விளங்குகின்றது.

தெற்கு இராஜ்ஜயங்களை தன்வயப்படுத்தி திக்விஜயம் செய்த மராட்டிய மாமன்னன் வீர சிவாஜி 1667ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் நாள் இவ்வாலயத்திற்கு விஜயம் செய்து அன்னையை வழிபட்ட செய்தியை வரலாற்று ஏடுகளில் நாம் காணலாம்.

பிராட்வேயில் சுதேசமித்திரனில் பணி செய்து கொண்டிருந்த போதுமஹாகவி பாரதியார், யாதுமாகி நின்றாய் காளி

எங்கும் நீ நிறைந்தாய்

தீது நன்மையெல்லாம் – நின்றன்

செயல்களின்றி இல்லை

போதும் இந்த மாந்தர் வாழும்

பொய்மை வாழ்க்கையெல்லாம்

ஆதி சக்தி தாயே – என் மீது

அருள் புரிந்து காப்பாய்.

என்று அன்னையின் மேல் பாடல்கள் புனைந்துள்ளார். பாரதியார் பாடிய காளி பாடல்கள் அனைத்தும் அன்னையைப் பற்றியதே. சிவபெருமானின் அம்சமாக காலடியில் தோன்றி நமது சனாதன  bharathiதர்மமான இந்து மதத்திற்க்கு புத்துயிரூட்டிய ஆதி சங்கர பகவத் பாதாள் இவ்வாலயத்திற்கு எழுந்தருளி அன்னையை வழிபட்டு ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்திருக்கின்றார் இந்த சரித்திர சிறப்பு பெற்ற நிகழ்ச்சிகளும் இத்திருகோவிலில் சுதை சிற்பங்களாக விவரிக்கப்பட்டுள்ளன.  அன்னையின் சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது, கோஷ்டத்தில் வித்யேஷ்வரி, பிரம்ம வித்யா, வைஷ்ணவி, தாக்ஷ‘யணி, மற்றும் மஹாலக்ஷ்மி எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். அம்மனுக்கு வலப்புறத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் கமடேஸ்வரர் சன்னதி. ஐயனின் கோஷ்டத்திலும் சிறிதாக துர்க்கை, பிரம்மா, விஷ்ணு, ஆலமர் கடவுள் மற்றும் வினாயகர் அருள் பாலிக்கின்றனர். திருக்கோவிலில் உள்ளேயே கிழக்கு நோக்கி அருணாச்சலேஸ்வரர் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதியும் உள்ளது.

சிவசக்தித்தலமான இத்தலத்தில் எம்பெருமான் கமடேஸ்வரராகவும், அருணாச்சலேஸ்வரராகவும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதியும் உள்ளது.. எனவே இத்தலத்தில் வழிபட்டால் காஞ்சி, அருணை ஆகிய இரு தலங்களையும் வழிபட்ட பலன் உண்டு. மேலும் கோவிலின் உள்ளேயே குரு சனனதியும், பள்ளியறையும் உள்ளன.நெரிசல் மிகுந்த பாரி முனைப் பகுதி என்பதால் ஒரே ஒரு பிரகாரம். பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் கிழக்கு நோக்கிய சித்தி புத்தி வினாயகர் சன்னதி. சுப்பிரமணியர் வட கதிர் காம முருகராகவும், அகோர வீர பத்திரர், மஹா காளி, வேத மாதா காயத்ரி, துர்கா, விஸ்வ கர்மாஆகியே’ருக்கு தனித்தனி சந்நிதிகள், வீரபத்திரர் சன்னதியின் விமானத்தில் ஆட்டுத்தலையுடன் கூடிய ஆணவம் நீங்கிய தட்சன் வீர பத்திரரை வணங்கும் சுதை சிற்பம் அற்புதமாக உள்ளது. வடக்கு நோக்கிய துர்க்கை அம்மன் செப்புத் திருமேனி, எழிலாக அருட்காட்சி தருகின்றாள் அன்னை. வெளி பிரகாத்தில் வட கிழக்கு முலையில் ஆடல் வல்லான் சன்னிதி பிரம்மோற்சவ காலங்களில் அம்மனின் அலங்கார மண்டபமாகவும் விளங்குகின்றது. பரிவார தேவதை கடல் கண்ணி, கடல் தீர்த்தம் எனவே அன்னை நெய்தல் நில காமாட்சி என்றும் அழைக்கப்படுகின்றாள் , தல விருட்சம் மா மரம்.

ஸ்ரீசக்கர நாயகிக்கு கிண்ணித் தேர்

வேறு எந்த ஆலயங்களுக்கும் இல்லாத பல சிறப்புகள் இவ்வாலயத்திற்கு உள்ளன. ஸ்ரீ சக்ர நாயகியாம் அன்னைக்கு ஸ்ரீ சக்ரமே இங்கு தேராக அமைந்துள்ளது. இந்த சக்ரராஜ விமானம் எனப்படும் இத்தேர் கிண்ணித்தேர் என்று அழைக்கப்படுகின்றது. வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் போது ஒன்பதாம் நாள் இரவு வெண்கல கிண்ணிகளால் நிறைந்த இத்திருத் தேரிலே மின் விளக்கு ஒளியில் பவனி வருகின்றாள் அன்னை. நடராஜருடன் இத்தலத்திலே எலும்பும் தோலுமாய் , மூன்று கால்களுடன் பிருங்கி முனிவர் எழுந்தருளியுள்ளார். ஐயனை மட்டுமே வலம் வருவேன் அம்மையையும் சேர்த்து வலம் வர மாட்டேன் என்று அறியாமையால் தவறு செய்த பிருங்கி முனிவர் அன்னையின் சாபத்தினால் இவ்வாறு ஆனார். பின் அம்மை கேதார கௌரி விரதம் மேற்கொள்ளவும் இடப்பாகம் பெறவும் காரணமாய் இருந்தவர் பிருங்கி முனிவர். இன்றும் ஆருத்ரா தரிசனம் திருவுலா முடிந்து ஐயனும் அம்மையும் திரும்பி வரும் போது இந்நிகழ்ச்சியை குறிக்கும் வகையில் ஊடல் உற்சவம் நடைபெறுகின்றது.

பிரம்மோற்சவத்தின் போது அம்மனின் எழிற்கோலம்

உற்சவ மூர்த்திகள் இருவர் பெரிய நாயகி மஹா லக்ஷ்மியும், மஹா சரஸ்வதியும் தோழியராக நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகின்றாள். சிறிய நாயகி பிரகாரத்தில் 16 கால் மண்டபத்தில், அருட்காட்சி தருகின்றாள். அகோர வீரபதித்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து 6 மாதம் பௌர்ணமியண்று வழிபட்டால் இஷ்ட சித்தியாகும். விராட புருஷன் விஸ்வ கர்மாவுக்கு தனி சன்னதி உள்ளது. அவரை,

ஓம் சத்யோஜாத முkalikambal1காய பிரம்மதேவனே நம:
ஓம் வாமதேவ முகாய விஷ்ணு தேவனே நம:
ஓம் அகோர முகாய ஈஸ்வர தேவனே நம:
ஓம் ஈசான்ய முகாய இந்திர தேவனே நம:
ஓம் தத்புருஷ முகாய சூரிய தேவனே நம:
ஓம் தேவ தேவ மஹா தேவ விஸ்வப்பிரம ஜகத் குருவே நம:
என்று அகில ஜகத்திற்கும் குருவாகவே விஸ்வ கர்மா பெருமக்கள் வணங்குகின்றனர்.

நாளெல்லாம் திருனாளே நமை காக்க வருவாளே என்றபடி திருக்கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாதான். சித்திரையிலே குங்கும லட்ச்சார்சனை. சித்ரா பௌர்ணமியன்று திரு விளக்கு வழிபாடு. வைகாசியிலே வைகாசி விசாகத்தை ஒட்டி 10 நாள் பிரம்மோற்சவம். முதல் நாள் வினாயகர் உற்சவம், துவஜாரோகணம், தினமும் காலையிலும் மாலையிலும் திரு வீதி உலா, காலை 3வது நாள் பூத வாகனம், 7ம் நாள் பூத்தேர் மிகவும் விசேஷம். மாலையிலே 2ம் நாள் காமதேனு வாகனம், 4ம் நாள் ரிஷப வாகனம், 5ம் நாள் சிம்ம வாகனம், 6ம் நாள் தும்பிக்கையும், காதும் ஆடும் யானை வாகனம், 9 நாள் கிண்ணித்தேர் என்று சர்வ அலங்காரத்துடன் அருட்காட்சி தந்து மாட வீதிகளில் உலா வருகின்றாள் அன்னை.

ஆனியிலே வசந்த விழா. அன்னைக்கு உகந்த ஆடி பெருவிழா 10 ஞாயிற்றுக் கிழமைகள், வெள்ளிக்கிழமையிலே ஊஞ்சல் உற்சவம். ஆவணியிலே வினாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி 9 நாட்களும் பல்வேறு அலங்காரங்களில் கொலுவிருக்கும் அன்னை விஜய தசமியன்று வீதி உலா வருகின்றாள். ஐப்பசியில் ஸ்கந்த சஷ்டி விழா. கார்த்திகை சோம வாரம் மற்றும் கார்த்திகை தீபம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம் 10 நாட்களும் மாணிக்கவாசகர் உலா பத்தாம் நாள் காலையில் நடராஜர் சிவகாமசுந்தரி அபிஷேகம் மற்றும் தீபாரதனை பின் புறப்பாடு, கோவிலுக்கு திரும்பி வரும் போது அம்மை முதலில் உள்ளே வந்து பின் கதவை சாத்துகின்றனர் பின் திருஊடல் உற்சவம், அம்மை சமாதானம் ஆன பின் சபைக்கு எழுந்தருளுகின்றார் எம்பெருமான் . மாலையிலே காளிகாம்பாள் திருவீதி உலா. தை மாதம் பொங்கல், பூச்சொரிதல், மூன்றாம் வெள்ளி பட்டாபிஷேகம், 4வது வெள்ளி 108 திருவிளக்கு வழிபாடு, வெள்ளி ஊஞ்சல். தைப்பூசத்தன்று தெப்பம் கச்சாலீஸ்வரர் கோவிலில். மாசி மகத்தில் கடலாடல் மற்றும் சிவராத்திரி. பங்குனியில் வசந்த நவராத்திரி. அம்மை உலா வர நூதன வெள்ளி ரதம் பக்தர்களால் சமர்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அம்மனுக்கு இத்தலத்தில் பூந்தேர், கிண்ணித்தேர், வெள்ளித்தேர் என்று மூன்று தேர்கள்.

பிரம்மோற்சவத்தின் போது 7ம் நாள் பூத்தேர் கமடேஸ்வரிக்கு அம்மையின் அபிஷேக மஞ்சள் பெற்றால் தீராத வினை தீரும், பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு அக்குறை விலகும். அன்னையின் குங்குமம் பெற்றாலே முக்தி. அன்னைக்கு உகந்த வெள்ளிக் கிழமைகளிலே ஆயிரம் ஆயிரமாம் பக்தர் கூட்டம் அலை கடல் என பொங்கி வந்து அன்னையை பணிகின்றனர் அதுவும் ஆடி மற்றும் தை வெள்ளிகளில் அன்னையை தரிசிக்கும் அன்பர் பல கோடி.தாங்களும் எல்லா நலமும் வளமும் பெற சென்னையில் குடி கொண்டிருக்கும் காளிகாம்பாளை வந்து தரிசனம் செய்து தான் பாருங்களேன் கேட்ட வரம் தருவாள் கோட்டையம்மன்.

    

Wednesday, 5 April 2017

கொல்லிமலை பாவை

கொல்லிமலை என்பது தமிழ் நாட்டில் சேலம் ஜில்லாவிலுள்ள ஒருமலை இம்மலைப்பிரதேசத்தில் சித்தர்களும் ஞானிகளும் இன்றும் வாழ்கிறார்கள். பலஅரிய மூலிகைகள் நிறைந்தமலை. இதனால் பலரின் கவனத்தை தன்பால் ஈர்த்த மலையாக இன்றும் மிளிருகிறது. பதினெண் சித்தர்களின் நூல்களிலும் சங்க நூல்களிலும் இம்மலை பற்றிய பாடல்கள் பல உண்டு. பதினெண் சித்தர்களால் தயார் செய்யப்பட்ட அரியமருந்துகள், தைலங்கள், காயகற்பமருந்துகள், மூப்பு சுண்ணங்கள் எல்லாம் புதைப் பொருளாக இம்மலையில் புதைக்கப்பட்டதாக காலாங்கி நாதர் தான் எழுதிய மலைவறம் என்னும் நூலில் கூறியுள்ளார். கொல்லிமலை செழுமை மிகுமலை அங்கே தேன் பலா, தோடை, கொய்யா, போன்றவை நிறைந்த மலை அமைதி நிறைந்த இடம் காய கற்பம் மூலிகைகள் இயற்கையாகவே வளரும் இடம் அதனால் சிததர்களும் ஞானிகளும் இம் மலையைத் தங்கள் இருப்பிடமாக்கினார்கள். இதை தெரிந்துக் கொண்ட அசுரர்கள் இந்த மலைக்கு அடிக்கடி போய் தொல்லைகள் கொடுக்க முற்பட்டார்கள். முனிவர்களின் தவத்திற்கு இடையூறு செய்தார்கள். இதனால் பெரிதும் கலவரம் அடைந்த தேவர்கள் முனிவர்கள் அசுரர்களை அழிக்கவும் அடக்கவும் வழியும் வகையும் தெரியாது கவலைப்பட்டார்கள் கஸ்ட்டப்பட்டார்கள். பின் சகல கலா வல்ல வரும் தேவகுருவுமான விஸ்வகர்மாவிடம் சென்று தங்கள் குறைகளை முறையிட்டார்கள். சித்தர்கள் முனிவர்கள் தேவர்களின் குறைகளையும் முறையீடுகளையும் கேட்டறிந்த விஸ்வகர்மா இக்குறைகளை தீர்ப்பதற்கு கல்லால் ஒரு அழகிய பாவையைச் செய்து அதற்குப் பல சக்தியை ஊட்டி அசுரர்களின் வாடைப்பட்டதும் பாவை நகைக்கவும் கண் சிமிட்டவும் காண்பவர்களின் காமஇச்சையை வரவித்து பாவையைத் தொட்டதும் அழிந்து போகக்கூடியமாய சக்தியை ஊட்டி அசுரர்கள் வரும் வழியில் நிறுத்தினார்கள். இந்த மாயப்பாவையை நிசப்பெணி என நம்மிய அசுரர்கள் பலர் அதன் மாயசக்தியால் மயக்கப்பட்டு மரணமடைந்தார்கள் சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் தேவர்களும் நிம்மதியாகத் தங்கள் தவங்களை ஆற்றி எத்தனையோ எண்ணக்கரு வுலங்களை தமிழ்மக்களுக்கு உரிமையாக்கியுள்ளார்கள் சித்த வைத்தியம் கிடைத்தது பல நோய்களை அகற்றும் காயகற்ப மூலிகைகள் நெந்துாரங்கள் இலேகியங்கள் பஸ்பங்கள் தமிழர் உடமையாகின. இவை கிடைக்க தன் படைப்புச் சக்தியை பயன்படுத்தி உதவிய விஸ்வகர்மாவை தமிழ் மக்கள் நினைத்துப் பார்ப்பதே அரிதாகவுள்ளது. தமிழர் தம் நாகரீகத்தின் முது கெலும்பு அவர் வித்தைகள் பலதின் வித்தகர் அவர். இதைப்பற்றி சித்திரமடல் பின்வருமாறு கூறியுள்ளது. "திரிபுரத்தைச் சென்றவனும் செரும்பாவையும் நகைக்க கற்தெல்லாம இந்த வகை கண்டாயோ"எனப்பட்டிருப்பதால் அறியலாம். இந்த கொல்லிமலைப்பாவை காற்று மழை இடி மின்னல் பூகம்பம் ஆகியவற்றால் பாதிக்கப்படாதவாறு சிறந்த உகந்த தொழில் நுட்பத்துடன் செய்யப்பட்டது. என்பதை பரணர் என்ற சங்கப்புலவரின் நற்றினைப்பாடல் 201ன் மூலம் அறியலாம். "மலையுறைக்குறவன் காதல் மடமகன் பெறவரும் குறையன் அருங்கடி காப்பினன் சொல்லெதிர் கொல்லான் இறையன் அனையரேன் உள்ளக் கூடாதென் றோய் மற்றுஞ் செய்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி தெய்வங் காக்கும் தீது தீர் நெடுங்கோட்டு அவ்வென் அருவிக்குடவவரை அகத்துச் காலபொருது இடிப் பினுங் காதமூறைக் கடுகினும் உருமுடன்று எறியினும் உறுபல தோடன்றினும் பெருநில குன்றினும் திருநகம் உருவில் மாயா வியற்கைப் பாவையிற் போதல் இல்லாணென் நெஞ்சத்தானே" இதுமட்டுமல்ல இப்பாவைபற்றிசங்க இலக்கியங்கள் பலதிலும் பலவேறு புலவர்கள் பாடியுள்ளார்கள். இம்மலையை அண்டிய பகுதியயை கடை எழுவள்ளல்களில் ஒருவனான ஓரி ஆண்டதாக வரலாறு கூறுகிறது.

மாமல்லபுர சிற்பங்கள்

வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரம்

Tuesday, 4 April 2017

காந்தகற்க்கோட்டை

டில்லி நகரை அடுத்திருந்த அவந்தி நாட்டில் காந்தக்கற்களால் கட்டப்பட்ட மதில்களைக் கொண்ட கோட்டைகளால் சூழப்பட்ட "மாந்தை" நகரத்தில் விஸ்வகர்ம பிராமணர்கள் வாழ்ந்து வந்தார்கள். விஸ்வபுராணம் பஞ்சகிருத்திய காண்டம் 4ம் செய்யுளில் "சித்திர மேடை சூழ்ந்த டில்லி நகரடுத்தவத்திரத்தின் மிக்கள ஊசிக் காந்தத்தினாலே சுற்றிலுமகல நாலைந்து யோசனை தூரமுள்ள முத்திரை மிகுந்த கோட்டை சிருட்டித்தார் முத் தினத்தில்" என்று கூறப்பட்டுள்ளது. இக்கோட்டை மதில்கள் காந்தக் கற்களாலானபடியால் மாற்றார்களின் ஆயுதங்கள் பயனற்றுப்போயின. காரணம் காந்தக் கற்கள் ஆயுதங்களைத் தன் வசம் இழுத்து அழித்து விடுவதால் காந்தக் கோட்டையை அழிப்பது இலேசுப்பட்ட காரியமாகத் தெரியவில்லை. இருந்தும் மாந்தைக்கருகிலிருந்த பத்தலகிரி என்னும் பகுதியை ஆண்ட மன்னன் காந்தக் கோட்டையைப் பிடிப்பதிலும் அழிப்பதிலும் வன்மம் கொண்டி ருந்தான். பலமுறை படை நடத்தினான். பகல் பொழுதில் படை நடத்திப் பார்த்தான். விஸ்வகர்மாக்கள் சூரியனின் கதிர்களை திருப்பி எதிரிமேல் பாய்ச்சி ஓடவிட்டுத் துரத்தினர். இரவுப் பொழுதில் சந்திரனின் கதிர்கள் எதிரிகள் மேல் பாயவிட்டு துரத்தி அடித்தனர். இவ்விதமான மோசமான தாக்கங்களால் பலமுறை பலமாகப் பாதிக்கப்பட்ட பத்தலகிரி மன்னன் தான தரும தண்டத்தால் முடியாததைச் சூழ்ச்சியால் சாதிக்க முன் வந்தான். கண்ணைக் கவரும் வண்ண ஒவியங்களான ஒற்றாட லில் கைதேர்ந்த கன்னிகள் தேர்ந்தெடுத்து மாந்தை நகருக்குள் அனுப்பி வைத்தான். பெண் என்றால் பேயும் இரங்கும் சூழலில் சில நுழைவாயில் காவலர்களாகிய விஸ்வகர்ம வாலிபர்கள் வனிதையர்களின் வாய் வீச்சிலும் விழிவீச்சிலும் விழுந்து விட்டார்கள்.காவலர் போதையில் தூங்கிக் கொண்டிருந்த போது விலை மாதர்கள் கோட்டை எரிகிறது என்று கத்தினார்கள்.விழித்தெழுந்த காவலர்கள் ''வரகு வைக்கோல் வைத்து எரித்து விட்டார்களா'' என்று இரகசியத்தை போதையில் புலம்பிவிட்டார்கள் இளைஞர்கள். இளைஞர்களின் அற்பஆசையால் அனைத்து விஸ்வகர்ம மக்களின் வாழ்க்கையையும் பாதாளத்தில் வீழ்த்தி விட்டது.காவலர்கள் பிரச்சனையாக இருக்கிறது என்று புரிந்து கொண்டு பெரியோர்களிடம் கூற ஓடினர்.விபரீதம் முற்றிவிட்ட நிலையில் காந்தக் கோட்டைக்குள்ளிருந்த அறிஞர்கள், ஆற்றல் அறிவு வாய்ந்த சான்றோர்கள், சரித்திரநாயகர்கள் விமானம் மூலமும், இயந்திரப் பொறிமூலமும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள்.கயவர்கள் கோட்டையை உடனடியாக எரிக்க ஆரம்பித்தார்கள்.கோட்டை முழுவதும் எரிவதற்குள் குழந்தைகளும் பெண்களும் வேறு சில இடங்களுக்கு தப்பி சென்றனர்.பாரத நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று அவரவர்கள் சார்ந்திருந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தொழிலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.சிறுவர்கள் தந்தையின் தொழிலை பாதி கற்றும் கற்காமலும் பல இடங்களுக்கு சென்று வாழ்க்கை நடத்தி வருகின்றனர். பல அறிஞர்கள் சென்று விட்ட நிலையில் பல தொழில் நுட்பங்கள் இல்லாமல் போய்விட்டன. சிலர் மட்டும் சுரங்கப் பாதை மூலம் வெளிவந்து அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ள மாரண பீஜாட்சர உச்சாடனம் செய்து பத்தலஹிரியையும் நகரையும் அழித்தார்கள். இவ்வாறு டில்லி அவந்திநாட்டு மாந்தை அழிந்தது. சோழநாட்டு மாந்தை தஞ்சாவூர், ஜில்லா, நன்னிலம் தலுக்காவில் மாந்தை நகர் இருந்திருக்கின்றது. இந்த மாந்தை நகரிலும் விஸ்வகர்ம மக்களே வாழ்ந்து வந்தார்கள். சோழநாட்டு மாந்தையிலிருந்தே திருகோணமலை கோணேசர் ஆலயம் கட்டுவதற்கு ஆச்சாரியர்கள் வந்ததாகக் கோணேச்சர் கல்வெட்டுக் கூறுகின்றது. "சோழவள நாட்டில் மாந்தையம்பதியார் அக்கசாலை தலைவர்மார் இவர்களைக் கொண்டு குளக்கோட்டு மகாராசாசிரிகைலாயா சிலம்பி லிருந்த ஆலயங்களும் சகல திருப்பணிகளையும் திருக்குளத்து மதகும் விதிமறையாயச் செய்த ஆசாரியார்களான உலகுரு ஆச்சாரி, சித்திரகுருவாச்சாரி, வேதகுருவாச்சாரி, அட்சணா குருவாச்சாரி, வாமதேவகுருவாச்சாரி ஆகியோர். இவர்கள் 5பேரும் மனதில் நினைத்தபடி கையால் செய்த விசித்திர குருவாச்சாரியார் எனக் கூறப்பட்டுள்ளது. மாந்தையில் வாழ்ந்தவர்கள் கைத்தொழில் வல்லவர்களான கம்மாளர்களாவர். அவர்கள் உலோகங்களிலும் கல்லும் மரத்திலும் பல ஆக்க பூர்வமான வேலைகளைச் செய்த சாதனையாளர்கள்.

Monday, 3 April 2017

நளன் விஸ்வகர்மா

நளன் விஸ்வகர்மா இராமர் தன் மனைவி சீதையை மீட்டு வர இலங்கைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு கடலைக் கடக்க வேண்டும் இலங்கைக்கும் இந்தியாவிக்குமிடையில் அணை கட்ட ஏற்பாடு செய்தார். அணையைக் கட்ட ஒரு விஸ்வகர்மாவின் உதவி தேவைப்பட்டது. அவர்கட்கு நள விஸ்வகர்மா உதவிக்கு முன் வந்தார். அநுமான் மலைகளைப் பிடுங்கி வந்து கொடுக்க அதை நளன் இடது கையால் வாங்கிக் கொண்டே இருந்தார். தான் இத்தனை பாடுபட்டுக் கஷ்டப்பட்டு மலைகளைப் பிடுங்கிவரத் தன் இடது கையால் வாங்கித் தன்னை அவமதிப்பதாக அநுமான் உணர்ந்தார். இம்முறைப்பாட்டை இராமரிடம் கூறினார். இராமனுக்கோ அணையை சீக்கிரமே முடிக்கவேண்டும். அநுமான் கோபித்துவிட்டால் அணை வேலை தாமதமாகிவிடும் நளவிஸ்வகர்மாவையும் எதுவும் முடியாது என இருவரையும் சமாதானம் செய்து அணையை முடிக்க ஏற்பாடுசெய்தார். அன்று மாலை நளனும் அநுமானும் ஆற்றுக்கு நீராடச் சென்றார்கள். நீராடப் போகும் முன் தன் கமண்டலத்தைக் கழற்றி ஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் வைத்தவிட்டு நீராடினார் நளன். நீராடி முடிந்தும் கமண்டலத்தை மறந்து விட்டதுபோல அங்கேயே விட்டுவந்தார். இருப்பிடம் வந்ததும் கமண்டலத்தை மரத்தடியில் வைத்துவிட்டு மறந்து வந்ததாகவும் அதைப்போய் எடுத்துவரும்படி அநுமானிடம் கூறினார். அநுமான் ஆற்றங்கரைக்குச் சென்றுகமண்டலத்தைக் கண்டு எடுக்க முயற்சி எடுத்தார். எவ்வளவுதான் முயன்றும் கமண்டலத்தை எடுக்க முடியவில்லை. மலைகளையும், மரங்களையும் வேரோடு பிடுங்கி வந்த அநுமானுக்கு நளனின் கமண்டலத்தை எடுக்க முடியவில்லை. தன்பலம் அறியாது அம்பலம் ஏறிய தன்னிலையை எண்ணி வேதனைப்பட்டார். பூர்வஞான பலத்தால் தான் தன் தாயின் கருவறையிலிருந்து வெளிவர முடியாதபோது தன்னை வெளிவர உதவி புரிந்த விஸ்வகர்மாவே நள விஸ்வகர்மா என உணர்ந்தார். தான் அகந்தையால் குறை கூறியதை எண்ணி வேதனைப்பட்டார். தன் தவறை உணர்ந்து நளவிஸ்வகர்மாவிடம் மன்னிப்புக் கேட்டார். இது இராமாயணம் தரும் கருத்து.

Saturday, 1 April 2017

காளி வழிபாடு


கம்மாளர்கள் தங்கள் குலதெய்வமாகக் காளியை வழிபட பல காரணங்கள் உண்டு. விஸ்வகர்மாவின் ஐந்து முகத்திலிருந்து தோன்றிய ஐந்து புதல்வர்களின் மனைவிமாரும் சக்திகளே ஆகும். "தாயிற்சிறந்த கோயிலில்லை" என்பதற்கொப்ப அவர்கள் சக்தியை வழிபட்டார்கள். சூரிய சர்ப்ப வழிபாட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட வழிபாடு தாய் வழிபாடாகும். கலைகளோடு தொடர்புடைய கலைஞர் சமுதாயம் கம்மாளர்கள், கலைத்தெய்வத்தை குலதெய்வமாக்கிக் கொண்டார்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் பரமசிவனுக்கும் பார்வதிக்கும் இடையில் ஒரு போட்டி நடைபெற்றது. அதாவது அழகில் சிறந்தவர் யார் என்பதே அப்போட்டியின் தொனிப்பொருள். பரமசிவனுக்கும் பார்வதிக்கும் இடையில் ஏற்பட்ட போட்டிக்கு நடுநின்று தீர்ப்பு வழங்கத் தேவர்கள் முன்வரவில்லை. பிரமனும், விஷ்ணுவும், போட்டிக்குத் தீர்ப்பு அளிப்பதிலிருந்து நழுவிக் கொண்டார்கள். எனவே தீர்ப்பளிக்க வேண்டிய பொறுப்பை தேவகுருவான விஸ்கர்மாவிடம் ஒப்படைத்தார்கள். விஸ்வகர்மா நிலைமையின் கடுமையைப் புரிந்துகொண்டு ஒரு நிலைக்கண்ணாடியை உருவாக்கிக் கொடுத்து இதில் உங்களை நீங்களே பார்த்து முடிவைத் தெரிந்து தெளிந்துகொள்ளுங்கள் எனக் கூறிவிட்டார். பரசிவன் பார்த்தார். கண்ணாடியில் தன் உருவம் காட்டிய கோலம் கண்டு தலைகுனிந்தார். பார்வதி கண்ணாடியைப் பார்த்தார். பரவசத்தால் குதித்தார், குதுகலித்தார். போட்டி என்றால் பொறாமை எழாதிருக்காது. அது பரமசிவனையும் பாராது பார்த்திபனையும் பாராது. வெட்கித் தலை குனிந்த
வேதனை ஒரு பக்கம், எதிரியின் கேலிக்கையால் ஏற்பட்ட தாக்கம் ஒரு பக்கம் வாட்டி வதைக்கத் தன்னை மறந்தார் பரமன். கோபக்காரனுக்குப் பாவம் புரிவதில்லை, பழிபாவத்திற்கு அஞ்சமாட்டார்கள் என்பதைப் பரமனே காட்டினார், சினந்தார், சீறிப்பாய்ந்தார். தன்னைப் படைத்த விஸ்வகர்மனுக்கே பிடி சாபம் என்றார்."உன் குலம் என்றும் ஒற்றுமை இன்றி வாழும்" என்றார். சாபத்தைப் பெற்ற சாது சும்மா இருப்பாரா? விஸ்வப்பிரம்மம் அல்லவா? "உடனே பிடி சாபம்" என்றார். இன்று முதல் என்றும்
நீ அரூபியாகவே இருப்பாய் என்றார்.
இவ்வாறு இருவருக்கும் இடையில் நடைபெற்ற சாபப் போட்டியைப் பார்த்த பார்வதி, தன்னால் ஏற்பட்ட சாபத்தை தீர்ப்பதற்காக விஸ்வகர்ம குலமக்களைக் காக்கும் காவல் தெய்வமாகத்தன்னை அர்ப்பணித்தார். அன்று முதல் விஸ்வகர்ம குலமக்கள் தங்கள் குலதெய்வமாகக் காளியை வழிபடத் தொடங்கினார்கள்.

Thursday, 30 March 2017

விஸ்வகர்ம ஸூக்தம்

   ஸ்ரீ விஸ்வகர்ம ஸூக்தம்

ய இமா விஸ்வா புவநாநி ஜுஹ்வத்                                                  ருஷி ர்ஹோதா நிஷஸாதா பிதாந:|                                                                 ஸ ஆஸிஷா த்ரவிண மிச்ச மாந                                                  பரமச்சதோ வர ஆவிவேச ||
விஸ்வகர்மா மனஸா யத்விஹாயா                                                                                             தாதா விதாதா பரமோத ஸந்த்ருக் ||                                                 தேஷா மிஷ்டாநி ஸமிஷா மதந்தி                                                                                  யத்ர ஸப்தரிஷீந் பர ஏக மாஹு: ||
யோ ந: பிதா ஜநிதா யோ விதாதா                                              யோநஸ் ஸதா அப்யாஸ ஜ்ஜஜாந |                                                     யோ தேவாநாம் நாமதா ஏக ஏவதகும்                                                        ஸம்ப்ரச்நம் புவநா யந்த்யந்யா ||
த ஆயஜந்த த்ரவிணகும் ஸமஸ்மா                                                    ருஷய: பூர்வே ஜரிதாரோ ந பூநா ||                                                            அ ஸுர்தா ஸ்ஹுர்தா ரஜஸோ விமாநே                                               யே பூதாநி ஸமக்ருண் வந்நிமாநி ||
ந தம் விதாத ய இதம் ஜஜாநாந்ய                                                                                  த்யுஷ்மாக மந்த்ரம் பவாதி |                                                      நீஹாரேண ப்ராவ்ருதா ஜல்ப்யாசாஸு                                             த்ருப உக்தஸாஸ ச்சரந்தி ||  
பரோ திவா பர ஏநா ப்ருதிவ்யா                                                           பரோ தேவேபி ரஸுரை ர்குஹாயத் |                                                       கக் கஸ் வித்கர்பம் ப்ரதமம் தத்ர ஆபோ                                            யத்ர தேவா ஸ்ஸமகச்சந்த விஸ்வே ||
விஸ்வகர்மாஹ்ய ஜநிஷ்ட தேவ                                                       ஆதித் கந்தர்வோ அபவ த்விதீய: |                                                  த்ருதீய: பிதா சுநிதௌ ஷதீநாம்                                                     அபாம் கர்பம் வ்யததாத் புருத்ரா ||
விஸ்வதசக்ஷு ருத விஸ்வதோ முகோ                                    விஸ்வதோ ஹஸ்த உத விஸ்வ தஸ்பாத் |                                            ஸம் பாஹுப்யாம் நமதி ஸம்பதத்ரைர்                         த்யாவாப்ருதிவீ ஜநயம் தேவ ஏக: ||
கிக்கும் ஸ்விதாஸீ ததீஷ்டாந மாரம்பநம்                                        கதமத் ஸ்வித்கி மாஸீத் யதி பூமிம் ஜநயந் |                         விஸ்வகர்மா வித்யா மௌர்ணோ                                             ந்மஹிநா விஸ்வ சக்ஷா: ||
யா தே தாமாநி பரமாணி யாவமா                                                          யா மத்யமா விஸ்வகர்மந்து தேமா |                                                சிக்ஷா ஸகிப்யோ ஹவிஷிஸ்வதாவ                                             ஸ்வயம் யஜஸ்வ தநுவம் ஜுஷாண: ||
கிக்ம்ஸ்வித் வநம் க உ ஸ வ்ருக்ஷ ஆஸீ                                       த்யதோ த்யாவாப்ருதிவீ நிஷ்டதக்ஷு : |                               மநீஷிணோ மநஸா ப்ருச்சதே துதத்ய                                 தத்யதிஷ்டத் புவநாநி தாரயந் ||
விஸ்வகர்மண் ஹவிஷா வாவ்ருதாந                                          ஸ்வயம் யஜஸ்வ தநுவம் ஜுஷாண: |                                         முஹ்யம் த்வந்யே அபிதஸ்ஸபத்நா                                 இஹாஸ்மாகம் மகவா ஸூரி ரஸ்து ||
வாசஸ்பதிம் விஸ்வகர்மாண மூதயே                                   மநோயுஜம் வாஜே அத்யாஹுவேம |                                              ஸநோ நேதிஷ்டா ஹவநாநி ஜோஷதே                                       விஸ்வசம்பூ ரவஸே ஸாதுகர்மா ||
விஸ்வகர்மண் ஹவிஷா வர்தநேந                                                த்ராதாரா மிந்தர மக்ருணோ ரவத்யம் |                                                தஸ்மை விசஸ்ஸமந மந்த பூர்வீ                                                                                  ரய முக்ரோ விஹவ்யோ யதா ஸத் ||
ஸமுத்ராய வயுநாய ஸிந்தூநாம் பதயே நம:                              நநீநாகும் ஸர்வாஸாம் பித்ரே ஜுஹுதா                      விஸ்வகர்மணே விஸ்வாஹாமர்த்யம் ஹவி: ||

விஸ்வகர்ம சங்க கால புலவர்கள்

சங்ககாலப் விஸ்வகர்ம புலவர்கள் சங்க காலத்தில் தமிழ் வளர்த்த பெருமை விஸ்வகர்மா சமூகத்திற்கு உண்டு. விஸ்வகர்மா சமூகத்தைச் சார்ந்த சங்க கால புலவர்கள் சிலர் இதோ: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் குட்டுவன் கீரனார் மதுரை கணக்காயனார் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர் குடவாயிற் கீர்த்தனார் வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் தங்கால கொற்கொல்லனார் வடமவண்ணக்கன் தமோதனார் பொருத்தில் இளங்கீரனார் மதுரை நக்கீரர் மோசி கீரனார் மதுரை வேளாசன் (புறநானூறு) அத்தில் இளங்கீரனார் இடையன் நெடுங்கீரனார் உமட்டூர் கிழார் மகனார் இளங்கீரன் எயினந்தை மகனார் இளங்கீரன் கழாக்கீரன் எயிற்றியர்(பெண் புலவர்) செல்லூர்கிழார் மகனார் பெரும் பூதக்கொற்றனார் செயலூர் இறும்பொன் சாத்தன் கொற்றனார் மதுரை பொன்செய் கொல்லன் வெண்ணகனார் இடையன் சேதங் கொற்றனார் இம்மென் கீரனார் உவர்க் கண்ணூர்ப் பல்லங் கீரனார் குடவாயிற் கீர்த்தனார் பறநாட்டு பெரும் கொற்றனார் நக்கீரர் (அகநானூறு) இளங்கீரந்தையர் இருந்தையூர் கொற்றன் புலவன் உறையூர் முதுகூத்தனார் இளங்கீரன் உறையூர் முது கொற்றன் முதுகூத்தனார் கொல்லன் அழிசி குறுங்கீரன் கோழிக் கொற்றன் கொற்றன் கச்சிப்பட்டி பெருந்தச்சன் சேத்தன் கிரன் முடக்கொல்லனார் வினைதொழிற்சேர் கீரனார் மூலங்கீரனார் மதுரை கொல்லன் வெண்ணகனார் நற்றம் கொற்றனார் பாலங்கொற்றனார் தும்பி சேர் கீரனார் குடவாயிற்கீரத்தனன் பெருங்கொற்றனார் கீரங்கண்ணனார் காசிப்பண் கீரனார் கணக்காயனார் கண்ணன் கொற்றனார் கண்ணகாரன் கொற்றனார் கந்தரெத்தனார் பெருந்தச்சனார் எயினந்தையார் இளங்கீரன் அல்லங்கீரனார் குமரனார் மோசிகொற்றன் வெண்கொற்றன் பெருங்கொல்லன் கோடங்கொல்லன் கிரந்தை (குறுந்தொகை)

Wednesday, 29 March 2017

விஸ்வகர்ம வழிபாடு



விஸ்வகர்மா வழிபாடு!
நாம் நவராத்திரி கடைசி நாளில் சரஸ்வதி - ஆயுத பூஜை கொண்டாடுவதுபோல், வட இந்திய மாநிலங்களான, திரிபுரா, அஸ்ஸாம், பீகார், ஜார்கண்ட், மே.வங்கம், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் விநாயக சதுர்த்தி முடிந்த சில நாட்களுக்குப் பிறகு வெகு கோலாகலமாக வணங்கப்படும் ஆயுத பூஜை விழாவுக்கு ‘விஸ்வகர்மா பூஜை’ என்று பெயர். புராண கால தேவலோகச் சிற்பி, சிறந்த கட்டடக்கலை நிபுணர், பொறியியல் வல்லுநர், தொழில் படைப்பாற்றலுக்கானத் தெய்வம் என அழைக்கப்படுபவர் விஸ்வகர்மா. மனிதன் பொறியியல் கல்வி விஞ்ஞானத்தைப் பற்றி அறிந்து கொள்ள மூலகாரணமாக இருப்பவர் இவர்தான். தொழிலாளர்களுக்கும், கைவினைக் கலைஞர்களுக்கும் ஞானம் அளிப்பவர். அழகுப் பெட்டகமென, உள்ளம் கவரும் கலை ரசனைமிக்க, குறைபாடில்லாத சிற்பங்களை உள்ளடக்கிய கட்டடங்களை உருவாக்குவதில் வல்லமை மிக்கவர். பூமி, உலகம், தேவலோகம் ஆகிய அனைத்துக்கும் பிரம்ம தேவனின் ஆணைக்கிணங்க அழகான வடிவம் தந்தவர். சத்ய யுகத்தில் சொர்க்கத்தையும், திரேதாயுகத்தில் தங்கத்தில் ஜொலித்த இலங்கையையும், துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணனின் துவாரகையையும் நிர்மாணித்தவர். இவைதவிர, இந்திரன், யமன் அரண்மனை, கடலுக்குக் கீழ் வருணனுக்கு மாளிகை மற்றும் அஸ்தினாபுரம், இந்திரப்ரஸ்தம் நகர்களையும் உருவாக்கியவர். இவைமட்டுமின்றி, தேவர்கள், தேவியர் அணிந்திருந்த பல்வேறு ஆபரணங்களைத் தயாரித்தவரும் இவரே! தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தன் உடல் எலும்புகளால் பலவிதமான ஆயுதங்களை விஸ்வகர்மாவைச் செய்யச் சொன்னார் ததீசி ரிஷி (தயிரை மட்டுமே உணவாகக் கொண்டு வாழ்ந்ததால் ‘ததீசி’ எனப் பெயர் உண்டாயிற்று). அவரின் முதுகுத் தண்டுவடத்தைக் கொண்டு உருவானதே இந்திரனின் ‘வஜ்ராயுதம்.’ சூரியனின் மனைவியான இவரது மகள் சஞ்சனா, கணவரின் உஷ்ணம் நிறைந்த கதிர்களின் தீவிரத்தைச் சற்றுக் குறைக்கும்படி தந்தையிடம் வேண்ட, இவரும் சூரியனிடமிருந்து எட்டில் ஒரு பங்கு பிரகாசத் தீவிரத்தைக் குறைத்தார். கீழே விழுந்த அந்தத் துகள்களிலிருந்து விஷ்ணுவுக்கு ‘சுதர்சனம்’ என்ற சக்ராயுதத்தையும், சிவனுக்குத் ‘திரிசூல’த்தையும், தேவர்களின் உபயோகத்துக்காகப் ‘புஷ்பக விமான’த்தையும் (மார்க்கண்டேயப் புராணத்தில் முருகனுக்குரிய ‘வேலாயுதம்’ எனக் குறிக்கப்படுகிறது) உருவாக்கினார். மேலும், தான் இயற்றிய ‘ஸ்தாபத்ய வேதம்’என்ற நூலில் 64-வகை இயந்திரவியல் நுணுக்கங்கள், சிற்பக்கலை அறிவாற்றல் பற்றிய விளக்கங்களையும் விவரித்திருக்கிறார். பொதுவாக, இவர் கனத்த உடல்வாகு கொண்டவராக, வயது முதிர்ந்த, மதிநுட்பம் நிறைந்தவராகச் சித்தரிக்கப்படுகிறார். ஐந்து முகங்கள் உடையவராக ‘ரிக் வேத’த்தில் கூறப்பட்டாலும், ஒரு முகம், நான்கு கரங்கள் கொண்டவராக உருவகப்படுத்தப்படுகிறார். உடலில் தங்க நகைகள் அணிந்து, ஒரு கையில் நீர் கலசம், ‘இரண்டாவதில் புத்தகம், மற்றொன்றில் சுருக்குக் கயிறு, பிறிதொன்றில் சிற்றுளியுடன் காட்சி தருகிறார். சுறுசுறுப்பான படைப்புத் திறனுக்கு அதிபதியாதலால் அதற்குரிய சிவப்பு வண்ணப் பின்புலத்திலேயே, யானை வாகனத்தில் (அன்னமும் உண்டு) அமர்ந்தவராகக் காணப்படுகிறார். எட்டு வஸுக்களில் கடைசி இளவல் பிரபாஸ வஸு (‘விடியலின் பிரகாசம்’ எனும் இவர், வசிஷ்ட முனிவரின் சாபத்தினால் மறுபிறவியில் கங்கை - மகாராஜா சந்தனுவின் எட்டாவது மகன் தேவவிரதன் என்ற பீஷ்மராகப் பிறந்தவர்) - யோகசித்தா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். (இவருக்கு பிரஹஸ்தி என்ற ஒரு சகோதரியும் உண்டு) இவர் மனைவியின் பெயர் காயத்ரி. இவர்களது ஐந்து மகன்களும் புகழ்மிக்க முனிவர்களாகவும், தந்தையைப் போன்று தங்கள் தங்கள் துறைகளில் தலைசிறந்த விற்பன்னர்களாகவும் விளங்கினர். அவர்கள் மனு (கருமான் என்கிற கொல்லன்), மயன் (தச்சர்), த்வஸ்தா (உலோக வேலைப்பாடு மற்றும் வார்ப்படத் துறை), சில்பி (கைவினைக் கலைஞர், கொத்தனார்) மற்றும் விஸ்வஞர் (தங்கம், வெள்ளி, இரத்தினம், வைர நகைகள் தயாரிக்கும் பொற்கொல்லன்) ஆவர். இப்படிப்பட்டப் புகழ் வாய்ந்தவருக்கு அவர் வழி வந்தவர்கள், அவர் பிறந்த தினமாகக் கருதப்படும் நாளில் விழா கொண்டாடுகிறார்கள். விஸ்வகர்மா ஜயந்தி நாளாகச் சொல்லப்படுவது ஒன்றல்ல; இரண்டு நாட்கள். ஒன்று, ரிஷி பஞ்சமி தினம். மனிதர்கள் போல் பிறந்த நாள் என்பது விஸ்வகர்மாவுக்குக் கிடையாது என்பது ஒரு சாராரின் கருத்து. கல்வி, கேள்விகளில் சிறந்த தங்கள் தகப்பனாரை நினைவு கூறும் வகையில் அவரது ஐந்து மகன்களும் சேர்ந்து அவர் காண்பித்த வழியை உறுதியுடன் பின்பற்றிச் செல்வதாக உறுதியேற்ற இந்நாளையே வெகுசிலர் பின்பற்றுகிறார்கள். மற்றொன்று, கன்னி சங்கராந்தி தினம் - இதுவே அனைவராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, வட இந்தியப் பஞ்சாங் கப்படி பாத்ரபத் (புரட்டாசி) மாதம் முடியும் கடைசி நாளன்று, சூரியன் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடம் பெயரும் போது விஸ்வகர்மா பூஜை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. எப்போதும் செப்டம்பர் 17 - ஆம் தேதியே இந்நாளாக விளங்குகிறது. அன்றைய தினம், கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் காரியாலயங்களில் தாங்கள் கையாளும் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்களைச் சுத்தப்படுத்தி, புது வண்ணம் பூசி ஜோடிப்பார்கள். செய்யும் தொழில் வளமுடன் பெருகவும், விபத்துகளின்றி நாட்கள் நகரவும் தேவலோகச் சிற்பியின் அருள் வேண்டி கோலாகலமாக விழா நடத்தப்படும். புதிய பொருட்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தவும், உற்பத்தித் திறனைப் பெருக்கவும், தொழிலாளர்கள் விஸ்வகர்மா சிலை அல்லது படத்தின் முன் உறுதிமொழி எடுப்பார்கள். அன்றைய தினம் விடுமுறை விட்டு மறுநாள் வேலையைத் தொடர்வார்கள். கலைத்திறனுக்கும், அதன் மேம்பாட்டுக்கும் உதாரணமாய் விளங்கும் விஸ்வகர்மாவின் நினைவுக்கு ஒரு சான்றாக எல்லோராவின் பத்தாம் குகை அமைந்துள்ளது.

Friday, 24 March 2017

விஸ்வபிரம்ம ஸ்தோத்ரம்

 ஸ்ரீ விஸ்வகர்ம காயத்ரி மந்த்ரம்


ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே விராட்புருஷாய தீமஹி| 

தந்நோ விஸ்வ கர்ம ப்ரசோதயாத்||

ஓம் விஸ்வாய விஸ்வகர்மஞ்ச விஸ்வமூர்த்தி பராத்பரம் |

விஸ்வ மாதா பிதா சைவ விஸ்வகர்மண் நமோஸ்துதே ||

ஓம் விஸ்வமங்கள மாங்கல்யே விஸ்வ வித்யா விநோதி நே |

விஸ்வ ஸம்ஸார பீஜானாம் விஸ்வகர்மண் நமோஸ்துதே  ||

ஓம் நமஸ்தே விஸ்வரூபாய விஸ்வ பீஜா௬ய தே நம: |

நமோ விஸ்வாத்ம பூதாத்மன் விஸ்வகர்மண் நமோஸ்துதே ||



                 ஸ்ரீ விஸ்வகர்ம அஷ்டகம்

ஆதிரூப நமஸ்துப்யம் நமஸ்துப்யம் பிதாமஹ: விராடாக்ய நமஸ்துப்யம் விஸ்வகர்மண் நமோ நம:

ஆக்ருதி: கல்பநா நாத த்ரிநேத்ர ஞான நாயகா: ஸர்வஸித்தி ப்ரதா தாத்வம் விஸ்வகர்மண் நமோ நம:

புஸ்தகம் ஞான சூத்ரஞ்ச காமிச சூத்ரம் கமண்டலம் த்ருத்வா ஸம்போஹயன் தேவா விஸ்வகர்மண் நமோ நம:

விஸ்வாத்மா(அ)துப்த ரூபேனா நாநாகஷ்ட விதார க தாரகோ அநாதி சம்சாராத் விஸ்வகர்மண் நமோ நம:

ப்ரம்மாண்டாகல தேவானாம் ஸ்தாநம் ஸ்வரூப தலம் தலம் லீலயா ரஜிதம் ஏந விஸ்வரூபாயதே நம:

விஸ்வ வ்யாபின் நமஸ்துப்யம் த்ரியம்பகோ ஹம்ஸ வாஹந: ஸர்வ க்ஷேத்ர நிவாஸாக்யா விஸ்வகர்மண் நமோ நம:

நிராபாசாய நித்யாய ஸத்யக்ஞானாந்தராத்மனே விசுக்தாய விதூராய விஸ்வகர்மண் நமோ நம:

நமோ வேதாந்த வேத்யாய வேதமூல நிவாஸிநே          நமோ விவிக்த சேஷ்டாய விஸ்வகர்மண் நமோ நம:

பலஸ்ருதி

            யோ நர: படேந் நித்யம் விஸ்கர்மாஷ்டகம் த்விதம்

            தநம் தர்மஞ்ச புத்ரஞ்ச லபே தந்தே பராங்கதி:

இதி ஸ்ரீ விஸ்வகர்ம அஷ்டகம் ஸம்பூர்ணம்.


              ஸ்ரீ விஸ்வகர்ம த்யானம்

ஏக சிம்மாஸனா ஸீனம் ஏக மூர்த்தி ஸ்ருணத்வஜம்

பஞ்ச வக்த்ரம் ஜடாமகுடம் பஞ்சாதஸ விலோசனம்

ஸத்யோ ஜாதானனம் ஸ்வேதம் வாம தேவந்து க்ருஷ்ணகம்

அகோரம் ரக்தவர்ணஞ்ச தத் புருஷம் பீதவர்ணகம்

ஈஸான்யம் ஸ்யாமவர்ணஞ்ச ஸரீரம் ஹேம வர்ணகம்

தஸபாஹு ஸமாயுக்தம் கர்ணகுண்டலம் ஸோபிதம்

பீதாம்பர தரம் தேவம் நாக யக்ஞோபவீதனம்

ருத்ராக்ஷ மாலாபரணம் வ்யாக்ர சர்மோத்தரீயம்

அக்ஷமாலாஞ்ச பத்மஞ்ச நாகஸூல பிநாகிநம்

மேரும் வீணாஞ்ச பாணஞ்ச சங்க சக்ர ப்ரகீர்த்திதம்

கோடி ஸூர்யப் ப்ரதிகாஸம் ஸர்வ ஜீவ தயாபரம்

தேவ தேவ மஹாதேவம் விஸ்வகர்ம ஜகத்குரும் 

த்ரிலோகஞ் ஸ்ருஷ்டி கர்த்தாரம் விஸ்வப்ரமம் நமோஸ்துதே||

    ஸ்ரீ விஸ்வகர்ம ஸூக்தம்

ய இமா விஸ்வா புவநாநி ஜுஹ்வத்                                                  ருஷி ர்ஹோதா நிஷஸாதா பிதாந:|                                                                 ஸ ஆஸிஷா த்ரவிண மிச்ச மாந                                                  பரமச்சதோ வர ஆவிவேச ||
விஸ்வகர்மா மனஸா யத்விஹாயா                                                                                             தாதா விதாதா பரமோத ஸந்த்ருக் ||                                                 தேஷா மிஷ்டாநி ஸமிஷா மதந்தி                                                                                  யத்ர ஸப்தரிஷீந் பர ஏக மாஹு: ||
யோ ந: பிதா ஜநிதா யோ விதாதா                                              யோநஸ் ஸதா அப்யாஸ ஜ்ஜஜாந |                                                     யோ தேவாநாம் நாமதா ஏக ஏவதகும்                                                        ஸம்ப்ரச்நம் புவநா யந்த்யந்யா ||
த ஆயஜந்த த்ரவிணகும் ஸமஸ்மா                                                    ருஷய: பூர்வே ஜரிதாரோ ந பூநா ||                                                            அ ஸுர்தா ஸ்ஹுர்தா ரஜஸோ விமாநே                                               யே பூதாநி ஸமக்ருண் வந்நிமாநி ||
ந தம் விதாத ய இதம் ஜஜாநாந்ய                                                                                  த்யுஷ்மாக மந்த்ரம் பவாதி |                                                      நீஹாரேண ப்ராவ்ருதா ஜல்ப்யாசாஸு                                             த்ருப உக்தஸாஸ ச்சரந்தி ||   
பரோ திவா பர ஏநா ப்ருதிவ்யா                                                           பரோ தேவேபி ரஸுரை ர்குஹாயத் |                                                       கக் கஸ் வித்கர்பம் ப்ரதமம் தத்ர ஆபோ                                            யத்ர தேவா ஸ்ஸமகச்சந்த விஸ்வே ||
விஸ்வகர்மாஹ்ய ஜநிஷ்ட தேவ                                                       ஆதித் கந்தர்வோ அபவ த்விதீய: |                                                  த்ருதீய: பிதா சுநிதௌ ஷதீநாம்                                                     அபாம் கர்பம் வ்யததாத் புருத்ரா ||
விஸ்வதசக்ஷு ருத விஸ்வதோ முகோ                                    விஸ்வதோ ஹஸ்த உத விஸ்வ தஸ்பாத் |                                            ஸம் பாஹுப்யாம் நமதி ஸம்பதத்ரைர்                         த்யாவாப்ருதிவீ ஜநயம் தேவ ஏக: ||
கிக்கும் ஸ்விதாஸீ ததீஷ்டாந மாரம்பநம்                                        கதமத் ஸ்வித்கி மாஸீத் யதி பூமிம் ஜநயந் |                         விஸ்வகர்மா வித்யா மௌர்ணோ                                             ந்மஹிநா விஸ்வ சக்ஷா: ||
யா தே தாமாநி பரமாணி யாவமா                                                          யா மத்யமா விஸ்வகர்மந்து தேமா |                                                சிக்ஷா ஸகிப்யோ ஹவிஷிஸ்வதாவ                                             ஸ்வயம் யஜஸ்வ தநுவம் ஜுஷாண: ||
கிக்ம்ஸ்வித் வநம் க உ ஸ வ்ருக்ஷ ஆஸீ                                       த்யதோ த்யாவாப்ருதிவீ நிஷ்டதக்ஷு : |                               மநீஷிணோ மநஸா ப்ருச்சதே துதத்ய                                 தத்யதிஷ்டத் புவநாநி தாரயந் ||
விஸ்வகர்மண் ஹவிஷா வாவ்ருதாந                                          ஸ்வயம் யஜஸ்வ தநுவம் ஜுஷாண: |                                         முஹ்யம் த்வந்யே அபிதஸ்ஸபத்நா                                 இஹாஸ்மாகம் மகவா ஸூரி ரஸ்து ||
வாசஸ்பதிம் விஸ்வகர்மாண மூதயே                                   மநோயுஜம் வாஜே அத்யாஹுவேம |                                              ஸநோ நேதிஷ்டா ஹவநாநி ஜோஷதே                                       விஸ்வசம்பூ ரவஸே ஸாதுகர்மா ||
விஸ்வகர்மண் ஹவிஷா வர்தநேந                                                த்ராதாரா மிந்தர மக்ருணோ ரவத்யம் |                                                தஸ்மை விசஸ்ஸமந மந்த பூர்வீ                                                                                  ரய முக்ரோ விஹவ்யோ யதா ஸத் ||
ஸமுத்ராய வயுநாய ஸிந்தூநாம் பதயே நம:                              நநீநாகும் ஸர்வாஸாம் பித்ரே ஜுஹுதா                      விஸ்வகர்மணே விஸ்வாஹாமர்த்யம் ஹவி: ||